இந்தியாவில் சமீப காலமாகவே கிரிப்டோகரன்சிகள் மீதான ஆர்வம் என்பது மிகப்பெரிய அளவில் இருந்து வருகின்றது. ஆர்வம் மட்டும் அல்ல கணிசமான முதலீடுகளையும் இந்தியர்கள் செய்துள்ளனர் எனலாம்.
Recommended Video

எனினும் பட்ஜெட்டுக்கு முன்பு வரையில் கூட கிரிப்டோகரன்சி குறித்தான தெளிவில்லாத நிலையே இருந்து வந்தது.
குறிப்பாக பல்வேறு அண்டை நாடுகளும் கிரிப்டோகரன்சிகளுக்கு ஆதரவு தெரிவித்து வந்த நிலையில், இந்தியா மெளனம் காத்து வந்தது. மேலும் கிரிப்டோ மசோதா தாக்கல் செய்யபடலாம் என்ற நிலையில், அது எந்த மாதிரியான தாக்கத்தினை ஏற்படுத்தும். கிரிப்டோகரன்சிகள் இந்தியாவில் நிரந்தரமாக அனுமதிக்கப்படுமா? அல்லது தடை செய்யப்படுமா? என்ற சந்தேகம் இருந்து வந்தது.
பட்ஜெட்டில் அறிவிக்கலாம்
இதற்கிடையில் சமீபத்தில் ரிசர்வ் வங்கியின் மூலம் இந்தியாவில் சொந்தமாக ஒரு டிஜிட்டல் கரன்சி உருவாக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரையில் இது குறித்த முக்கிய அறிவிப்புகள் ஏதும் வராத நிலையில், பட்ஜெட்டில் அறிவிக்கப்படலாம் என்ற மிக முக்கிய எதிர்பார்ப்பு இருந்து வந்தது.
ரிசர்வ் வங்கி மூலம் டிஜிட்டல் கரன்சி
இந்த நிலையில் கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக, ரிசர்வ் வங்கி மூலம் டிஜிட்டல் ரூபாயானது அறிமுகம் செய்யப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த டிஜிட்டல் கரன்சியானது, டிஜிட்டல் பொருளாதாரத்தினை ஊக்குவிப்பதோடு, மலிவான நாணய மேலாண்மை அமைப்புக்கு வழிவகுக்கும் என நம்பப்படுகின்றது.
பிளாக் செயின் தொழில் நுட்பம்
பிளாக்செயின் மற்றும் பிற தொழில் நுட்பங்களை பயன்படுத்தி இந்த டிஜிட்டல் கரன்சியானது உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்களை மேற்கொண்டு முதலீடு செய்ய ஊக்குவிக்கலாம். எனினும் அரசு இதற்கு கணிசமான வரியையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் அரசுக்கும் வருமானம் கிடைக்கும் என பெரிதும் நம்பப்படுகின்றது.
ஆய்வறிக்கையில் தகவல் இல்லை
சமீப காலமாக கிரிப்டோகரன்சி மீதான ஆர்வம் பெருகி வரும் நிலையில், இது குறித்தான ஆய்வுகள் இன்னும் தேவைப்படும் என சமீபத்தில் நிதியமைச்சர் மக்களவையில் கூறியிருந்தார். இதற்கிடையில் இது குறித்த எந்தவொரு அறிக்கையும் பொருளாதார ஆய்வறிக்கையில் தாக்கல் செய்யப்படவில்லை. ஆக பட்ஜெட்டில் இது குறித்தான அறிவிப்பு இருக்குமா என்ற வருத்தமும் கிரிப்டோ முதலீட்டாளர்கள் மத்தியில் இருந்து வந்தது.
பாதுகாப்பு
இந்த நிலையில் பட்ஜெட்டில் இப்படி ஒரு அறிவிப்பு வந்துள்ளது மிக நல்ல விஷயமாக பார்க்கப்படுகின்றது. ரிசர்வ் வங்கியே இப்படி டிஜிட்டல் கரன்சியினை அறிமுகம் செய்வது, முதலீட்டாளர்களுக்கு மிக பாதுகாப்பானதாக அமையும். அதோடு இணைய பரிவர்த்தனைகளும் பெருகும் என்பது மறுக்க முடியாத உண்மையே.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications