பட்ஜெட் 2023ல் பெண்களுக்கு என அறிவிக்கப்பட்ட ஒரு திட்டம் தான் பெண்களுக்கான மகிளா சம்மன் சேமிப்பு பத்திரம்.
இந்த திட்டத்தின் மூலம் பெண் மற்றும் பெண் குழந்தைகள் பெயரிலும் சேமித்துக் கொள்ளலாம். இதில் 2 லட்சம் ரூபாய் வரையில் சேமித்து கொள்ளலாம். இந்த திட்டத்திற்கு வட்டி விகிதமானது 7.5% ஆகும்.
இதில் சந்தை அபாயம் என்பது இல்லாமல் நிரந்தர வருமானம் தரும் ஒரு திட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கான திட்டம்
பெண்கள் அல்லது பெண் குழந்தைகளில் பெயரில் சேமிக்கப்படும் இந்த திட்டத்திற்கு, வட்டி விகிதம் என்பது மற்ற சேமிப்பு திட்டங்களை காட்டிலும் அதிகம்.
எனினும் இந்த திட்டம் 2025 வரையில் மட்டுமே செயல்பாட்டில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இடையில் பகுதியளவு தொகையை எடுக்கும் சலுகையும் உண்டு.
குறுகிய காலத்தில் பயனுள்ள திட்டம்
இது வேலைக்கு செல்லும் பெண்கள், கல்வி கற்கும் பெண்களுக்கு உயர்கல்விக்கான பெற்றோர் செய்து வைக்கலாம். இது குறுகிய காலத்திலேயே பயனுள்ள ஒன்றாக இருக்கும் எனலாம். இந்த திட்டத்தில் மார்ச் 2025 வரையில் பயனுள்ளதாக இருக்கும். இதனை அஞ்சலகம் மூலம் பெண்கள் பெற முடியும்.
சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம்
ஏற்கனவே பெண்களுக்கு என பிரத்யேகமான திட்டமாக சுகன்யா சம்ரிதி திட்டம் உள்ளது. எனினும் இது முதிர்வு காலம் அதிகம். இதில் வட்டி விகிதம் 7.6% ஆகும். இருப்பினும் இந்த திட்டம் நீண்டகால திட்டம் என்பதால், அனைவருக்கும் பொருந்த வாய்ப்பில்லை. அதேபோல இந்த திட்டத்தில் ஆண்டுக்கு அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாய் வரையில் முதலீடு செய்து கொள்ளலாம். இதன் முதிர்வு காலம் 21 ஆண்டுகளாகும். இந்த திட்டத்தில் பெண் குழந்தை 18% வயதிற்கு மேல் முதிர்வடையும்போது தானாகவே முடியும். ஆக மகிளா சம்மன் சேமிப்பு பத்திரம் குறுகிய காலத்திற்கு ஏற்ற ஒன்றாக இருக்கும்.
மூத்த குடிமக்களுக்கு சேமிப்பு திட்டம்
சிறு சேமிப்பு திட்டமான இதில் மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு பத்திரத்தில் 15 லட்சம் ரூபாய் வரையில் டெபாசிட் செய்து கொள்ளலாம். இதில் அதிகபட்சமாக 30 லட்சம் ரூபாய் வரையில் முதலீடு செய்து கொள்ளலாம்.
மாதாந்திர வருவாய் திட்டம்
அஞ்சலகத்தின் மாதாந்திர வருவாய் திட்டத்தில் அதிகபட்சம் 9 லட்சம் ரூபாய் அதிகபட்சமாக இருந்த திட்டத்தினை, தற்போது 15 லட்சம் ரூபாய் வரையில் உயர்த்தியுள்ளார்.
முன்னதாக ஒரு தனிநபர் இந்த திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 1,000 ரூபாய் முதல் 4.5 லட்சம் வரை டெபாசிட் செய்து கொள்ளலாம். இதனை கூட்டு கணக்காகவும் தொடங்கிக் கொள்ளலாம். இந்த திட்டத்தினை தனிநபர் அல்லது கூட்டு சேமிப்பு திட்டமாகவும் தொடங்கிக் கொள்ள முடியும். கூட்டு சேமிப்பு திட்டத்தில் அதிகபட்சமாக 9 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்ய முடியும். ஆனால் இந்த திட்டத்தில் தற்போது 15 லட்சம் ரூபாய் வரையில் முதலீடு செய்து கொள்ளலாம்.
யாரெல்லாம் முதலீடு?
இதனை தனி நபராகவும், கூட்டாகவும் சேர்ந்து முதலீடு செய்யலாம். இதனை குழந்தைகள் பெயரில் பாதுகாவலர் துணையுடன் தொடங்கிக் கொள்ளலாம். 10 வயதிற்கு மேலான குழந்தைகள் அவர்களாகவே இந்த கணக்கினை நிர்வகித்து கொள்ள முடியும்.
முதிர்வு காலம்
இந்த மாதாந்திர வருமான திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகளாகும். இதனை முதிர்வுகாலம் முடிந்த பின்னரும் நீட்டித்துக் கொள்ளலாம். இது வயதானவர்களுக்கு மாதாந்திர வருமானமாக இருப்பதால், நிதி ரீதியாக வயதானவர்கள் யாரையும் சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை.
வட்டி எவ்வளவு?
அஞ்சலகத்தின் இந்த மாத வருவாய் திட்டத்திற்கு தற்போதைய வட்டி விகிதம் ஆண்டுக்கு 7.1% என்ற விகிதத்தில் உள்ளது. இதில் கூட்டு வட்டி கிடையாது. சிம்பிள் (Simple interest ) வட்டி தான். நீங்கள் அஞ்சலக மாதாந்திர வருவாய் திட்டத்தினை தொடங்கிய தேதியிலிருந்து, ஒரு மாதம் நிறைவு பெற்ற பிறகு வட்டி வழங்க ஆரம்பிக்கப்படும்.
இடையில் முடித்துக் கொள்ளலாமா?
இதன் முதிர்வு காலம் 5 ஆண்டுகளாகும். எனினும் இடையில் அதாவது 1 ஆண்டு முதல் 3 ஆண்டுகள் வரை மூடப்பட்டால் 2% வரை தொகை கழிக்கப்படும்.
மூன்று ஆண்டுகளுக்கு பிறகு எனில் 1% கழிக்கப்படும். அஞ்சலத்தின் இந்த சேமிப்பு திட்டத்தில் இணைய நீங்கள் அஞ்சலக சேமிப்பு கணக்கினை வைத்திருக்க வேண்டும்.
நாமினி வசதி உண்டா?
அஞ்சலகத்தின் இந்த திட்டத்தில் நாமினி வசதி உண்டு. ஆக உங்களுக்கு பிறகு உங்கள் குடும்பத்தினர் இந்த சலுகையினை பெறுமாறு செய்து கொள்ளலாம். அதேபோல உங்களது முதலீட்டுக்கு கிடைக்கும் வட்டி வருமானமாக கருதப்பட்டு, அதற்கு நீங்கள் வரி செலுத்த வேண்டியிருக்கும்.
More From GoodReturns

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!



Click it and Unblock the Notifications