2022-23 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்ய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தயாரான நிலையில், நிதியமைச்சருக்கு முன்று 3 முக்கியச் சவால்கள் உள்ளது இதை எப்படிச் சமாளிக்கப் போகிறார் என்பதில் தான் இந்தப் பட்ஜெட் அறிக்கையின் வெற்றி உள்ளது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 4வது முறையாகத் தாக்கல் செய்யும் இந்தப் பட்ஜெட் அறிக்கையில் பணவீக்கம், வேவைாய்ப்பு, நிதி நெருக்கடி ஆகிய 3 பிரச்சனைகள் உள்ளது.
இந்த 3 பிரச்சனைகளை சமாளிக்கும் வகையில் அறிவிப்புகள் இருந்தால் மட்டுமே நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும் அதேநேரத்தில் சிறப்பான பட்ஜெட் அறிக்கையாகவும் இருக்கும்.
பணவீக்கம்
கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்து பணவீக்க பாதிப்புகளை எதிர்கொண்டு வரும் நிலையில், மீண்டும் புதிய பணவீக்க பாதிப்புகள் வல்லரசு நாடுகள் முதல் வளரும் நாடுகள் வரையில் உருவாகியுள்ளது. இதில் இந்தியப் பொருளாதாரமும் பாதிக்க உள்ளது.
கச்சா எண்ணெய் விலை
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 90 டாலருக்கும் அதிகமாக இருக்கும் நிலையில், இந்தியா அதிகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதியை நம்பியிருக்கும் காரணத்தால் 2022 - 23 ஆம் நிதியாண்டில் பணவீக்கம் பெரும் சுமையாக இருக்கும் எனப் பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
நிதிப் பற்றாக்குறை
இந்தியாவில் அதிகரித்து வரும் பணவீக்கம், உலக நாடுகள் உயர்த்தி வரும் வட்டி விகிதம் ஆகியவற்றின் மூலம் மத்திய அரசு பட்ஜெட் பற்றாக்குறை 200 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இந்த மாபெரும் நிதி பற்றாக்குறையை மத்திய நிதியமைச்சர் எப்படிச் சமாளிக்கப்போகிறார். மேலும் இந்தியாவில் டெபிட் - ஜிடிபி அளவீடு மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
மத்திய அரசின் திட்டம்
இந்த நிதி பற்றாக்குறையைச் சமாளிக்க மத்திய அரசு பல அரசு சொத்துக்களை குத்தகை மற்றும் விற்பனை செய்வதன் மூலம் கூடுதல் நிதி ஆதாரத்தைப் பெற முடியும். இக்கூடுதல் நிதி ஆதாரத்தைச் சரியான திட்டத்தில் முதலீடு செய்வது மூலம் வேலைவாய்ப்பு, வர்த்தகம், பொருளாதாரம் ஆகியவற்றை உருவாக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே நேரத்தில் பல சர்வதேச சந்தை சவால்களும் உள்ளது.
வேலைவாய்ப்புகள்
கடந்த சில வருடத்தில் இந்திய சந்தையில் உருவாக்க முடியாத, காணாமல் போன நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான வேலைவாய்ப்புகளைப் போதுமான அளவிற்கு உருவாக்க முடியாத காரணத்தால் இந்திய மக்களின் வருமானம் பெரிய அளவில் பாதித்துள்ளது.
200 மில்லியன் வேலைவாய்ப்புகள்
இந்தியாவின் பொருளாதாரம் மோடி அரசின் இலக்கான 5 டிரில்லியன் டாலர் அளவை எட்ட வேண்டும் என்றால் கட்டாயம் 200 மில்லியன் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும். இந்த 3 முக்கியமான சவால்களை எப்படி மோடி அரசு சமாளிக்கப் போகிறது..? இதற்கான அறிவிப்புப் பட்ஜெட் 2022-23ல் இருக்குமா..?


Click it and Unblock the Notifications