பிரதமர் மோடி தலைமையிலான அரசு பொருளாதார வளர்ச்சியினை ஊக்குவிக்கவும், உற்பத்தியினை ஊக்குவிக்கவும் பல்வேறு ஊக்குவிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.
குறிப்பாக பிஎல்ஐ திட்டம் மூலம் தனியார் முதலீடுகளை ஊக்குவித்து வருகின்றது. இதன் மூலம் ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்தினையும் செயல்படுத்தி வருகின்றது.
இந்த ஆத்ம நிர்பார் திட்டமானது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பதோடு, தொழில் முனைவோரையும் ஊக்குவித்து வருகின்றது.
ஆத்ம நிர்பார் திட்டத்தின் நோக்கம்
கொரோனா பெருந்தொற்றின் மத்தியிலும் இந்திய பொருளாதாரம் விரைவில் மீண்டு வந்துள்ளதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாக எனலாம்.
ஆத்ம நிர்பார் திட்டம் என்பது கடந்த 2020ம் ஆண்டில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு அறிவித்தது,. இது ஒரு விரிவான தொலை நோக்குடன் உருவாக்கப்பட்ட ஒரு திட்டமாகும். இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமே பொருளாதாரம், உள்கட்டமைப்பு, தொழில் நுட்ப தேவைகளை ஊக்குவிப்பதே. இது ஜனநாயகத்தின் வளர்ச்சியையும் ஊக்கப்படுத்த உதவும் .
தற்சார்பு நிலையை எட்ட உதவும்
இந்தியா தற்சார்பு நிலையை எட்டுவதற்கு இந்த திட்டம் மிக உறுதுணையாக இருக்கும். ஆரம்பத்தில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டபோதே தன்னிறைவு பெற்ற இந்தியாவினை உருவாக்க கொண்டு வரப்பட்டது, ஆக அரசின் இந்த திட்டங்கள் வலுவான பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்குவிப்பதாக அமையும்.
வேலை வாய்ப்புகள் பெருகும்
மேற்கண்ட அரசின் திட்டங்களின் மூலம் தொழிற்துறை வளர்ச்சியானது மேம்படும். இது நிதியமைச்சர் கூறியது போல 60 லட்சம் வேலைகளை மட்டும் அல்ல, வளர்ச்சி இன்னும் அதிகரிக்கும்போது இன்னும் வேலை விகிதமானது அதிகரிக்கும். இதன் மூலம் தனி நபர் வருமானம் அதிகரிக்கும். இது மேற்கொண்டு நுகர்வினை அதிகரிக்க உதவு, இதன் மூலம் தேவை அதிகரிக்கும். இது உற்பத்தி விகிதத்தினை ஊக்குவிக்க பயன்படும். மொத்தத்தில் இந்தியாவினை சர்வதேச நாடுகளின் மத்தியில் நிலை நிறுத்த இந்த திட்டங்கள் கைகொடுக்கும்.
எட்டக்கூடிய இலக்கு தான்
குறிப்பாக பிஎல்ஐ திட்டத்தின் மூலம் பல துறைகளை ஊக்குவித்து, தனியார் முதலீடுகளை ஊக்குவித்து வருகின்றது. இதன் மூலம் உள்நாட்டு நிறுவனங்கள் மட்டும் அல்ல, வெளிநாட்டு நிறுவனங்களும் இந்தியாவில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றன. ஆக அடுத்த சில ஆண்டுகளில் இந்திய அரசின் வேலை வாய்ப்பு இலக்கானது நிச்சயம் எட்டப்படகூடிய ஒன்றே.


Click it and Unblock the Notifications