இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் சில வகை பொருட்களுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது. சில பொருட்களுக்கு வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதில் சுரங்கத்தில் வெட்டி எடுக்கப்படும் வைரத்தின் மீதான சுங்க வரியானது 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த வரி விகிதமானது தற்போது 7.5% ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேபோல இமிடேஷன் நகைக்களுக்கான வரியும் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் தான் ஜுவல்லரி பங்குகள் நல்ல ஏற்றத்தில் காணப்படுகின்றன. இது முதலீட்டாளார்களுக்கு சாதகமான ஒரு விஷயமாக மாறியுள்ளது
டைட்டன் நிறுவனம்
இதற்கிடையில் தான் டைட்டன் நிறுவனத்தின் பங்கு விலையானது 3.03% அதிகரித்து, 2431.80 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் இன்றைய உச்ச விலை 2442.10 ரூபாயாகும். இதன் இன்றைய குறைந்தபட்ச விலையானது 2358.95 ரூபாயாகவும் உள்ளது. இதன் 52 வார உச்ச விலை 2687.25 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலையானது 1396 ரூபாயாகும். இந்த பங்கின் விலையானது 5 நாள், 100 நாள், 200 நாள் மூவிங்க் ஆவரேஜ்ஜுக்கு மேலாகவும், 20 நாள், 50 நாள் மூவிங்க் ஆவரேஜ்ஜுக்கு கீழாகவும் வர்த்தகமாகி வருகின்றது.
பிசி ஜுவல்லரி
பிசி ஜுவல்லர் நிறுவனத்தின் பங்கு விலையானது சற்று அதிகரித்து 26.40 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் இன்றைய உச்ச விலை 27 ரூபாயாகும். இன்றைய குறைந்தபட்ச விலை 26.10 ரூபாயாகும். இதன் 52 வார உச்ச விலை 32.95 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 19.90 ரூபாயாகும்.
இந்த பங்கின் விலையும் 5 நாள், 50 நாள், 100 நாள், 200 நாள் மூவிங்க் ஆவரேஜ்ஜுக்கு மேலாகவும், 20 நாள் மூவிங்க் ஆவரேஜ்ஜுக்கு கீழாகவும் வர்த்தகமாகி வருகின்றது.
திரிபுவன் தாஸ் பீம்ஜி ஜவேரி (Tribhovandas Bhimji Zaveri)
திரிபுவன் தாஸ் பீம்ஜி ஜவேரி பங்கின் விலையானது சற்று அதிகரித்து, 82.20 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் இன்றைய உச்ச விலை 85.40 ரூபாயாகும். இதன் இன்றைய குறைந்தபட்ச விலை 81.10 ரூபாயாகும். இதன்
52 வார உச்ச விலை 104.40 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 58.20 ரூபாயாகும்.
இந்த பங்கின் விலையும் 20 நாள், 50 நாள், 100 நாள், 200 நாள் மூவிங்க் ஆவரேஜ்ஜுக்கும் மேலாகவும், 5 நாள் மூவிங்க் ஆவரேஜ்ஜுக்கு கீழாகவும் வர்த்தகமாகி வருகின்றது.
ஊக்குவிக்கும்
மத்திய அரசின் இந்த நடவடிக்கையானது ஜுவல்லரி ஏற்றுமதியினை ஊக்குவிக்க பயன்படும். மேலும் மேற்கொண்டு வாடிக்கையாளர்களையும் ஈர்க்க உதவும். மொத்தத்தில் வைர ஆர்வலர்களுக்கு மிக நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது. இத்துறையின் வளர்ச்சியினையும் ஊக்குவிக்க பயன்படும்.


Click it and Unblock the Notifications