2022-23 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் நிலையில், இந்தப் பட்ஜெட் அறிக்கையில் அமெரிக்க நிறுவனங்களுக்குச் சில முக்கியமான விஷயங்கள் கட்டாயம் தேவை என அடம்பிடித்து வருகின்றனர்.
இந்திய பொருளாதாரம் டாப்பு
கொகோரோ, ஒமிக்ரான் தொற்றால் இந்திய பொருளாதாரம் பாதிக்கப்பட்டாலும், உலகில் வேகமாக வளர்ச்சி அடையும் நாடுகளில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. இதனால் உலக நாடுகள் இந்தியாவில் முதலீடு செய்ய மிகவும் ஆர்வமாக உள்ளது.
சீன முதலீடுகள்
மேலும் இந்தியாவில் சீன முதலீடுகளுக்குப் பல்வேறு தடைகளை விதித்துள்ள நிலையில் கடந்த 2 வருடத்தில் இந்திய முதலீட்டுச் சந்தையில் அமெரிக்கா மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் பெற்றுள்ளது.
அமெரிக்க நிறுவனங்கள்
இந்நிலையில் இந்தியாவில் தொடர்ந்து அதிகம் முதலீடு செய்யச் சில முக்கியமான தளர்வுகள் வேண்டும் என அமெரிக்க நிறுவனங்கள் கோரிக்கை வைத்துள்ளது. இதற்கான பதிலும், அறிவிப்பும் இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் அறிக்கையில் இருக்குமா என்று எதிர்பார்த்து காத்திருக்கிறது.
வரி சமநிலை
இந்திய நிறுவனங்கள் தற்போது அமெரிக்க நிறுவனங்களுக்கு இணையாக வளர்ச்சி அடைந்துள்ள நிலையிலும், வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய உள்ள நிலையிலும், மத்திய அரசு இந்திய வர்த்தகச் சந்தையில் இந்தியா மற்றும் அமெரிக்கா நிறுவனங்களுக்கு மத்தியில் வரி சமநிலை தேவை எனக் கோரிக்கை வைத்துள்ளது.
ஈகாமர்ஸ்
உதாரணமாக இந்தியாவில் இருக்கும் வெளிநாட்டு ஈகாமர்ஸ் நிறுவனங்கள் மீது மத்திய அரசு equalisation levy வரி விதித்துள்ளது. இதை உடனடியாக நீக்க வேண்டும் என்றும், இதற்கான அறிவிப்பை பட்ஜெட்டில் வெளியிட வேண்டும் எனவும் USISPF அமைப்பின் தலைவர் முகேஷ் ஆகி தெரிவித்துள்ளார்.
தொழிலாளர் சட்டங்கள்
அமெரிக்க நிறுவனங்கள், இந்தியாவின் உள்கட்டமைப்பில் அதிகளவிலான முதலீட்டைச் செய்ய எதிர்பார்க்கின்றனர் என்று அகி கூறினார். இதற்காகத் தொழிலாளர் சட்டங்கள் மற்றும் நிலம் கையகப்படுத்தும் செயல்முறையை நெறிப்படுத்த வேண்டும் அமெரிக்க நிறுவனங்கள் விரும்புவதாக அறிவித்துள்ளது.
வெளிப்படைத்தன்மை
மேலும் இந்தியாவில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனங்கள் இந்திய வர்த்தக அமைப்பில் அதிகப்படியான முன் கணிப்பு, வெளிப்படைத்தன்மை மற்றும் சிறப்பான செயல்முறையை அதிகம் எதிர்பார்க்கின்றனர். இதை மத்திய அரசின் கதி சக்தி சாத்தியப்படுத்தும் எனக் கணிக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications