பிப்ரவரி 1ஆம் தேதி காலை 11 மணிக்கு 2022-23ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார்.
கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று மூலம் தனிநபர் முதல் நிறுவனங்கள் வரையில் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டு வரும் நிலையில் இந்தப் பட்ஜெட் அனைத்து தரப்பினருக்கும் மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்யும் முன்பு மத்திய நிதியமைச்சர் தலைமையில் அல்வா தயாரிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது, இது எதற்காக..? ஏன் ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் இது நடத்தப்படுகிறது..? இந்த நிகழ்ச்சியின் முக்கியத்துவம் என்ன..?
அல்லா தயாரிப்பு நிகழ்ச்சி
மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்குச் சில நாட்களுக்கு முன்பு ஹல்வா விழா நடைபெறுவது வழக்கம். இது பட்ஜெட் செயல்முறையின் இறுதிக் கட்டங்கள் அல்லது கடைசிக் கட்டத்தை அடைவதைக் குறிக்கிறது.
நிதி அமைச்சகம்
வழக்கமாக, டெல்லியில் மத்திய நிதி அமைச்சகத்தின் தலைமையகத்தின் வடக்குப் பகுதியில் அல்வா தயாரித்து நிதியமைச்சகம் மற்றும் பட்ஜெட் உருவாக்கும் பணியில் ஈடுபடும் அனைவருக்கும் அளிக்கப்படுவது வழக்கம்.
முக்கிய அதிகாரிகள்
இந்த அல்வா தயாரிக்கும் விழாவில் நிதியமைச்சர் மற்றும் நிதி அமைச்சகத்துடன் பணிபுரியும் மற்ற உயர்மட்ட பிரதிநிதிகள் எனப் பட்ஜெட் தயாரிப்பில் ஈடுபட்ட அனைத்து உயர் மட்ட அதிகாரிகளும் கலந்து கொள்வது வழக்கம்.
பட்ஜெட் அறிக்கை அச்சிடும் பணி
மேலும் இந்த அல்வா தயாரிக்கும் நிகழ்ச்சிக்குப் பின்பு தான் நாடாளுமன்றத்தில் இருக்கும் பிரின்ட்டிங் பிரஸ்-ல் பட்ஜெட் அறிக்கையை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்குவதற்காக அச்சிடப்படும். இந்த அச்சிடப்படும் பணியை அதிகப்படியான பாதுகாப்பு உடனும், ரகசியமாகவும் செய்யப்படுவது வழக்கம்.
ஒமிக்ரான் தொற்று
2021ல் அல்வா நிகழ்ச்சி மத்திய நிதியமைச்சர் தலைமையில் ஜனவரி 23ஆம் தேதி நடந்தது. இது கிட்டதட்ட பட்ஜெட் அறிவிக்க 9 நாட்களுக்கு முன்பாகச் செய்யப்பட்டது. இந்த ஆண்டு ஒமிக்ரான் தொற்றுக் காரணமாகப் பட்ஜெட் தயாரிப்புப் பணிகள் தாமதமானதால் அல்வா நிகழ்ச்சியும் தாமதமாகியுள்ளது.
பட்ஜெட் அறிக்கையின் மாற்றங்கள்
காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது ரயில்வே பட்ஜெட்-ஐ தனியாகத் தாக்கல் செய்து வந்த நிலையில் தற்போது பொதுப் பட்ஜெட் உடன் சேர்த்துத் தாக்கல் செய்யப்படுகிறது. இதேபோல் பிப்ரவரி மாதம் கடைசி நாளில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் அறிக்கை தற்போது பிப்ரவரி மாதத்தின் முதல் நாளே தாக்கல் செய்யப்படுகிறது.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications