இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் 2022-23ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்ய உள்ள நிலையில், இந்தியாவின் பெரும் பகுதி மக்கள் தொகைக்கு இந்தப் பட்ஜெட் அறிக்கையில் என்ன கிடைக்கும் என்பது தான் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.
நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தக வளர்ச்சிக்குப் பல அறிவிப்புகள் இருந்தாலும் தனிநபர் சார்ந்த அறிவிப்புகள் முதலீட்டுச் சந்தையில் மட்டும் இல்லாமல் மக்கள் மத்தியிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் மிடில் கிளாஸ் மக்களுக்கு இந்தப் பட்ஜெட் அறிக்கையில் என்னென்ன அறிவிப்புகள் இருக்கும்.
80சி பிரிவு
கடந்த ஒரு மாதமாக இந்தியா முழுவதும் 80சி பிரிவில் இந்திய அரசு அளிக்கும் வரி சலுகையை 2 மடங்கு வரையில் அதிகரிக்கும் எனக் கணித்து வரும் நிலையில், இதற்கு வாய்ப்புகள் குறைவு தான். மத்திய அரசு ஏற்கனவே அதிகளவிலான நிதி பற்றாக்குறையில் இருக்கும் நிலையில் பெரிய அளவிலான வரிச் சலுகை அறிவிக்க வாய்ப்புகள் மிகவும் குறைவு,
standard deduction உயர்வு
சாமானிய மற்றும் நடுத்தர மக்கள் கடந்த 2 வருடமாகக் கொரோனா மற்றும் ஒமிக்ரான் மூலம் பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் நிலையில், இப்பிரிவு மக்களுக்குச் சாதகமான அறிவிப்புகள் வெளியிட வேண்டியது கட்டாயம்.
இதன் மூலம் இந்தப் பட்ஜெட் அறிக்கையில் standard deduction பிரிவில் இந்திய அரசு அளிக்கும் 50000 ரூபாய் வரிச் சலுகையை 60000 - 70000 ரூபாயாக உயர்த்த அதிக வாய்ப்பு உள்ளது.
வொர்க் பர்ம் ஹோம்
இந்தப் பட்ஜெட் அறிக்கையில் வீட்டில் இருந்து பணியாற்றும் ஊழியர்களுக்குச் சாதகமாக அறிவிப்புகள் வெளியாகும். வீட்டில் இருந்து பணியாற்றும் ஊியர்களுக்குக் கொடுப்பனவு அல்லது வீட்டில் பணியாற்றும் போது செலவிடப்படும் தொகைக்கு வரிச் சலுகை ஆகியவற்றைக் கொடுக்க வாய்ப்புகள் உள்ளது.
அதாவது தனிப் பிரிவில் வீட்டில் இருந்து பணியாற்றும் ஊழியர்கள் செலவு செய்யும் தொகைக்கு வரிச் சலுகை அளிக்க வாய்ப்புகள் உண்டு.
வருமான வரி அளவு
இந்தப் பட்ஜெட் அறிக்கையில் வருமான வரிப் பலகையில் எவ்விதமான மாற்றமும் இருக்காது. ஏற்கனவே ஜிஎஸ்டி வரி விதிப்பில் பல மாற்றங்களைச் செய்ய ஜிஎஸ்டி கவுன்சில் காத்துக்கொண்டு இருக்கும் நிலையில், புதிய மாற்றங்கள் செய்ய வாய்ப்புகள் குறைவு.
வருமான வரியை குறைப்பதன் மூலம் மத்திய அரசுக்கு வரி வருமானம் பாதிக்கும், வருமான வரியை அதிகரிப்பதன் மூலம் 5 மாநில தேர்தலில் அதிகப்படியான எதிர்ப்புகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!



Click it and Unblock the Notifications