டெல்லி: பரப்பரப்பான சூழலுக்கும், பலத்த எதிர்பார்ப்புகளுக்கும் மத்தியில் மத்திய நிதியமைச்சர் தனது பட்ஜெட் உரையை வாசித்து வருகின்றார். இது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 5வது பட்ஜெட் ஆகும்.
இந்த பட்ஜெட்டில் நிலவி வரும் பணவீக்கம், விலை வாசி ஏற்றம், தானியங்கள், பல உணவு பொருட்கள், எரிபொருட்கள் என பலவற்றிற்கும் மானியம் குறைக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
குறிப்பாக கீழ்தட்டு மக்களுக்கு பெரிதும் பயன்படும் கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தினை நிறுத்தலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் மூலம் அரசுக்கு பெரும் தொகையானது மிச்சமாகலாம். இதனை அரசு உள்கட்டமைப்பு செலவினங்களுக்கு பயன்படுத்தலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
தொடர்ந்து தானியம் வழங்கப்படும்
எனினும் சாமானிய மக்களுக்கும் பெரும் ஆறுதலை அளிக்கும் விதமாக, அடுத்த ஓராண்டுக்கு 80 கோடி குடும்பங்குகளுக்கு தானியங்கள் தொடர்ந்து வழங்கப்படும் என அறிவித்துள்ளது. நிலவி வரும் பணவீக்கத்தின் மத்தியில், இது மிகப்பெரிய ஆதாரமாக அமையலாம்.
எதிர்பார்ப்பு
நடப்பு நிதியாண்டில் மத்திய அரசின் உணவு மானியம் 1.97 ட்ரில்லியனாக இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது நடப்பு ஆண்டில் 2.87 ட்ரில்லியனாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் தற்போதும் கொரோனாவுக்கு முந்தைய லெவலுடன் ஒப்பிடும்போது இரு மடங்கு அதிகமாகவே உள்ளது.
செலவு குறைக்கு முயற்சி
அரசின் இந்த மானிய குறைப்பானது அரசின் ஒட்டுமொத்த நிதி பற்றாக்குறையை குறைக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்டுள்ளது. செலவினங்களை குறைக்கும் விதமாக கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. எப்படியிருப்பினும் இதற்காக ஒரு திட்டத்தினை உருவாக்கி செயல்பட்டு வருகின்றது. இதன் மூலம் சுமார் 800 மில்லியன் மக்கள் பயனடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சாத்தியமா?
இந்த திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு மாதம் 5 கிலோ உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. இது கொரோனா காலகட்டத்தில் வீடுகளில் முடங்கியிருந்த மக்கள், பெரும் பலனடைந்தனர் எனலாம். இந்த நிலையில் இந்த திட்டம் இன்னும் ஒராண்டுக்கு நீட்டிக்க்கப்பட்டுள்ளது பலருக்கும் பலன் அளிப்பதாக இருக்கும். எனினும் நிதி ஒதுக்கீடு என்பது குறையும்பட்சத்தில் எந்த அளவுக்கு சாத்தியமான ஒன்று என்ற கேள்வியும் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications