Budget 2023: இது தேர்தல் பட்ஜெட் அல்ல.. ஒரு சமநிலையான பட்ஜெட்.. இலவசங்கள் கிடையாது..!

மத்திய பட்ஜெட் ஆனது பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிப்ரவரி 1 அன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், தொழில் துறையினர், வணிகர்கள், விவசாய சங்கத்தினர், அரசியல் தலைவர்கள், பொருளாதார நிபுணர்கள் பலரும் தங்களது கருத்துகளை கூறி வருகின்றனர்.

ஒரு தரப்பினர் இந்த பட்ஜெட்டில் பெரியளவு எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. இது பெருத்த ஏமாற்றத்தையே கொடுக்கிறது என கூறுகின்றனர்.

ஆனால் மற்றொரு ஒரு தரப்பு தனிநபர் வருமான வரியில் கொண்டு வந்துள்ள மாற்றம், இருக்கின்ற 157 மருத்துவக் கல்லூரிகளில் புதிய நர்சிங் கல்லூரிகள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு, மூலதனச் செலவினங்களுக்காக ஒதுக்கீடு அதிகரிப்பு, வட்டியில்லாக் கடன், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு அதிக முக்கியத்துவம் போன்ற பல ஆறுதல் விஷயங்கள் உள்ளன என சுட்டிக் காட்டுகின்றனர்.

கடன்  சுமை அதிகம்

கடன் சுமை அதிகம்

எனினும் தனிநபர் வருமான வரி மாற்றங்கள் புதிய முறைக்கு மட்டும்தான் பொருந்தும் என்பது, குறைந்தபட்ச பயனாளிகளுக்கு மட்டுமே பயனளிக்கும் வகையில் உள்ளது. ஆக இந்த சலுகையினை பழைய முறையிலும் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தொடர்ந்து கடந்த 5 ஆண்டுகளாகவே இந்தியாவின் கடன் சுமை என்பது ஏறுமுகமாகத் தான் உள்ளது. 5 ஆண்டுகளுக்கு முன்பு, 2020ல் 1,00,18,120 கோடி ரூபாயாக இருந்தது. ஆனால் இது 2023 மார்ச் மாதம் 1,52,61,122 கோடி ரூபாயாக அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

நடுத்தர மக்கள் ஈர்க்கப்பட்டுள்ளனரா?

நடுத்தர மக்கள் ஈர்க்கப்பட்டுள்ளனரா?

ஆக மத்திய அரசு தாக்கல் செய்த இந்த பட்ஜெட் ஒன்றும் சாதனை பட்ஜெட் அல்ல. மூலதன செலவினங்களை அதிகரித்தல், வரிகளை குறைத்தல், நிதிப் பற்றாக்குறையை குறத்தல் போன்றவற்றால் இது சாதனையை எட்டியுள்ளது என கூறப்படுகின்றது.

ஆனால் வரி விலக்கு வரம்பை 5 லட்சம் ரூபாயில் இருந்து 7 லட்சம் ரூபாயாக உயர்த்தியதால், நடுத்தர வர்த்தகத்தினர் மத்திய அரசால் ஈர்க்கப்பட்டுள்ளனர், எனும் அளவுக்கு இந்த பட்ஜெட் இல்லை என்பதே உண்மை.

தேர்தல் பட்ஜெட் இல்லை

தேர்தல் பட்ஜெட் இல்லை

இந்த பட்ஜெட்டில் இலவசங்கள் இல்லை என்பது நல்ல ஒரு விஷயமாக பார்க்கப்பட்டாலும், இது தேர்தல் சமயத்தில் கைகொடுக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

பிஎம் கிசான் திட்டத்தில் எதுவும் மாற்றம் செய்யப்படவில்லை. இதனால் சலுகைகள் தொடரலாம் என்றாலும், அடிப்படையில் இதனால் எத்தனை பேர் பலன் அடைகின்றனர் என்பது பெரும் கேள்வியாக உள்ளது. ஆக இது தேர்தல் ரீதியிலான ஒரு பட்ஜெட் ஆக இல்லாமல், நிதி பற்றாக்குறைக்கு ஏற்ப ஒரு பட்ஜெட் ஆக மாறியுள்ளது எனலாம்.

நிதி பற்றாக்குறை குறைக்க திட்டம்

நிதி பற்றாக்குறை குறைக்க திட்டம்

பட்ஜெட் நிதி பற்றாக்குறையை 6.4%ல் இருந்து, 5.9% ஆக குறைத்துள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு 0.7% வீழ்ச்சியினை காட்டுகின்றது. இது மிக நல்ல விஷயம் என்றே கூறலாம். குறிப்பாக உலகளாவிய அளவில் நிலவி வரும் பதற்றமான நிலைக்கு மத்தியில் தேவையான ஒன்றாகவும் பார்க்கப்படுகிறது.

உற்சாகத்தினை ஏற்படுத்தவில்லை

உற்சாகத்தினை ஏற்படுத்தவில்லை

மொத்த வரி வருவாயானது 10.5% ஆக உயரும் என என கணிக்கப்பட்டுள்ளது. இது நாமினல் ஜிடிபிக்கு ஏற்ப உள்ளது. ஆக இந்த நிலை தொடர்ந்தால் வரி வருவாய் என்பது அதிகரிக்கும். இவ்வாறு அனைத்தும் திட்டமிட்டு சம நிலைப்படுத்தப்பட்ட ஒரு பட்ஜெட் ஆக இருந்தாலும், இது சந்தையில் பெரும் உற்சாகத்தினை ஏற்படுத்தவில்லை.

சென்செக்ஸ் 100 புள்ளிகளுக்கு மேல் இருந்தாலும், நிஃப்டி சரிவில் காணப்பட்டது. இது அதானி குழும பங்குகளின் தொடர் சரிவினால் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூலதன செலவு

மூலதன செலவு

மூலதன செலவில் கடந்த ஆண்டினை காட்டிலும் 33% அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், இதில் ரயில்வே துறைக்கு 48%மும், சாலைகள் துறைக்கு 24.4%மும் செலவு செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்த உள்கட்டமைப்பு செலவினங்கள் என்பது 10 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே மாநிலங்களுக்கு 1.3 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பசுமை பொருளாதாரத்திற்கான நிதி ஒதுக்கீடு

பசுமை பொருளாதாரத்திற்கான நிதி ஒதுக்கீடு

 

பசுமை பொருளாதாரத்திற்கு மாறுவதற்கான நிதி ஒதுக்கீடாக, 35,000 கோடி ரூபாயாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.5% ஆக இருக்கும். இதுவும் நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு உதவலாம்.

வங்கிகள் மற்றும் கார்ப்பரேட்களின் இருப்பு நிலை என்பது வலுவாக காணப்படுகின்றது. இதே காலகட்டத்தில் செயல்படாத சொத்துகள் விகிதம் என்பது குறைந்து காணப்படுகின்றது. ஆக இது தனியார் முதலீடுகளையும் ஊக்குவிக்க உதவும் எனலாம்.

தனியார்மயமாக்கல் முயற்சி இல்லை

தனியார்மயமாக்கல் முயற்சி இல்லை

தனியார் மயமாக்கல் முயற்சி என்பது சமீபத்திய ஆண்டுகளாகவே பெரும் ஏமாற்றத்தினை கொடுத்து வந்த நிலையில், நடப்பு ஆண்டில் அது குறித்து பட்ஜெட்டில் பெரிதாக எடுத்துக் கொள்ளப்படவில்லை. இதனை மிகப்பெரிய வருவாயை அதிகரிப்பதற்கான ஒரு பகுதியாகவும் அரசு கருதவில்லை.

தேர்தல் இலக்கு இது தான்

தேர்தல் இலக்கு இது தான்

கிராமப்புற மக்களை ஈர்க்கும் விதமாக ஜல் ஜீவன் மிஷன், பிரதமரின் ஆவாஸ் யோஜனா போன்ற திட்டங்களுக்கு தொடர்ந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆக இதன் மூலம் அரசு வீடு மற்றும் குடி நீர் என்பதை முக்கிய அம்சமாக பார்க்கிறது எனலாம்.

கொரோனா காலத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் தற்போது குறைந்துள்ள நிலையில், இலவச உணவு மானியம், உர மானியம் என பலவற்றின் செலவானது, அரசின் நிதி பற்றாக்குறையை சமாளிக்க உதவும் எனலாம். இதன் மூலம் வரி வருவாயும் மிச்சமாகும்.

வரி குறைப்பு நல்ல விஷயம்

வரி குறைப்பு நல்ல விஷயம்

இதற்கிடையில் தான் சில பொருட்களுக்கு வரியை குறைத்துள்ளது. இதன் மூலம் மக்களுக்கு குறைவான விலையில் தேவையான பொருட்கள் கிடைக்கும் எனலாம். அத்தோடு வருமான வரி தாக்கலை பொறுத்த வரையில் அனைவரும் புதிய வருமான வரி தாக்கலுக்கு மாற வேண்டும் என அரசு நினைக்கிறது. ஆக இப்படி ஒரு சலுகை கொடுக்கும்போது, இது அவர்களை புதிய திட்டத்திற்கு மாற உந்துதல் அளிக்கலாம். இதற்கிடையில் தான் வரி சலுகையையும் அளிக்கப்பட்டுதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.

ஏன் சந்தை தடுமாற்றம்

ஏன் சந்தை தடுமாற்றம்

அதெல்லாம் சரி, இப்படி பார்த்து பார்த்து செய்யப்பட்ட இந்த பட்ஜெட்டால் ஏன் சந்தை தடுமாற்றத்தில் காணப்பட்டது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

பட்ஜெட்டில் நீண்டகால நிதி நிலைமை என்பது கவலையளிக்கும் விஷயமாகவே உள்ளது. கடன் விகிதம் என்பது அதிகரிக்கும் சூழலே உள்ளது. ஆக நிதி பற்றாக்குறையானது தொடர்ந்து அதிகரித்து காணப்படும் நிலை தான் உள்ளது. இது அடுத்த ஆண்டில் 2.3% ஆக இருக்கலாம் என்றும் மதிப்பிடப்பட்டிருந்தாலும், உலகளாவிய நிதி நிலைமை என்பது மந்த நிலையில் உள்ளது.

அன்னிய முதலீடுகள் வெளியேற்றம்

அன்னிய முதலீடுகள் வெளியேற்றம்

ஆக கடந்த 2022ல் இந்தியாவில் இருந்து அன்னிய முதலீடுகள் வெளியேறியதற்கும் இதுவே முக்கிய காரணம். ஆக பட்ஜெட்டில் இதுவும் கவனிக்க வேண்டிய விஷயமாக இருந்தது. இதற்கிடையில் தான் பங்கு சந்தையானது குழப்பத்தில் முடிவடைந்தது.

வட்டி செலவு

வட்டி செலவு

வருவாய் செலவினம் என்பது அடுத்த ஆண்டிலும் பெரியளவில் மாற்றம் காணாது என்று கணிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் வட்டி செலவுகள் 14% அதிகரிக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. பணவீக்கம் என்பது 4.5% ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இதுவும் நிதி அழுத்தத்தினை ஏற்படுத்தலாம்.

வேலையின்மை பிரச்சனை அவ்வளவாக இல்லை

வேலையின்மை பிரச்சனை அவ்வளவாக இல்லை

அரசின் நம்பிக்கைக்கு மத்தியில் கடந்த இரு ஆண்டுகளாகவே முதலீடுகள் அதிகரித்த நிலையில், இது வேலையின்மையில் தாக்கத்தினை பெரியளவில் ஏற்படுத்தவில்லை. எனினும் தொழில் நுட்ப துறையில் உலகம் முழுக்க இருந்து வரும் விஷயமாக வேலையின்மை இருந்து வருகின்றது. இதே பசுமை எனர்ஜி, சோலார் என்பது பெரியளவில் வேலை வாய்ப்பினை ஊக்குவிக்காது எனினும், பி எல் ஐ போன்ற திட்டங்களில் உற்பத்தி துறையும் மேம்படத் தொடங்கியுள்ளது. ஆக வேலையை பொறுத்தவரையில் இது சாதகமானதொரு விஷயமாக பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+