budget 2023: இந்தியாவின் உற்பத்தியை ஊக்குவிக்கவும், நவீன தொழில்நுட்பத்தைக் மேம்படுத்தவும், உற்பத்தி சாா்ந்த ஊக்குவிப்புத் திட்டத்தை (PLI) மத்திய அரசு அறிமுகம் செய்தது. தற்போது இந்த திட்டத்தின் கீழ் கூடுதல் வேலைவாய்ப்பு உருவாக்கும் துறைகளை கொண்டு வருவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
இந்த நிலையில் பட்ஜெட்டில் இது குறித்த அறிவிப்புகள் குறித்து பெருத்த எதிர்பார்ப்பு உள்ளது.
பிஎல்ஐ திட்டம்
குறிப்பாக பொம்மைகள், சைக்கிள்கள், தோல் மற்றும் காலணி போன்ற வேலைவாய்ப்பு சார்ந்த துறைகளுக்கும் பிஎல்ஐ திட்டம் அறிவிக்கப்படலாம்.
தற்போது ஆட்டோமொபைல்ஸ் & ஆட்டோ உதிரிபாகங்கள், ஒயிட் கூட்ஸ், பார்மா, டெக்ஸ்டைல், உணவுப் பொருட்கள், அதிக திறன் கொண்ட சோலார் பிவி , மேம்பட்ட இரசாயன செல்கள் மற்றும் சிறப்பு இரும்புகள் போன்ற துறைகள் அடங்கும்.
PLI திட்டத்தின் நோக்கம்
PLI திட்டத்தின் நோக்கம் உள்நாட்டு உற்பத்தியை உலக அளவில் போட்டித்தன்மையுடன் உருவாக்குவதும், ஏற்றுமதியினை அதிகரிப்பதும் ஆகும். தகவல்கள் படி, பிஎல்ஐ திட்டத்தின் பலன்களை பொம்மைகள் மற்றும் தோல் போன்ற பல்வேறு துறைகளுக்கு விரிவுபடுத்துவதலாம் என தெரிகிறது. இது குறித்த பெருத்த எதிர்பார்ப்புகள் இருந்து வந்தது. ஆனால் பட்ஜெட்டில் அப்படியான அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.
ஏமாற்றம் தந்த பட்ஜெட்
ஆனால் பட்ஜெட் 2023 தாக்கலில் இது குறித்தான அறிவிப்புகள் ஏதும் வெளியாகவில்லை. இது தொழிற்துறையினர் மத்தியில் இது பெருத்த ஏமாற்றமாகவே வந்துள்ளது எனலாம். எனினும் புதிய தொழில் தொடங்குவோருக்கு எளிதாக தொழில் தொடங்கியும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இது எந்த மாதிரியான நடவடிக்கை என்பது குறித்தான முழுமையான அறிவிப்பு வெளியாகவில்லை.
வேலை வாய்ப்பு அதிகரிக்கும்
2023 - 24ம் நிதியாண்டிற்கான மூலதன செலவானது 10 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் ஜிடிபி விகிதத்தில் 3.3% ஆகும். இதன் மூலம் வேலை வாய்ப்பினை ஊக்குவிக்க முடியும் எனலாம். இது உள்கட்டமைப்பு துறை மற்றும் உற்பத்தி திறனை அதிகரிக்கும். இதன் காரணமாக வேலை வாய்ப்ப்பு அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications