பிப்ரவரி 1 ஆம் தேதி அறிவிக்கப்படும் 2023-24 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் குறித்து அதிகப்படியான எதிர்பார்ப்பும் உள்ளது.
இதற்கு முக்கியமான காரணம் பிரதமர் மோடி தலைமையிலான 2வது ஆட்சியின் கடைசி முழுப் பட்ஜெட் என்பதால் இந்தப் பட்ஜெட் அறிவிப்புகளை முழுமையாக நடைமுறைப்படுத்த வாய்ப்புகள் உள்ளது.
இதனால் 2024 ஆம் ஆண்டு நடக்கும் பொதுத்தேர்தலில் பிஜேபி தனது வாங்கு வங்கியை மேம்படுத்த முடியும். இதனால் இந்தப் பட்ஜெட் அறிக்கையில் சாமானிய மக்களைக் கவரும் வகையில் அதிகப்படியான அறிவிப்புகள் வரும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
இந்த நிலையில் 2023-24 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் 2023 அறிக்கையில் சுங்க வரி அதிகரிப்புக்குச் சாத்தியம் கொண்ட 35 க்கும் மேற்பட்ட பொருட்களின் பட்டியலை மத்திய நிதியமைச்சகம் கையில் எடுத்துள்ளது.
பட்ஜெட் 2023
பட்ஜெட் 2023 அறிக்கை மக்களை ஈர்க்கும் வகையில் ஜனரஞ்சகமாக இருக்கும் எனக் கணிக்கப்படும் இதே வேளையில், கடந்த ஆண்டை போலவே வளர்ச்சி, நிதி இலக்குகளை அடைவது தான் பிரதானமாக இருக்கும் எனக் கணிக்கப்படுகிறது. இந்த மாறுபட்ட சூழ்நிலைக்கு மத்தியில் மத்திய அரசு தனது வரி வருமானத்தை அதிகரிக்கும் வகையில் சுங்க வரியை அதிகரிக்க முடிவு செய்ய வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
35 பொருட்கள்
இப்படி மத்திய அரசு இந்தப் பட்ஜெட் 2023 அறிக்கையில் பிரைவேட் ஜெட் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், உயர்தர எலக்ட்ரானிக் பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள், நகைகள், high-gloss paper மற்றும் வைட்டமின்கள் எனச் சுமார் 35 பொருட்கள் மத்திய நிதியமைச்சகத்தால் தயாரிக்கப்பட்ட பட்டியலில் இடம்பெற்றுள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய நிதியமைச்சகம்
டிசம்பர் மாதம் முதல் மத்திய நிதியமைச்சகம் பல்வேறு அமைச்சகங்களுடனான ஆலோசனையில், தத்தம் துறைகள் கொடுத்த தகவலின் அடிப்படையில் சுங்க வரி உயர்வு குறித்து 35 பொருட்களின் பட்டியலை கொண்டு ஆய்வு செய்யப்பட்டு வருவதாக அரசு அதிகாரி தெரிவித்துள்ளதாக எக்னாமிக் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
சுங்க வரி உயர்வு
இந்தச் சுங்க வரி உயர்வு நடவடிக்கை இறக்குமதியைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டது மற்றும் இந்தப் பட்டியலில் இருக்கும் பல பொருட்களின் தயாரிப்புகளை உள்நாட்டிலேயே செய்ய ஊக்குவிக்கும் முயற்சி தான் இது.
அத்தியாவசியமற்ற பொருட்கள் பட்டியல்
வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் டிசம்பர் மாதம் பல்வேறு அமைச்சகங்களைச் சுங்க வரி உயர்த்துவதற்காக வெளிநாட்டில் இருந்து அதிகளவில் இறக்குமதி செய்யும் அத்தியாவசியமற்ற பொருட்களின் பட்டியலை தயார் செய்யுமாறு கேட்டுக் கொண்டது. இந்த இறக்குமதி கட்டண உயர்வு மூலம் இறக்குமதி அளவை கட்டுப்படுத்த முடியும்.
நடப்புக் கணக்குப் பற்றாக்குறை
இந்தியாவின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை (CAD) செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.4 சதவீதமாக உயர்ந்தது மட்டும் அல்லாமல், ஒன்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்தது. மேலும் முந்தைய காலாண்டில் இதன் அளவு GDP-யில் 2.2 சதவீதமாக இருந்தது.
விலைவாசி
உலகளாவிய சந்தையில் பல்வேறு கமாடிட்டிகளின் விலையில் ஏற்பட்ட சரிவு, 9 ஆண்டு உயர்வை தொட்டுள்ள, விரிவடைந்து வரும் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை அளவீட்டைத் தணிக்கும். ஆனால் அரசின் கொள்கை வகுப்பாளர்கள் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை அளவீட்டைக் கட்டுக்குள் கொண்டு இருக்க வேண்டும் என்பதில் எச்சரிக்கையாக உள்ளனர்.
More From GoodReturns

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications