டெல்லி: கொரோனாவின் வருகைக்கு பிறகு இந்திய இளைஞர்கள் இடையே சுயதொழில் செய்வதில் ஆர்வம் கணிசமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக விவசாய துறையில் இந்த ஆர்வம் கணிசமாக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக விவசாய துறையில் ஸ்டார்ட் அப்களை தொடங்குவோருக்கு சலுகை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது இளைஞர்களுக்கு மேற்கொண்டு ஆர்வத்தை தூண்டும் எனலாம்.
அடுத்தகட்டத்திற்கு செல்லும்
மேலும் விவசாய துறையை அடுத்தகட்டத்திற்கு எடுத்து செல்ல உதவும் எனலாம். குறிப்பாக விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களை சந்தைப்படுத்தவும், சர்வதேச அளவில் கொண்டு செல்லவும் பயனுள்ளதாக அமையும்.
இதனால் விவசாயிகளும் பலனடைவார்கள் எனலாம். இது மட்டும் அல்ல இந்த பட்ஜெட்டில் விவசாய துறையை ஊக்குவிக்கும் விதமாக பற்பல அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
விவசாயிகளுக்கு கடன் இலக்கு
தோட்ட கலைத் துறையை மேம்படுத்த 2200 கோடி ரூபாய் நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளது. இதே 20 லட்சம் கொடி ரூபாய் விவசாய கடன் வழங்கவும் இலக்கு வைக்கப்பட்டுள்ளது. இது விவசாயிகளுக்கு மிக பயனுள்ள ஒன்றாக இருக்கும் எனலாம்.
புதிதாக 10000 உயிரி ஆராய்ச்சி மையங்கள் ஏற்படுத்தப்படும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த வணிக வளாகங்கள்
உள்நாட்டு தயாரிப்புகளை ஊக்குவிக்க மாநில தலை நகரங்களில் ஒருங்கிணைந்த வணிக வளாகங்கள் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவும் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை சந்தை படுத்த முக்கிய பங்கு வகிக்கும். இது உற்பத்தி துறைக்கு மட்டும் அல்ல, விவசாய துறைக்கும் பயனுள்ள ஒன்றாக இருக்கும்.
இயற்கை விவசாயத்திற்கு முன்னுரிமை
இயற்கை விவசாயத்தின் தேவையானது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அதனை உருவாக்க 10 ஆயிரம் இடங்களில் உரம் தயாரிப்பு மையம் ஏற்படுத்தப்படும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 3 ஆண்டுகளில் ஒரு கோடி விவசாயிகள் இயற்கை விவசாயம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது மேற்கொண்டு இயற்கை விவசாயத்தினை ஊக்குவிக்கும் எனலாம். இது மேற்கொண்டு விவசாயிகளுக்கு ஆர்வத்தினை தூண்டலாம். குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் இது பெரும் வரவேற்பினை பெறலாம்.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

ஈரான் போரை மையமாக வைத்து புதிய தொழில்: கோடிகளை அள்ளும் டிரம்ப் மகன்கள்!! வெளிச்சத்துக்கு வந்த உண்மை!!



Click it and Unblock the Notifications