மத்திய பட்ஜெட் 2023 பிப்ரவரி 1 ஆம் தேதி வெளியிட உள்ள நிலையில், இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.
நரேந்திர மோடி தலைமையிலான அரசு மற்றொரு சுற்று கட்டண உயர்வை அறிவிக்க உள்ளதைக் கண்டு பயப்படுவதாகவும், இந்தியாவை அதிக விலைவாசி கொண்ட நாடாகவும், சீனாவுக்கு மாற்றாக இந்தியா உருவெடுக்கும் என்ற நிலை மிகவும் சவாலானதாக மாற உள்ளது என்று கூறியுள்ளார்.
ஒரு பக்கம் ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்ராவில் ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் கலந்துகொண்டது மூலம் ராஜன் காங்கிரஸ் கட்சியில் இணையப் போகிறாரா..? என்ற கேள்வியை எழுப்பி நிலையில் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் செயல்பாடுகளைத் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார்.
நரேந்திர மோடி
நரேந்திர மோடி தலைமையிலான அரசு இந்தப் பட்ஜெட்டில் கொண்டு வரக்கூடிய மிகப்பெரிய பங்களிப்பு என்னவென்றால், விவேகமான மற்றும் நிலையான சீர்திருத்தப் பார்வையுடன் திட்டங்களையும் முடிவுகளையும் வெளியிடுவது தான் எனத் தெரிவித்துள்ளார். மேலும் இதன் வாயிலாகத் தான் நாட்டின் பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு வர முடியும்.
சீனாவிற்கு மாற்றாக
இந்தியாவைச் சீனாவிற்கு மாற்றாகவும், ஏற்றுமதி நாடாகவும் மாற வேண்டும் என்றால் இந்தியாவிற்கு இடம்பெயர நினைக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்குத் தடையாக இருக்கும் கட்டண உயர்வை அரசு முதன்மையாக நிறுத்த வேண்டும் என்று ரகுராம் ராஜன் முன்னணி தொலைக்காட்சிக்கு அளிக்கப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
வியட்நாம்
சர்வதேச நிறுவனங்கள் தற்போது இந்தியா உற்று நோக்கினாலும் , வியட்நாம் போன்ற கொள்கைகள் இன்னும் உறுதியான மற்றும் குறைந்த தடுமாற்றம் கொண்ட நாடுகளை நிறுவனங்கள் தேர்வு செய்ய அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது. இதனால் இந்தியா வெளிநாட்டு நிறுவனங்களை ஈர்ப்பதில் முதல் இடத்தில் இல்லை என்பதை விளக்கியுள்ளார்.
வியட்நாம் ஜிடிபி
வியட்நாம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2022 இல் 8.02 சதவீதம் வளர்ச்சி அடைந்ததுள்ளது. இது 1997 முதல் பதிவான வருடாந்திர வளர்ச்சியில் மிகப்பெரிய அளவாகும். 2022 ஆம் ஆண்டில் வியாட்நாம் நாட்டின் வளர்ச்சி இலக்கு 6.0 - 6.5 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது இலக்கை காட்டிலும் மிகப்பெரிய வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
வியட்நாம் வெற்றி காரணம்
கடந்த ஆண்டு இந்நாட்டின் வளர்ச்சி வெறும் 2.58 சதவீதமாக இருந்த நிலையில் 2022 ஆம் ஆண்டில் 8.02 சதவீதம் வளர்ச்சி அடைந்ததுள்ளது. வியட்நாம் நாட்டின் வளர்ச்சிக்கு வலுவான உள்நாட்டுச் சில்லறை விற்பனை மற்றும் ஏற்றுமதியின் ஆதரவு தற்போது பிரம்மாண்ட வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
மெக்சிகோ
NAFTA க்குள் இருக்கும் காரணத்தால் மெக்சிகோ கூடுதல் பலனைக் கொண்டு உள்ளது. இது அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட நிறுவனங்கள் மெக்சிகோ -விற்கு இடமாற்ற செய்ய விருப்ப சேர்வாக அமையும். இந்தப் பக்கம் வியட்நாம், அந்தப் பக்கம் மெக்சிகோ அதிக வாய்ப்புகளைக் கொண்டு உள்ளது.
வேலைவாய்ப்பின்மை
இந்தியாவின் நகர்ப்புற வேலைவாய்ப்பின்மை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதால் அக்டோபர் மாதத்தில் 7.7% ஆக இருந்த இந்தியாவில் வேலையின்மை விகிதம் நவம்பரில் 8% ஆக உயர்ந்துள்ளது என்று இந்தியப் பொருளாதாரத்தைக் கண்காணிக்கும் மையத்தின் தரவு காட்டுகிறது.
நடப்பு கணக்குப் பற்றாக்குறை
இந்தியாவின் நடப்பு கணக்குப் பற்றாக்குறை (CAD) செப்டம்பர் 2022 காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது முந்தைய காலாண்டில் அதாவது ஜூன் காலாண்டில் ஜிடிபியில் 2.2 சதவீதமாக இருந்தது.
ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி
2022-23 ஆம் நிதியாண்டின் 2வது காலாண்டில் நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை மற்றும் ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி காரணமாக நடப்பு கணக்குப் பற்றாக்குறை அளவு செப்டம்பர் காலாண்டில் 36.4 பில்லியன் டாலராக அதிகரித்து உள்ளது.
பயமாக உள்ளது
இந்த நிலையில் தான் ஆர்பிஐ நாட்டின் பணவீக்கத்தைக் குறைக்க அடுத்த நாணய கொள்கை கூட்டத்தில் மீண்டும் ரெப்போ விகிதத்தை உயர்த்த திட்டமிட்டு வருகிறது. இதை விமர்சனம் செய்து தான் தற்போது ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் மோடி அரசின் மற்றொரு சுற்று கட்டண உயர்வை அறிவிக்க உள்ளதைக் கண்டு பயப்படுவதாகக் கூறுகிறார்.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!



Click it and Unblock the Notifications