டெல்லி: நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், பட்ஜெட் உரையை நிதியமைச்சர் வாசித்தி வருகின்றார். இதில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.
இந்த பட்ஜெட்டில் நடுத்தர மக்களுக்கும் சாமானியர்களுக்கும் உதவும் வகையில் பற்பல அறிவிப்புகள் வெளியாகலாம் என்ற பெருத்த எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
கனவை நனவாக்க பயன்படும்
தற்போது வீட்டுக்கடன் வட்டி விகிதங்கள் வங்கிகளில் மற்றும் நிதி நிறுவனங்களில் உச்சத்தில் இருந்து வருகின்றது. ஆக பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பானது வீடு இல்லாதோருக்கு வீடு கட்ட ஊக்குவிப்பினை அளிக்கும். இது மேற்கோண்டு அவர்களின் கனவை நனவாக்க பயனுள்ளதாக இருக்கும்.
PMAY திட்டத்தில் நகர்ப்புறங்களில் வீட்டுவசதி மேம்பாட்டிற்கு பங்களிக்கும் திட்டம் மட்டுமல்ல, குடிசைப் பகுதிகளில் வீட்டுத் திட்டங்களை மேம்படுத்துவதற்காக ஒரு பயனாளிக்கு மானிய சலுகைகள் உள்ளன.
பிரதமரின் வீடு கட்டும் திட்டம்
அந்த வகையில் சாமானியர்களின் மிகப்பெரிய கனவாக இருக்கும் வீட்டுக் கனவை நனவாக்க, பிரதமரின் வீடு கட்டும் திட்டங்களுக்கு ரூ.79000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்திய அரசின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY), 2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் 2022ம் ஆண்டுக்குள் நாட்டிலுள்ள அனைவருக்கும் சொந்த வீடு கட்டித் தர இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இலக்கு எவ்வளவு?
அதன்படி, 2019ஆம் ஆண்டுக்குள் நாட்டில் உள்ள கிராமப்புற பகுதிகளில் 10 மில்லியன் வீடுகளும், 2022ஆம் ஆண்டிற்குள் நகர்ப்புறப் பகுதிகளில் 10 மில்லியன் வீடுகளும் கட்டித் தரப்படும் என்று இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.
பயனுள்ள ஒன்று
இந்த திட்டத்தினை மேற்கொண்டு விரிவாக்கம் செய்யும் விதமாக 79,000 கோடி ரூபாய் நிதியினை ஒதுக்கியிருப்பது, இது மேற்கொண்டு சாமானிய மக்களுக்கு பயனுள்ள ஒன்றாக அமையலாம். இதனால் ஏழை எளிய மக்கள் பெரும் பலனை அடைய முடியும்.
பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்காக ரூபாய் 2.75 லட்சம் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இது வீடு என்பது வெறும் கனவாகவே மட்டும் இருப்பவர்களுக்கு அவர்களின் கனவை நனவாக்க பயனுள்ளதாக இருக்கும்.
பயனர்களை ஊக்குவிக்கும்
தற்போது வீட்டுக்கடன் வட்டி விகிதங்கள் வங்கிகளில் மற்றும் நிதி நிறுவனங்களில் உச்சத்தில் இருந்து வருகின்றது. ஆக பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பானது வீடு இல்லாதோருக்கு வீடு கட்ட ஊக்குவிப்பினை அளிக்கும். இது மேற்கோண்டு அவர்களின் கனவை நனவாக்க பயனுள்ளதாக இருக்கும்.
PMAY திட்டத்தில் நகர்ப்புறங்களில் வீட்டுவசதி மேம்பாட்டிற்கு பங்களிக்கும் திட்டம் மட்டுமல்ல, குடிசைப் பகுதிகளில் வீட்டுத் திட்டங்களை மேம்படுத்துவதற்காக ஒரு பயனாளிக்கு மானிய சலுகைகள் உள்ளன.

Click it and Unblock the Notifications