பட்ஜெட் 2023ல் முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா.. காத்திருக்கும் சவால்கள் என்ன?

நிரம்பிய சுடுகாடுகள், படுக்க இடமில்லாமல் மருத்துவமனைகளில் அவதிப்படும் நோயாளிகள், வெறிச்சோடிய சாலைகள், வேலையினை இழந்த லட்சக்கணக்கான மக்கள் மற்றும் வீழ்ச்சி கண்டுள்ள பொருளாதாரம்? என அனைத்தையுமே இந்தியா ஏற்கனவே 2021ம் ஆண்டில் கண்டது. இது மற்றொரு ஆட்டத்திற்கு தாங்குமா?

ஏற்கனவே வேலையிழந்தவர்கள், வாழ்வாதாரத்தை இழந்தவர்கள் தற்போது தான் படிப்படியாக மேலே வரத் தொடங்கியுள்ளனர். ஆக இது இந்தியா கண்ட மோசமான கனவுகளில் ஒன்றாகும்.

பொருளாதாரத்தில் தாக்கம்

பொருளாதாரத்தில் தாக்கம்

மக்கள் மீது பெரும் தாக்கத்தினை ஏற்படுத்திய கொரோனாவானது, பொருளாதாரத்தினையும் மோசமாக பதம் பார்த்தது. இதனால் பணவீக்கம் என்பதும் மிக மோசமான உச்சத்தினை எட்டியது. இதனால் மத்திய வங்கிகளும் வட்டி விகிதத்தினை உயர்த்தின. இது மேற்கோண்டு வளர்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தின.

கொரோனா + உக்ரைன் பிரச்சனை

கொரோனா + உக்ரைன் பிரச்சனை

முந்தைய கொரோனா அலையின் போது கூட கொரோனா மட்டுமே பிரச்சனையாக இருந்து வந்தது. ஆனால் இந்த முறை ரஷ்யா - உக்ரைன் பிரச்சனையால் மீண்டும் அரசுக்கு பிரச்சனை அதிகரித்துள்ளது. இது மேற்கோண்டு இந்த முறை ஏற்பட்டால் மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம் எனலாம்.

இந்தியாவுக்கு பாதிப்பு இருக்காது

இந்தியாவுக்கு பாதிப்பு இருக்காது

எப்படியிருப்பினும் மேலை நாடுகளுடன் ஒப்பிடும்போது கொரோனாவில் இருந்து இந்தியா விரைவில் மீண்டு வந்து. பொருளாதாரத்திலும் விரைவில் மீண்டு வந்து கொண்டுள்ளது. எனினும் தற்போது நிலவி வரும் கொரோனா அச்சம் மேற்கொண்டு பொருளாதாரத்தினை சிதைக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. எனினும் ஓரு தரப்பினர் சீனாவில் பரவி வரும் இந்த வைரஸால் இந்திர்களுக்கு அதிக பாதிப்பு இல்லை.

பொருளாதார நிபுணர்களின் கணிப்பு

பொருளாதார நிபுணர்களின் கணிப்பு

எனினும் பரவினால் என்ன செய்வது என அரசு எச்சரிக்கை நட்வடிக்கைகளை தற்போதே எடுக்க தொடங்கி விட்டது. சமீபத்திய ஆய்வொன்றில் சீனாவில் 60% மேற்பட்டோர், உலகின் மொத்த மககள் தொகையில் 10% இந்த கொரோனாவால் பாதிக்கப்படலாம் என எச்சரிக்கை விடுத்தது. அதுவும் அடுத்த மூன்று மாதங்களில் தாக்கத்தினை எதிர்கொள்ளலாம் என சுகாதாரம் சார்ந்த பொருளாதார நிபுணர் ஒருவர் மதிப்பிட்டிருந்தார். இந்த மோசமான வைரஸ் மில்லியன் கணக்கான மக்களை கொன்று விடலாம். சீனாவில் இறப்பு விகிதம் இல்லை என்று கூறப்பட்டாலும், சீன சுடுகாடுகளில் அதிகளவிலானவர்கள் தகனம் செய்யப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

 இறப்பு விகிதம் அதிகரிப்பு

இறப்பு விகிதம் அதிகரிப்பு

சீனாவில் தினசரி மில்லியன் கணக்கான மக்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக தினசரி 5000க்கும் மேற்பட்டோர் இறந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலைமை இன்னும் வரும் நாட்களில் மோசமடையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மோசமான தாக்கம்

மோசமான தாக்கம்

தற்போது சீனா எல்லைகளில் நிலவி வரும் பிரச்சனை, ரஷ்யா - உக்ரைன் பிரச்சனையால் நிலவி வரும் மந்த நிலை, கொரோனா என பல காரணிகளுக்கும் மத்தியில் சிக்கித் தவித்து வருகின்றது. இது மேற்கொண்டு சீனாவில் மிக மோசமான தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பணவீக்கம் என்பது மிக மோசமான உச்சத்தினை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 எனென்ன பாதிப்பு?

எனென்ன பாதிப்பு?

அடுத்த 2 - 3 மாதங்களுக்கு சீனாவில் இதே நிலை நீடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சர்வதேச பொருளாதாரத்திலும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


சீனா உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடாக இருக்கும் பொருளாதாரம் சரிவினைக் கண்டு வருகின்றது. குறிப்பாக சீனாவில் ஜீரோ கோவிட் பாலிசி என்பது மேற்கொண்டு மோசமான தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இது சீனா பொருளாதாரத்தினை சரிவு பாதைக்கு கொண்டு செல்லலாம். இது மேற்கொண்டு சீனாவில் வேலையின்மை விகிதத்தினை அதிகரிக்கலாம். கடன் விகிதம் குறையலாம். கொடுத்த கடன்கள் வசூலாகாமல் போகலாம். இதன் ரியல் எஸ்டேட் சந்தை மேலும் சரிவடையலாம்.

இந்தியா என்ன செய்யனும்?

இந்தியா என்ன செய்யனும்?

சீனாவில் பரவி வரும் கொரோனாவானது இந்தியாவிலும் பரவலாம். ஆக அடுத்த 2 - 3 மாதங்கள் இந்தியாவிலும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அதோடு சீனாவின் உற்பத்தி விகிதமானது பாதிக்கப்படலாம். ஏற்கனவே லாக்டவுன் காரணமாக மக்கள் வீதிகளில் இறங்கி போராடத் தொடங்கினர். இப்படி பல இக்கட்டான விஷயங்களுக்கு மத்தியில் அதன் உற்பத்தியானது சரிவினைக் காணலாம். இதன் காரணமாக இந்தியா இறக்குமதி செய்யும் முக்கிய பொருட்கள் விகிதங்கள் சரியலாம். அதேபோல சீனாவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் அங்கு ஏற்றுமதி செய்யப்படுவதும் பாதிக்கப்படலாம்.

ஏற்றுமதி இறக்குமதி பாதிப்பு

ஏற்றுமதி இறக்குமதி பாதிப்பு

ஏற்கனவே சீனா இந்தியா இடையேயான எல்லை பிரச்சனைக்கு மத்தியில் பிரச்சனை நிலவி வருகின்றது. நிபுணர்கள் என பலதரப்பினரும் சீனாவுடனான வணிகத்தினை நிறுத்த பரிந்துரை செய்து வருகின்றனர். எனினும் இந்தியாவின் மருந்து நிறுவனங்கள், நகை ஏற்றுமதியாளர்கள் என பலரும் இதனால் பாதிக்கப்படலாம்.

காத்திருக்கும் சவால்கள்

காத்திருக்கும் சவால்கள்

இதற்கிடையில் வரவிருக்கும் பட்ஜெட்டில் நிதியமைச்சர் மருத்துவம், சுகாதாரம் என பல துறைகளுக்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். நிதி பற்றாக்குறையை குறைக்க வேண்டும். அதிக நிதிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும். மக்கள் கைகளில் அதிகம் பணப்புழக்கம் அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தேவையை மீட்க உதவும். வட்டி அதிகரிப்பு, கொரோனா, பணவீக்கம், ரஷ்யா உக்ரைன் பிரச்சனை என பல சவால்கள் இந்த பட்ஜெட்டில் காத்துக் கொண்டுள்ளன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+