2023-24 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இந்தியாவின் பொருளாதாரம் 7 சதவீதம் வரையில் வளர்ச்சி அடையும், இது பிற பொருளாதார நாடுகளை ஒப்பிடுகையில் சிறப்பான வளர்ச்சி அளவீடு எனப் பட்ஜெட் உரையைத் துவங்கிய நிர்மலா சீதாராமன் சில முக்கியமான பொருட்கள் மீதான வரியை உயர்த்தி மக்களின் பர்ஸ்-ஐ ஓட்டை ஆக்கியுள்ளார்.
சிகரெட் - விலை உயர்வு
சிகரெட் மீதான வரி 16 சதவீதம் உயர்வு
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சிகரெட்டுகள் மீதான இறக்குமதி வரி 16% உயர்கிறது..
ரப்பர், சிம்னி - விலை உயர்வு
ரப்பர் மீதான அடிப்படை இறக்குமதி வரி 10 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
சமையலறையில் பயன்படுத்தப்படும் சிம்னி மீதான சுங்க வரி 7.5% இல் இருந்து 15% ஆக அதிகரித்துள்ளது.
தங்கம், தங்க நகை - - விலை உயர்வு
தங்கத்தால் செய்யப்பட்ட பொருட்களுக்கு அடிப்படை சுங்க வரி உயர்த்தப்பட்டுள்ளது
தங்கம், வைர நகைகள் மீதான சுங்க வரி அதிகரிப்புச் செய்யப்படுகிறது.
கார் - விலை உயர்வு
முழுமையாகத் தயாரிக்கப்பட்டு இந்தியாவுக்குள் இறக்குமதி செய்யப்படும் சொகுசு கார்கள் மற்றும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு இந்தப் பட்ஜெட்டில் சுங்க வரி 60 சதவீதத்தில் இருந்து 70 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளது.
சைக்கிள், பொம்மை - விலை உயர்வு
வெளிநாட்டில் இருந்து முழுவதுமாகத் தயாரிக்கப்பட்டு இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் சைக்கிள், பொம்மைகள் மீதான இறக்குமதி வரி அதிகரிக்கப்படுகிறது
மொபைல், டிவி - விலை குறைவு
மொபைல் போன்களைத் தயாரிக்கும் சில முக்கிய உதிரிபாகங்கள் அல்லது இன்புட் ப்ராடெக்ட் -ன் இறக்குமதி மீதான சுங்க வரி குறைக்கப்படுகிறது.
இதேபோல் டிவி பேனல்களின் ஓப்பன் செல் உதிரிபாகங்கள் மீதான சுங்க வரி 2.5% ஆக குறைக்கப்பட்டுள்ளது
வைரம், இறால் - விலை குறைவு
ஆய்வகத்தில் உருவாக்கப்படும் வைரங்கள் தயாரிக்கப் பயன்படும் விதைகள் மீதான அடிப்படை சுங்க வரி குறைக்கப்படும்
ஏற்றுமதியை ஊக்குவிக்க இறால் தீவனத்தின் மீதான சுங்க வரி குறைக்கப்படும்
லித்தியம் பேட்டரி - விலை குறைவு
லித்தியம் பேட்டரி இறக்குமதி வரி குறைக்கப்படுகிறது.
இந்தியாவுக்குள் இறக்குமதி செய்யப்படும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சுங்க வரி 60 சதவீதத்தில் இருந்து 70 சதவீதமாக உயர்த்தப்பட்ட நிலையில் லித்தியம் பேட்டரி மீதான வரி குறைக்கப்பட்டு உள்ளது.
ஏழு முன்னுரிமைகள்
இந்த மத்திய பட்ஜெட் 2023-ன் ஏழு முன்னுரிமைகள் கொண்டு மொத்த அறிக்கை உருவாக்கப்பட்டு உள்ளது.
1. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி
2. கடைசி மைல் வரை அடையும் சேவை
3. உள்கட்டமைப்பு மற்றும் முதலீடு
4. திறனை வெளிக்கொணரும் முயற்சி
5. பசுமை வளர்ச்சி
6. இளைஞர் சக்தி
7. நிதித்துறை
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications