பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் 2வது ஆட்சி காலத்தின் கடைசி முழுப் பட்ஜெட் பிப்ரவரி 1 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இந்தப் பட்ஜெட்-ஐ தொடர்ந்து 2024 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தல் இருக்கும் நிலையில் 2024 பிப்ரவரி 1 ஆம் தேதி மோடி அரசு இடைக்காலப் பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யும்.
இதனால் இந்தப் பட்ஜெட் அறிவிப்புகள் தனிநபர்களுக்குச் சாதகமாக இருக்கும் என அதிகப்படியான எதிர்பார்ப்புகள் இருக்கும் வேளையில் இந்தப் பட்ஜெட் எப்படி இருக்கும் என ஒரு ரிப்போர்ட் வெளியாகியுள்ளது.
நிர்மலா சீதாராமன்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையைத் தயாரிப்பதற்கான பணிகளை டிசம்பர் மாதமே துவங்கிவிட்ட நிலையில், சமீபத்தில் அவர் கடந்த நிதியாண்டுக்கான பட்ஜெட் திட்டத்தைப் போல இந்தப் பட்ஜெட்டும் அதே உத்வேகத்துடன் இருக்கும் எனத் தெரிவித்தார்.
பிப்ரவரி 1 பட்ஜெட் 2023
இதன் மூலம் பொருளாதார வல்லுனர்கள் பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் பட்ஜெட், 2024 பொதுத் தேர்தலுக்காக ஜனரஞ்சகமாக இல்லாமல் சந்தைக்கு எது தேவையோ அதுதான் இருக்கும் எனக் கணித்துள்ளனர்.
வளர்ச்சி, உற்பத்தி
இதன் மூலம் 2023-24 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் மூலதன அதிகரிப்பு, வளர்ச்சி, உற்பத்தி ஆகியவற்றின் அடிப்படையில் தான் இருக்கும். இதோடு கொரோனா மற்றும் ரஷ்யா - உக்ரைன் போருக்கு பிந்தைய பாதிப்புகளைச் சமாளிக்கும் வகையில் தான் இருக்கும் எனக் கிர்த்திகா சுனேஜா & யோகிமா சேத் சர்மா அறிக்கை கூறுகிறது.
வளர்ச்சி
இந்திய பொருளாதாரத்தை, சர்வதேச பொருளாதார மந்தநிலையில் இருந்து காப்பாற்றுவதே தற்போது முக்கியக் கருவியாக இருக்கும். சர்வதேச பொருளாதார மந்தநிலை நாட்டின் ஏற்றுமதி மற்றும் தொழிற்துறை வளர்ச்சியைப் பெரிய அளவில் பாதிக்கிறது, ரஷ்யா - உக்ரைன் போர், நாணய கொள்கையில் ஏற்பட்ட இறுக்கம் ஆகியவை வளர்ச்சி பாதையின் முக்கியத் தடைகளாக உள்ளது.
முக்கியத் தேவை
இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி பாதையில் இருக்கும் தடைகளை நீக்க மூலதன செலவுகளை 2.9 சதவீச ஜிடிபி அளவை 3.5 சதவீதமாக உயர்த்த வேண்டும். தனிநபர் வருமான வரிப் பிரிவில் வரி பலகையை மறுசீரமைப்பு செய்தோ அல்லது வரியை குறைத்தோ இந்திய சந்தையில் டிமாண்ட்-ஐ அதிகரிக்க வேண்டும்.
ஜிஎஸ்டி
வர்த்தகச் சந்தையின் வேகத்தை மேம்படுத்த ஜிஎஸ்டி வரிப் பலகையில் உச்ச அளவில் இருக்கும் 28 சதவீத வரியைக் குறைக்க வேண்டும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் வர்த்தகம் செய்யும் முறை மற்றும் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும். நகர்ப்புற வேலைவாய்ப்புகள் உறுதிப்படுத்த வேண்டும்.
உற்பத்தி
இந்தப் பட்ஜெட் அறிக்கையில் உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்துப் போதுமான நடவடிக்கைகள் எடுக்க உள்ளது. ஆனால் சர்வதேச சந்தைகள் மந்தமாக இருக்கும் காரணத்தால் ஏற்றுமதி அளவுகள் சரிய அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது. மேக் இன் இந்தியா 2.0 திட்டத்தில் சுமார் 27 துறைகள் இருக்கப்போகிறது.
More From GoodReturns

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications