Budget 2023: பட்ஜெட் 2023 ஆனது தொற்று நோய்க்கு பிறகு வரவிருக்கும் நிலையில், அதனை கருத்தில் கொண்டு பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2022 - 23 பட்ஜெட்டிலேயே மூத்த குடி மக்களுக்கு பெரிய அறிவிப்பு ஏதும் வெளியாகாத நிலையில், இந்த முறையாவது இருக்கலாம் என்ற பெருத்த எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.
மேலும் வரவிருக்கும் பட்ஜெட் ஆனது மக்களவை தேர்தலுக்கு முன்னர் அரசு செய்யும் கடைசி முழு பட்ஜெட் இது என்பதால், இது பல பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
உச்சத்தில் பணவீக்கம்
இதில் மாத சம்பளதாரர்கள் மற்றும் மூத்த குடி மக்களுக்கு நிவாரணம் கிடைக்கலாம் என் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் தொடர்ந்து சர்வதேச அளவில் நிலவி வரும் பல்வேறு பதற்றமான காரணிகளுக்கு மத்தியில், பணவீக்கம் என்பது உச்சத்தில் காணப்படுகின்றது. இதன் காரணமாக செலவினம் என்பது கணிசமாக அதிகரித்துள்ளது. இது மூத்த குடிமக்களுக்கு மேற்கோண்டு தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.
மூத்த குடிமக்களுக்கு சலுகை
ஆக மூத்த குடிமக்களுக்கு உதவும் விதமாக வரவிருக்கும் பட்ஜெட் 2023ல் வருமான வரி விலக்கு வரம்பு அதிகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 80சியின் கீழ் பெறப்படும் வரிச் சலுகையானது இன்னும் அதிகமான சலுகைகள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு நிலவரம்
கடந்த ஆண்டே தனி நபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு, 80சி உள்ளிட்ட பிரிவுகளில் எந்த வரிச்சலுகையும் அறிவிக்கப்படவில்லை. தற்போது 2.5 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டினால் அரசு வருமான வரி செலுத்த வேண்டியதில்லை. 60 வயது முதல் 80 வயது வரை உள்ள மூத்த குடிமக்களுக்கு 3 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு இந்த விலக்கு கிடைக்கும். 80 வயதுக்கு மேற்பட்ட சூப்பர் சீனியர் குடிமக்களுக்கான விலக்கு வரம்பு 5 லட்சமாகும். ஆக இந்த விகிதமானது மேற்கொண்டு மாற்றம் செய்யப்படலாம். குறிப்பாக மூத்த குடிமக்களுக்கு வரி விலக்கு மாற்றம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்பார்ப்பு
தற்போது 80 வயதுக்கு மேற்பட்ட சூப்பர் சீனியர் குடிமக்களுக்கான விலக்கு வரம்பு 5 லட்சமாகும். இந்த விகிதமானது 12.5 லட்சம் ரூபாய் வரையில் அதிகரிக்கப்படலாம். இதே 60 - 80 வயதிலான மூத்த குடிமக்களுக்கு 3 லட்சம் ரூபாயில் இருந்து, 7.5 லட்சம் ரூபாய் வரையில் நீட்டிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆயுள் காப்பீடும் 80சி-ல் சேர்க்கப்படுகிறதா?
பட்ஜெட் 2023 -ல் மூத்த குடிமக்களுக்கு ஆயுள் காப்பீட்டில் அளிக்கப்படும் விலக்கின் அளவு பட்ஜெட்டில் அதிகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80C இலிருந்து காப்பீட்டுத் திட்டங்கள் விலக்கப்படலாம். வருமான வரி 80C இன் கீழ் கிடைக்கும் விலக்குகளிலிருந்து ஆயுள் காப்பீட்டை பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகின்றது. இது கொரோனாவுக்கு பிறகு இன்சூரன்ஸ் பிரீமியங்களில் கணிசமான அதிகரிப்பு என்பது உள்ளது. இதற்கிடையில் வரி விலக்கு கொடுத்தால் அது பயனுள்ளதாக இருக்கும் என்றும் நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.
80டிடிபி - மருத்துவம் சார்ந்த விலக்கு
மூத்த குடிமக்கள் குறிப்பிட்ட வகை நோய்களுக்கு மருத்துவம் செய்ய நிலையில் இருந்தால், அவர்களுக்கு வருமானவரி சட்டம் 80டிடிபி பிரிவின் கீழ் வரி விலக்கு கிடைக்கும். இதன் மூலம் ஒரு லட்சம் ரூபாய் வரை பெறலாம். இந்த விகிதமானது வரவிருக்கும்பட்ஜெட்டில் 1.5 லட்சமாக உயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
80டிடிபி சேமிப்பு சார்ந்த விலக்கு
மூத்த குடிமக்கள் வைப்புத்தொகை, சேமிப்புகள் உள்ளிட்ட பிற இனங்களுக்கு கிடைக்கும் வட்டிக்கு 50,000 ரூபாய் வரை வருமான வரிச்சட்டம் 80டிடிபி பிரிவின் கீழ் விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த விகிதமும் 1 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட வேண்டும் என்ற பலத்த எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!



Click it and Unblock the Notifications