நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024 முதல் 2025-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை ஜூலை 23-ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்ய உள்ளார். 2024-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பிறகு கூட்டணி ஆட்சி அமைத்த மோடி 3.0 அரசின் முதல் முழு பட்ஜெட் இதுவாகும். இதற்கிடையில் எதிர்பார்ப்புகளும் கோரிக்கைகளும் பல்வேறு துறைகள் முழுவதிலும் இருந்து குவிந்து வருகின்றன. இதில் நிதித் துறையைச் சேர்ந்த நிபுணர்களின் கோரிக்கைகள் குறித்து விவரிக்கிறது இந்தப் பதிவு.
வீட்டுக் கடன்களுக்கான வரி விலக்கு: வருமான வரிச் சட்டம் 80C பிரிவின் கீழ், வீடு வாங்குவதற்காக செலுத்தும் வீட்டுக் கடனுக்கான தொகைக்கு கிடைக்கும் வரிச் சலுகை தற்போது ரூ. 1.5 லட்சமாக உள்ளது. இதை ரூ. 2.5 லட்சமாக உயர்த்த வேண்டும்.

இந்த வரிச் சலுகையின் அளவு ரூ. 2.5 லட்சமாக உயர்த்தால், வீட்டுக் கடன் வாங்குபவர்களுக்கு இன்னும் அதிகமான வரிச் சலுகை கிடைக்கும். இதன் மூலம், வீட்டுக் கடனை வாங்குவது மிகவும் மலிவாகும். அதே நேரத்தில், வீடு வாங்க விரும்புபவர்களும் அதிகரிப்பார்கள். இதன் காரணமாக, ரியல் எஸ்டேட் நல்ல வளர்ச்சியடையும்.
இறக்குமதி வரியில் மாற்றங்கள்: தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 15% முதல் 10% வரை குறைக்கப்படும் என்றும், வெள்ளி இறக்குமதி வரி CEPA-வின் கீழ் தங்கத்திற்கு இணையாக இருக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள சில தங்க சுரங்கங்கள் சுத்திகரிக்கப்படாத தங்கத்தை இறக்குமதி செய்கின்றன. இவை பூஜ்ஜிய வரியின் கீழ் குறைவான வளர்ச்சியைக் கொண்ட நாடுகளில் இருந்து பெறப்படுகின்றன. இவற்றை நிறுத்துவது ஒரு சமமான களத்தை வணிகர்களிடையே அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
CEPA ஒப்பந்தத்தின் கீழ், இந்தியா மற்றொரு CEPA நாட்டிலிருந்து தங்கத்தை இறக்குமதி செய்யும் போது, குறைந்த இறக்குமதி வரி செலுத்த வேண்டியிருக்கும். இதன் மூலம் தங்கத்தின் விலை குறைந்து, நுகர்வோருக்கு பயன் கிடைக்கும்.
இன்சூரன்ஸ் துறையினர் GST வரியை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். ஒவ்வொரு முறையும் போலவே, காப்பீட்டுத் துறை அரசிடமும், நிதி அமைச்சரிடமும் சில எதிர்பார்ப்புகளை வைத்துள்ளது. இந்த துறைகளுக்குக்கான முதன்மையான கோரிக்கை, காப்பீட்டு பிரீமியங்களுக்கான GST வரியைக் குறைப்பதாகும்.
தற்போது, காப்பீட்டு பிரீமியங்களுக்கான GST 18 சதவீதமாக உள்ளது. இது மிக அதிகமாகக் கருதப்படுகிறது. மேலும் இது காப்பீடு வாங்க விரும்பும் மக்களுக்கு ஒரு தடையாக உள்ளது. GST குறைக்கப்பட்டால், அது இந்த துறைக்கு மிகவும் உதவிகரமானதாக இருக்கும்.
இரண்டாவதாக, காப்பீடுதாரர்கள் தங்கள் மருத்துவக் காப்பீட்டிற்காக அதிக வரிச் சலுகைகளைப் பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்புகளும் இருக்கின்றன.


Click it and Unblock the Notifications