இந்தியாவின் கலரே மாறப்போகுது.. நிர்மலா சீதாராமன் சொன்ன 3 ரயில்வே காரிடார்கள்.. வேற லெவல் சம்பவம்..!

பயணிகள் காத்திருப்பு பிரச்னையை புதிய 3 ரயில்வே காரிடார்கள் தீர்க்கும்: அமைச்சர் வைஷ்ணவ்

2024-25 இடைக்கால பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆற்றல், மினரல், சிமெண்ட் காரிடார்கள், துறைமுகங்கள் இணைப்பு காரிடார்கள், அதிக போக்குவரத்து காரிடார்கள் ஆகியவற்றை அறிவித்தார்.

 இந்தியாவின் கலரே மாறப்போகுது.. நிர்மலா சீதாராமன் சொன்ன 3 ரயில்வே காரிடார்கள்.. வேற லெவல் சம்பவம்..!

இடைக்கால பட்ஜெட் அறிவிப்பின் படி அடுத்த 5 ஆண்டுகளில் மூன்று மல்டி மாடல் எக்கனாமிக் காரிடார்கள் கட்டி முடிக்கப்பட்டால் பயணிகள் காத்திருப்பு பட்டியல் பிரச்னை தீரும் என்று ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.

புது டெல்லியில் செய்தியாளர்களிடம் அமைச்சர் வைஷ்ணவ் பேசுகையில், இந்த காரிடார்களுக்காக 40,000 கி.மீ. ரயில்பாதை அமைக்கப்படுகிறது. இதன் மூலம் காரிடார் நெட்வொர்க் திறனை 2030-31 நிதியாண்டுக்குள் அதிகரித்து பயணிகள் காத்திருப்பு பட்டியல் பிரச்னையை தீர்க்கலாம்.

இந்தப் புதிய 3 காரிடார்கள் மூலம் ரயில்வே துறைக்கு கூடுதல் பயணிகள் மற்றும் சரக்கு கையாளும் திறன் கிடைக்கும். இந்த மல்டி மாடல் காரிடார்கள் முழுக்க முழுக்க சரக்குப் போக்குவரத்துக்காக அர்ப்பணிக்கப்பட்டவை. சுமார் ரூ.11 லட்சம் கோடியில் இந்த காரிடார்களுக்காக 434 திட்டங்கள் உருவாக்கப்படும்.

சரக்கு ரயில்களை மட்டுமே கையாளும் பிரத்யேக சரக்கு வழித்தடங்களாக இந்த மல்டி மாடல் காரிடார்கள் இருக்கும்.
இந்த காரிடார்கள் மூலம் சாலைகளில் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசு தடுக்கப்படும். அத்துடன் துறைமுகங்களை சிறப்பாக இணைக்கும் மல்டி மோட் கடி ஷக்தி போக்குவரத்தாக இருக்கும்.

முதலாவது எரிசக்தி, உலோகம் மற்றும் சிமென்ட் காரிடார்கள் சாலைகளில் ஏற்படும் மாசுபாட்டைக் குறைக்கவும், லாஜிஸ்டிக்ஸ் செலவுகள் குறைவதை உறுதி செய்யவும் உதவும்.

இரண்டாவது துறைமுக இணைப்பு, ரயில்கள் மூலம் துறைமுகங்களுக்கு பல முறையில் தடையற்ற இணைப்பை வழங்கும். கதி சக்தி வழி.

மூன்றாவது காரிடார் அமிர்த சதுர்புஜ் ஆகும், இந்த ரயில் நெட்வொர்க்கைப் பார்த்தால் இந்தியாவின் நான்கு முனைகளை இணைப்பதோடு, பல நகரங்களையும் மத்திய பகுதியில் இருந்து இணைக்கப்படும்.

ஒட்டுமொத்தமாக, இந்த வழித்தடங்கள் மூலம், அடுத்த ஆறு முதல் எட்டு ஆண்டுகளில் சுமார் 40,000 கி.மீ. புதிய பாதைகள் அமைக்கப்படும். இதன் மூலம் ரயில்வேயின் திறன் கணிசமாக உயரும்.
ரயில்வே மிகவும் குறைந்தளவு மாசுபடுத்தும் போக்குவரத்து முறை என்பது உங்களுக்குத் தெரியும். இது 90 சதவீத கார்பன் உமிழ்வைக் குறைக்கும் என்று வைஷ்ணவ் மேலும் கூறினார்.

ரயில் போக்குவரத்து 40-50 சதவீதம் மலிவானது, எனவே ஒரு வழியில், இது நமது நாட்டின் பொருளாதாரத்தில் மாற்றத்தை கொண்டு வரும். மேலும் அதை மிகவும் திறமையாகவும், உற்பத்தி மற்றும் நிலையானதாகவும் மாற்றும்.

40,000 பெட்டிகளை வந்தே பாரத் தரத்துக்கு மாற்றுவது தொடர்பான இரண்டாவது அறிவிப்பைப் பற்றி பேசிய வைஷ்ணவ், வந்தே பாரத் மற்றும் அம்ரித் பாரத் ரயில்களின் வெற்றி மற்ற அனைத்து பெட்டிகளையும் மேம்படுத்த ரயில்வேக்கு வழி காட்டியுள்ளது.

தற்போதைய அரசின் கவனம் திறன் - மேம்படுத்துவதில் பெரிய அளவில் உள்ளது. கடந்த ஆண்டு, சுவிட்சர்லாந்தின் முழு நெட்வொர்க்குக்கும் சமமான 5,200 கி.மீ. புதிய பாதைகளை ரயில்வே சேர்த்தது. இந்த ஆண்டு நாங்கள் 5,500 கி.மீ. சேர்க்கிறோம்.

2014 இல் ஒரு நாளைக்கு 4 கி.மீ. இருந்து, இப்போது ஒரு நாளைக்கு சுமார் 15 கிமீ புதிய பாதைகளை சேர்க்கிறோம். நெட்வொர்க்குகள் வேலை செய்யும் மற்றும் நிர்வகிக்கும் விதத்தில் இது குறிப்பிடத்தக்க முன்னேற்றம் என்றார்.

நடப்பு ஆண்டில், ரயில்வே தனது கேபெக்ஸ் பட்ஜெட்டில் ஜனவரி இறுதிக்குள் ஏற்கனவே 82 சதவீதத்தை எட்டியுள்ளது என்பதை எடுத்துரைத்த அவர், 2024-25 ஆம் ஆண்டுக்கான மொத்த பட்ஜெட் ஒதுக்கீடு 2.52 லட்சம் கோடி ஆகும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+