மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்தியாவே எதிர்பார்த்துக் காத்திருக்கும் இடைக்காலப் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார், அடுத்தச் சில மாதத்தில் பொதுத் தேர்தல் நடக்க உள்ள வேளையில் இன்றைய பட்ஜெட் தாக்கலின் போது கடந்த 10 ஆண்டு மோடி அரசின் சாதனையைப் பட்டியலிட்டார்.
இதில் பலரும் கவனிக்கும் படியாக இருந்தது இந்திய மக்களை வறுமையில் மீட்டு எடுத்ததும், நாட்டின் மக்களின் வருமானத்தை உயர்த்தியதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

மத்திய அரசின் திட்டங்களான கரீப் கல்யான யோஜனா, மகிளாயே, யுவா, அன்னதாதா ஆகிய திட்டங்கள் மூலம் ஏழைகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் மீது கவனம் செலுத்தி, கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டு வர அரசு திட்டங்கள் உதவியுள்ளது என மத்திய நிதியமைச்சர் பட்ஜெட் தாக்கலின் போது தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து இந்திய மக்களின் சராசரி வருமானம் கடந்த 10 வருடத்தில் 50 சதவீதம் அதிகரித்துள்ளது. பொருளாதாரம் சிறப்பாக உள்ளது, குறிப்பாக உற்பத்தி, ஏற்றுமதி வர்த்தகம் பெரிய அளவில் உயர்ந்துள்ளது.
மேலும் நாட்டு மக்களின் சேமிப்பு, முதலீடுகள் எப்போதும் இல்லாத வகையில் மிகவும் பாதுகாப்பாக உள்ளது.
வருமான வரி சீர்திருத்த பணிகள் மூலம் நாட்டின் வரி வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும் ஜிஎஸ்டி மூலம் ஒரு நாடு, ஒரு சந்தை, ஒரு வரி என்ற கட்டமைப்பை கொண்டு உள்ளது என் நிதியைச்சர் தெரிவித்தார்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications