மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து ஆறாவது முறையாகவும், 4வது முறையாக இன்றும் டிஜிட்டல் முறையில் பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கலின் போது கடந்த 10 மோடி தலைமையிலான அரசின் சாதனைகளைப் பட்டியலிட்ட போது உலக நாடுகளைக் காட்டிலும் இந்தியா அதிகப்படியான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது என்றும் 25 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டு உள்ளதாகத் தெரிவித்தார்.
நிர்மலா சீதாராமன் பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்யும் போது, எங்களுடைய அரசு கொண்டு வந்துள்ள கொள்கைகள் நாட்டில் மதச்சார்பின்மையைச் செயல்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளது, ஊழலைக் குறைத்துள்ளது, நெப்போடிசம் தடுப்பதிஸ் அரசு கவனம் செலுத்தியது என மத்திய நிதியமைச்சர் அறிவித்தார்.

அனைவருக்குமான வளர்ச்சியை அளிக்க வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு 2014 ஆம் ஆண்டு ஆட்சியை அமைத்த நாளில் இருந்து சமூக மற்றும் புவியியல் சார்ந்த திட்டங்கள் மூலம் சப்கா சத், சப்கா விகாஸ் வளர்ச்சியை வழங்கினோம்.
உதாரணமாக கரீப், மகிளாயே, யுவா, அன்னதாதா ஆகிய திட்டங்கள் மூலம் ஏழைகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் மீது கவனம் செலுத்தி, கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டு வர அரசு திட்டங்கள் உதவியுள்ளது என மத்திய நிதியமைச்சர் பட்ஜெட் தாக்கலின் போது தெரிவித்தார்.
இந்த 10 வருடத்தில் 7 ஐஐடி, 16 ஐஐஐடி, 7 ஐஐஎம், 15 எய்ம்ஸ் மருத்துவமனைகள், 390 பல்கலைக்கழகங்கள் தொடங்கப்பட்டுள்ளன, பெண் தொழில்முனைவோருக்கு 30 கோடி முறை கடனுதவி அளிக்கப்பட்டு உள்ளது. முத்ரா கடன் திட்டத்தின் கீன் 43 கோடி இளைஞர்களுக்குத் தொழில் தொடங்க கடனுதவி வழங்கப்பட்டது என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
பிஎம் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் சுமார் 3 கோடி பேருக்கு சொந்த வீடு வாங்கும் கனவை நினைவாக்க உதவுவதை நெருங்கியுள்ளோம் என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். அடுத்த 5 வருடத்தில் 2 கோடி வீடுகளுக்குப் பிஎம் ஆவாஸ் யோஜனா திட்டம் விரிவாக்கப்படும் எனத் தெரிவித்தார்.
மேலும் 11.8 கோடி விவசாயிகளுக்கு அரசு நலத்திட்டங்கள் பலன்கள் சென்றடைந்துள்ளது என்றும், Rooftop solar திட்டம் மூலம் 1 கோடி வீடுகளுக்கு மாதம் 300 யூனிட் மின்சாரம் வழங்கப்பட்டு உள்ளது என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications