2024-25 நிதியாண்டுக்கான இடைக்காலப் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில் ஒரே அறிவிப்பில் பல துறைகளின் தேவையைப் பூர்த்தி செய்துள்ளார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
இந்திய மக்கள் அனைவருக்கும் சொந்த வீடு என்ற திட்டம் பல ஆண்டுகளாக உள்ளது, 1985ல் ராஜீவ் காந்தி இந்திரா ஆவாஸ் யோஜனா என்ற திட்டத்தின் மூலம் கிராமங்களில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள மக்களுக்கு வீடுகள் கட்டித்தரப்பட்டது.

இந்தத் திட்டம் புதுப்பிக்கப்பட்டு 2015ல் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா பெயரில் நகர்ப்புற மக்களுக்காக வழங்கப்பட்டது, 2016ல் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா ரூரல் (PMAY-R) என்ற பெயரில் இத்திட்டம் கிராமப்புற மக்களுக்காக விரிவாக்கம் செய்யப்பட்டது. சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற கனவுடன் இருந்த மக்கள் மத்தியில் பெரிய அளவிலான வெற்றி அடைந்தது.
இன்று தாக்கல் செய்யப்பட்ட 2024-25 நிதியாண்டுக்கான இடைக்காலப் பட்ஜெட் திட்டத்தில் கிராமப்புற வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா கிராமின் திட்டத்தின் கீழ் விரைவில் 3 கோடி பேருக்குச் சொந்த வீட்டு கனவு நினைவாக்கப்பட உள்ளது என நிதியமைச்சர் தெரிவித்தார்.
இந்த நிலையில் அடுத்த 5 வருடத்தில் கூடுதலாக 2 கோடி மக்களுக்குச் சொந்த வீடு கனவை இந்தத் திட்டத்தின் மூலம் நினைவாக்க உள்ளோம். இதற்காக 2024-25 ஆம் நிதியாண்டுக்குப் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்திற்கு 80,671 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு 79,590 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
இந்தியாவில் 2ஆம், 3ஆம் தர நகரங்கள் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் இந்த நேரத்தில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா கிராமின் திட்ட விரிவாக்கம் பெரிய அளவில் உதவும். குறிப்பாக மிடில் கிளாஸ் மக்கள் சொந்த வீட்டை வாங்கவோ அல்லது கட்டவோ இந்தத் திட்டம் பயன்படும்.
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் மூலம் வெறும் சொந்த வீட்டு கனவை மட்டுமே நினைவாக்கப்படுவது இல்லை, இதைத் தாண்டி இந்தியாவில் இருக்கும் வங்கிகள் பாதுகாப்பான கடன்களை அளிக்கும் ஒரு முக்கிய வழித்தடமாக உள்ளது.
வங்கிகள் எந்தவொரு கடனை காட்டிலும் மிகவும் பாதுகாப்பான கடனாகப் பார்ப்பது வீட்டுக் கடன் தான், இந்திய ரியல் எஸ்டேட் எப்படியிருந்தாலும் வளர்ச்சி பாதையில் இருக்கும், மக்கள் மத்தியில் வீடுகளுக்கு அதிகப்படியான டிமாண்ட் இருக்கும், வீடு என்பது மிகவும் எமோஷனலான விஷயம் என்பதால் மக்கள் கடனை கட்டாயம் செலுத்திடுவார்கள்.

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் மூலம் வங்கிகள் பெரும் தொகையைக் கடனாக வழங்கி வர்த்தகம் செய்ய முடியும்.
இதைத் தாண்டி ரியல் எஸ்டேட் துறையில் அதிகப்படியான ப்ளூ காலர் வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும், இதுமட்டும் அல்லாமல் சிமெண்ட், ஸ்டீல், கட்டுமான பொருட்கள், வீட்டுச் சாமான்கள் என இதன் பின்னால் பெரிய வர்த்தகமே உள்ளது.
இந்த அனைத்து துறைக்கும், வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் மூலம் மத்திய அரசு உந்துசக்தி கொடுத்துள்ளது. மேலும் அடுத்த 5 வருடத்திற்குக் கிராமப்புற ரியல் எஸ்டேட் ஓகோன்னு வளரப்போகிறது..!
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!

சட்டமன்ற தேர்தல் 2026: உங்களின் Booth Slip-ஐ ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி?



Click it and Unblock the Notifications