சென்னை: விலைவாசி உயர்வு காரணமாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கும் சூழலில், வரவிருக்கும் மத்திய அரசின் பட்ஜெட் 2024ல் குறைந்த வருவாய் ஈட்டும் குடிமக்களுக்கான வருமான வரி சலுகைகளில் கவனம் செலுத்தக்கூடும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும், மக்களின் நுகர்வு அதிகரிப்பதற்கும் வழிவகை செய்ய குறைந்த வருமானத்தை கொண்டிருப்போருக்கான வரிச்சலுகைகள் அமல்படுத்தப்படலாம் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
வரிச்சுமையைக் குறைப்பது பொருளாதாரத்தை வலுப்படுத்துமா?: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை ஜூலை 23 ஆம் தேதி தாக்கல் செய்ய உள்ள நிலையில், வருமான வரி சீர்திருத்தங்கள் குறித்த விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

தற்போதைய வரி முறைப்படி, ரூ.15 லட்சத்திற்கு மேற்பட்ட வருமானத்திற்கு 30% வரி விதிக்கப்படுகிறது. இது மிக அதிகமான வரிச்சுமை என்பது குறிப்பிடத்தக்கது. ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.15 லட்சம் வரை வரி விகிதங்கள் கடுமையாக உயரும் நிலை உள்ளது. இதனை சீரமைப்படுத்தி படிப்படியாக வரி விகிதங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.
கேஷ் கரோ மற்றும் எர்ன் கரோ நிறுவனத்தின் இணை நிறுவனர் ரோஹன் பர்கவா கூறுகையில், "ரூ.3 லட்சத்திற்கு கீழ் வருமானம் ஈட்டுபவர்களிடமிருந்து எந்த வரியும் வசூலிக்கப்படாமல், வரி விலக்கு உச்சவரம்பை ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும். இதன் மூலம், குறைந்த வருமானம் ஈட்டுபவர்களின் கையில் அதிகமான பணம் கிடைக்கும். இது நுகர்வோர் செலவை அதிகரிப்பதற்கும், நடுத்தர வர்க்கத்தினர் சேமிப்பை அதிகரிப்பதற்கும், ஈகாமர்ஸ் துறை வளர்ச்சிக்கும் முக்கிய வளர்ச்சி படியாக அமையும்." என தெரிவித்துள்ளார்.
நலத்திட்ட திட்டங்களுக்கு பதிலாக வரிச்சலுகைகளுக்கு முக்கியதுவம்: பட்ஜெட் குறித்து தற்போது வெளியாகியுள்ள அறிவிப்புகள் படி, மத்திய அரசு மக்கள் நலத்திட்ட திட்டங்களை விட, குறைந்த வருமானத்தினருக்கான வரிச்சலுகைகளுக்கு வரவிருக்கும் பட்ஜெட் முன்னுரிமை அளிக்கக்கூடும். இதன் மூலம், மக்களின் கையில் இருக்கும் பணம் அதிகரித்து, அவர்களை அதிகமான பொருட்களை வாங்குவதற்கு ஊக்குவிப்பதன் மூலம் பொருளாதாரம் மற்றும் வர்த்தக வளர்ச்சியை வலுப்படுத்த வழிவகுக்கும்.
தற்போதைய வரி முறைப்படி, ரூ.3 லட்சத்திற்கு மேற்பட்ட வருமானத்திற்கு 5% வரி விதிக்கப்படுகிறது. இது படிப்படியாக உயர்ந்து, ரூ.15 லட்சத்திற்கு மேற்பட்ட வருமானத்திற்கு 30% வரி விதிக்கப்படுகிறது. இந்த வரி முறைப்பாட்டை மறுசீரமைப்படுத்தி, குறைந்த வருமானத்தினருக்கான வரிச்சலுகைகள் வழங்கினால் இந்த பட்ஜெட் வரலாற்று சிறப்பானதாக இருக்கும்.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications