மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தனது 7வது பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்கிறார், இந்த பட்ஜெட் 2047 ஆம் ஆண்டிற்குள் விக்சித் பாரத் அதாவது வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான அடித்தளத்தை அமைக்கும் பட்ஜெட்டாக இருக்கும். எப்போதும் போலவே இந்த பட்ஜெட்டும் வருமான வரியில் தளர்வு குறித்த எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தாலும், நிர்மலா சீதாராமன் இது தொடர்பான சாதகமான அறிவிப்புகளை வெளியிடுவது சந்தேகம் தான். இதற்கிடையில் பட்ஜெட்டில் அனைவரும் கவனிக்க வேண்டிய முக்கிய எண்கள் இதுதான்.
நிதி பற்றாக்குறை: பட்ஜெட்டில் மிக முக்கியமான பகுதி, அரசின் நிதி பற்றாக்குறை அளவீடு குறித்த அறிவிப்பு தான். நடப்பு நிதியாண்டிற்கான நிதி பற்றாக்குறை இடைக்கால பட்ஜெட்டில் கணிக்கப்பட்டபடி நாட்டின் ஜிடிபி-யில் 5.1 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த நிதியாண்டின் 5.8 சதவீதத்தை விட குறைவு. மத்திய அரசின் வரி வருவாய் அதிகரித்து வருவதால், முழு பட்ஜெட்டில் இந்த எண்ணிக்கை மேம்படுத்தப்பட வாய்ப்புள்ளது. 2026 நிதியாண்டுக்குள் நாட்டின் மொத்த நிதி பற்றாக்குறை அளவீட்டை மொத்த GDP-யில் 4.5 சதவீதமாகக் குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மூலதன செலவினங்கள்: நாட்டின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி வரும் அரசு, இந்த நிதியாண்டிற்கான மூலதன செலவினத்தை ரூ.11.1 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இது கடந்த நிதியாண்டின் ரூ.9.5 லட்சம் கோடியை விட அதிகமாகும். மாநிலங்களையும் தங்கள் மூலதன செலவினங்களை அதிகரிக்க ஊக்குவித்து வரும் மத்திய அரசு முழு பட்ஜெட் திட்டத்திலும் மூலதன செலவினத்தை அதிகரிக்குமா என்பதைப் பார்க்க வேண்டும்.
வரி வருவாய்: 2024-25 நிதியாண்டிற்கான மொத்த வரி வருவாய் ரூ.38.31 லட்சம் கோடியாக இருக்கும் என இடைக்கால பட்ஜெட்டில் மதிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்த நிதியாண்டை விட 11.46 சதவீதம் அதிகரிப்பு. இதில், நேரடி வரிகள் (தனிநபர் வருமான வரி + கார்ப்ரேட் வரி) மூலம் ரூ.21.99 லட்சம் கோடியும், மறைமுக வரிகள் (சுங்க வரி + கலால் வரி + ஜிஎஸ்டி) மூலம் ரூ.16.22 லட்சம் கோடியும் வரவு வைக்கப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி: சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் 2024-25 நிதியாண்டில் 11.6 சதவீதம் அதிகரித்து ரூ.10.68 லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2024-25 நிதியாண்டிற்கான முழு பட்ஜெட்டில் வரி வருவாய் எண்ணிக்கைகள் கவனிக்கப்பட வேண்டியவை.
கடன் வாங்குதல்: இடைக்கால பட்ஜெட்டின்படி, நடப்பு நிதியாண்டிற்கான அரசின் மொத்த கடன் வாங்கும் தொகை ரூ.14.13 லட்சம் கோடியாக இருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசு தனது நிதியாண்டுக்கான பட்ஜெட்டின் நிதி குறைபாட்டைச் சரி செய்ய அரசு சந்தையிலிருந்து கடன் வாங்குகிறது. ரிசர்வ் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் லாபத்தை விட நிதி தேவை அதிகமாக இருப்பதால், கடன் வாங்க வேண்டிய நிலை உள்ளது.
மொத்த தேசிய உற்பத்தி (Nominal GDP): நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் மொத்த ஜிடிபி (ரியல் ஜிடிபி + பணவீக்கம்) 10.5 சதவீதமாக இருக்கும் என இடைக்கால பட்ஜெட்டில் மதிப்பிடப்பட்டுள்ளது. இது ரூ.327.7 லட்சம் கோடிக்கு சமமாகும். இந்த நிதியாண்டில் நாட்டின் நிலையான பருவமழை, வருவாய் வசூல் அதிகரிப்பு மற்றும் கிராம பகுதிகளில் நுகர்வு அதிகரிப்பு ஆகியவற்றின் மூலம் இதற்கான கணிப்புகள் அதிகரிக்கப்பட்டு உள்ளது. நடப்பு நிதியாண்டில் ரியல் ஜிடிபி அளவீடு 7.2 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது.
ஈவுத்தொகை: இடைக்கால பட்ஜெட்டில் ரிசர்வ் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து நடப்பு நிதியாண்டில் மட்டும் சுமார் ரூ.1.02 லட்சம் கோடி அளவிலான ஈவுத்தொகை எதிர்பார்க்கப்படுகிறது. ரிசர்வ் வங்கி ஏற்கனவே மே மாதத்தில் ரூ.2.11 லட்சம் கோடி உபரி தொகையைச் செய்துள்ள நிலையில், CPSEகள் அதாவது பொதுத்துறை நிறுவனங்களிடம் இருந்து 43,000 கோடி ரூபாய் உபரி நிதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications