இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இதனால் பலருக்கும் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. நாட்டு மக்கள், தொழில் துறையினர், ஊழியர்கள் போன்ற அனைவருக்கும் இந்த பட்ஜெட்டில் சில கோரிக்கைகள் உள்ளன. மேலும் இந்த பட்ஜெட்டில் வரி குறைப்பு அறிவிப்புகள் வெளியாகுமா? என்ற எதிர்பார்ப்பில் சாமானிய மக்கள் காத்திருக்கின்றனர்.
மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்த மோடி 3.0 அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. இதில் ஜிஎஸ்டி மாற்றங்கள், வரிசலுகைகள், வேலைவாய்ப்பு அதிகரிப்பு என பல்வேறு எதிர்பார்ப்புகள் மக்களிடையே உள்ளன.

நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான NDA கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. ஐக்கிய ஜனதா தளம் கட்சி மற்றும் ஆந்திராவின் தெலுங்கு தேசம் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளின் ஆதரவுடன் தற்போது பாஜக தலைமையிலான அரசு ஆட்சியைப் பிடித்திருக்கிறது. இந்நிலையில் இந்த பட்ஜெட்டில் நிறைய மாற்றங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது.
2023-ஆம் ஆண்டு பட்ஜெட்டிலே தனி நபர் வருமான வரி வரம்பு ரூ. 2.5 லட்சம் ரூபாயிலிருந்து ரூ. 3 லட்சமாக உயர்த்தப்பட்டது. மேலும் பிரிவு 87-A பிரிவின் படி 7 லட்ச ரூபாய் வரை வரி விலக்கு பெற முடியும்.
புதிய வருமான வரி விகிதங்கள்:
ரூ. 2,50,000 லட்சத்திற்கு 0% வரி
ரூ. 2,50,001 முதல் ரூ. 3,00,000 வரை 0% வரி
ரூ. 3,00,001 முதல் ரூ. 5,00,000 வரை 5% வரி
ரூ. 500,001 முதல் ரூ. 6,00,000 வரை 5% வரி
ரூ. 6,00,001 முதல் ரூ. 9,00,000 வரை 10% வரி
ரூ. 9,00,001 முதல் ரூ. 10,00,000 வரை 15% வரி
ரூ. 10,00,001 முதல் ரூ. 12,00,000 வரை 15% வரி
ரூ. 12,00,000 முதல் ரூ. 15,00,000 வரை 20% வரி
ரூ. 15,00,0001-க்கு மேல்
யூனியன் பட்ஜெட் 2023-2024-இல் என்ன எதிர்பார்க்கப்படுகிறது?: தற்போது இந்த மூன்று லட்சம் என்ற வரி விலக்கு வரம்பை மூன்று லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்த வேண்டும் மேலும் வரி விலக்கு ஸ்லாப்களில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வரி விலக்கு வரம்பை 7.5 லட்சத்திலிருந்து 10 லட்சம் ஆக உயர்த்துவதும் நடுத்தரவர்க்க மக்களிடம் சேமிப்பு மற்றும் முதலீடுகளை ஊக்குவிக்கும்.
ரூ.15 லட்சத்திற்கு மேற்பட்ட வருமானம் கொண்ட வரி செலுத்துபவர்கள் இன்னும் பழைய முறையையே கடைப்பிடித்து வருகின்றனர். அரசாங்கம் அவர்களையும் புதிய வரி முறைக்கு மாற்றுவதற்கான வழிவகைச் செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, புதிய வரி முறையில் ரூ.15 லட்சம் முதல் ரூ.18 லட்சம் வரையிலான வருமானம் பெறுபவர்களுக்கு 25 சதவீத வரி விகிதம் இருக்கலாம் என்று Tax Connect Advisory Services LLP-இன் பங்குதாரரான விவேக் ஜலான் கூறியுள்ளார்.
இன்னும் சற்று நேரத்தில் இது குறித்து அறிவிப்புகள் வெளியாக உள்ளது. பார்ப்போம் இது சாமானிய மக்களுக்கான பட்ஜெட் தானா என்று!
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications