2024-25 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1 ஆம் தேதியன்று தாக்கல் செய்வார். சில ஆண்டுகள் முன்புவரை இந்த பட்ஜெட் பிப்ரவரி மாதம் கடைசி தேதியில்தான் தாக்கல் செய்யப்பட்டு வந்தது.
ஆனால் இந்த வழக்கம் 2017 ஆம் ஆண்டில் மாற்றப்பட்டது. பிப்ரவரி 1க்கு பதிலாக மாதக்கடைசியில் மாற்றப்பட்டது ஏன் தெரியுமா?
2017இல் மத்திய நிதியமைச்சராக இருந்த அருண் ஜேட்லி காலனி காலத்தில் பிப்ரவரி மாதத்தின் கடைசி வேலைநாளில் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. ஆனால் இனி அப்படி செய்யப்படாது என்று அறிவித்தார்.

காலனி கால வழக்கத்தை விட்டொழிக்கும் வகையில் இந்த மாற்றம் செய்யப்பட்டதாகத் தெரிவித்தார். மாதக் கடைசியில் பட்ஜெட் அறிவிப்புகளை அடுத்த நிதியாண்டில் ஏப்ரல் 1 முதல் நடைமுறைப்படுத்துவதற்கு சிக்கல் இருப்பதால் மாற்றம் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இந்தச் சிக்கலைத் தவிர்க்க 2017 பட்ஜெட்டை பிப்ரவரி முதல் தேதியன்று தாக்கல் செய்யலாம் என்று அருண் ஜெட்லி தான் கருத்து கூறினார்.
பட்ஜெட் தேதி மட்டுமல்ல, 92 ஆண்டுகாலமாக ரயில்வேக்குத் தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. இதை மாற்றி ரயில்வே பட்ஜெட்டை பொது பட்ஜெட்டுடன் அருண் ஜேட்லி இணைத்தார்.
1999 வரை மத்திய பட்ஜெட் பிப்ரவரி கடைசி தேதியில் மாலை 5 மணிக்குத்தான் தாக்கல் செய்யப்பட்டது. நாடு விடுதலை ஆனபின்னரும் இந்த வழக்கம் மாற்றப்படவில்லை. காலனி ஆதிக்கக் காலத்தின் போது இங்கிலாந்தில் நண்பகல் 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இது இந்திய நேரப்படி மாலை 5 மணியாகும்.
1999இல் அப்போதைய அடல் பிஹாரி வாஜபேயின் தலைமையிலான அரசில் நிதியமைச்சராக இருந்த யஷ்வந்த் சின்ஹா நண்பகல் 11 மணிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்யலாம் என்றார். இதன் மூலம் பட்ஜெட் பற்றி ஆய்வு செய்வதற்கும் விவாதிப்பதற்கும் நிறைய கால அவகாசம் கிடைக்கும் என்று கூறினார்.
அவரது யோசனைக்கு ஒப்புதல் கிடைத்ததால் பிரிட்டிஷ் வழக்கத்தை உடைத்து 1999 மத்திய பட்ஜெட்டை சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதன்முறையாக நண்பகல் 11 மணிக்கு சின்ஹா தாக்கல் செய்தார். அதன் பின்னர் ஒவ்வொரு ஆண்டும் நண்பகல் 11 மணிக்குத்தான் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.
தற்போது முதன்முறையாக மத்தியில் ஆளும் பாஜக அரசு பிப்ரவரி 28 ஆம் தேதியன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் முறையை மாற்றி பிப்ரவரி 1 ஆம் தேதியன்று தாக்கல் செய்கிறது. பொது பட்ஜெட்டைத் தயாரிக்கும் பணிகள் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தலைமையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications