நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதனை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்த நரேந்திர மோடி 3.0 அரசின் முதல் பட்ஜெட் இதுவாகும். எனவே இந்த பட்ஜெட்டில் பல்வேறு துறையினர்களுக்கும் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்தப் பதிவில் பல்வேறு துறைகளுக்கான எதிர்பார்ப்புகள் மற்றும் அவை பூர்த்தி செய்யப்பட்டால் அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்த விவரங்களை விரிவாகப் பார்ப்போம்.
தேர்தல் முடிவுகள் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் மோடி தலைமையிலான அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. இதை அடுத்து ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதாரம் கொண்ட இந்தியாவில் மக்களுக்கு பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இதில் தனிநபர் வரி குறைப்பு மற்றும் நுகர்வோர் சார்ந்த துறைகளில் மாற்றங்கள் ஆகியவை அடங்கும்.

இந்தியாவில் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க நுகர்வோர் செலவை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். தற்போது நாம் செலுத்தும் வருமான வரி குறைக்கப்படலாம். இதன் மூலம் நம் கையில் இருக்கும் பணம் அதிகரிக்கும். கையில் இருக்கும் பணத்தை நாம் சந்தையில் தேவைப்படும் பொருட்களை வாங்க செலவு செய்தால், உற்பத்தி நிறுவனங்கள் அதிகமாக உற்பத்தி செய்ய வேண்டி இருக்கும். இதனால் படிப்படியாக பொருளாதார வளர்ச்சி ஏற்படும்.
இதுபோன்ற நடவடிக்கை பட்ஜெட்டில் எடுக்கப்பட்டால் நுகர்வோர் பொருட்கள் தயாரிப்பாளர்கள், ரியல் எஸ்டேட் மற்றும் நிதி நிறுவனங்கள் பயனடையலாம். ஆனால் சில துறைகள் சவால்களை எதிர்கொள்ளக் கூடும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
கிராமப்புற துறைகள்: நுகர்வோர் பொருட்கள் தயாரிப்பாளர்கள் மற்றும் இருசக்கர வாகன உற்பத்தியாளர்கள் ஆகியோருக்கு பயனளிக்கும் வகையில், கிராமப்புற திட்டங்களுக்கான நிதியை அரசு அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று சிட்டி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஹிந்துஸ்தான் யுனிலீவர், டிவிஎஸ் மோட்டார் மற்றும் ஹீரோ மோட்டோகார்ப் போன்ற நிறுவனங்கள் பயனடையும். மேலும், புகையிலை வரியை அதிகரிப்பது இந்தியாவின் மிகப்பெரிய சிகரெட் தயாரிப்பாளரான ஐடிசி நிறுவனத்தை நேர்மறையாக பாதிக்கும் என்று ஜெஃப்ரீஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
ஆட்டோமொபைல் நிறுவனங்கள்: மின்சார வாகன (EV) பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா ரூ.115 பில்லியன் மதிப்பிலான மானியங்களை வழங்கியுள்ளது. இதன் மூலம் டாடா மோட்டார்ஸ், ஓலா எலக்ட்ரிக், ஒலெக்ட்ரா கிரீன்டெக் மற்றும் ஜேபிஎம் ஆட்டோ போன்ற நிறுவனங்கள் பயனடையும்.
மக்கள் அனைவரும் EV வாகனங்களுக்கு மாற முற்பட்டால் பிற கார்களின் தயாரிப்பில் சில பாதிப்புகள் ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது.
ரியல் எஸ்டேட்: மலிவு விலை வீடுகளுக்கான நிதியை இந்த பட்ஜெட் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் மெட்ரோடெக் டெவலப்பர்ஸ் மற்றும் பிற கட்டுமான நிறுவனங்கள் பயனடையும் என்று சிட்டி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், நகர்ப்புற வீடுகளுக்கான வட்டி மானிய திட்டம் ஆவாஸ் ஃபினான்சியர்ஸ் மற்றும் ஹோம் ஃபர்ஸ்ட் ஃபினான்ஸ் போன்ற நிதி நிறுவனங்களையும் மேம்படுத்தும் என்று ஜெஃப்ரீஸ் நிறுவனம் கருதுகிறது.
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாக உள்ளது. எந்த துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்படுகிறது, மேலும் அவற்றின் தாக்கங்கள் பிற துறைகளில் எவ்வாறு இருக்கும் என்பது நாளை தெரிந்து விடும்.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications