மோடி அரசு தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக அதன் டிஸ்இன்வெஸ்ட்மென்ட் இலக்குகளை, அதாவது அரசு சொத்துக்களைத் தனியாருக்கு விற்க அல்லது நீண்ட காலக் குத்தகைக்கு விடும் இலக்கை தவறவிடக்கூடும் எனத் தெரிகிறது.
மத்திய அரசு, தேர்தல் நெருங்கி வரும் வேளையில் இடைக்காலப் பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 2023-24 ஆம் நிதியாண்டில் Disinvestment டார்கெட்டாக 50000 கோடி ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில், இதை 30000 கோடி ரூபாயாக பட்ஜெட் மூலம் திருத்தியுள்ளது. 2024-25 ஆம் நிதியாண்டுக்கு 50000 கோடி ரூபாயாக குறைத்து இன்று அறிவித்துள்ளார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

மத்திய அரசு 2024 ஆம் நிதியாண்டில் திட்டமிடப்பட்ட டிஸ்இன்வெஸ்ட்மென்ட் வருமான இலக்கில் பாதியைக் கூட எட்ட முடியாத அளவுக்குக் கடுமையான சவால்களை அரசு எதிர்கொள்கிறது.
நிதியமைச்சர் நடப்பு நிதியாண்டின் பட்ஜெட்டில் பங்கு விலக்கல் (divestment) கீவ் தோராயமாக ரூ.51,000 கோடி நிதியை திரட்டும் இலக்கை அறிவித்தார். ஆனால் DIPAM இணையதளத்தின்படி, நடப்பு நிதியாண்டில் மத்திய அரசு ரூ.10,051.73 கோடியை மட்டுமே ஈட்டியுள்ளது.
அரசு சொத்துக்களைத் தனியாருக்கு நீண்ட காலமாகக் குத்தகைக்கு விடுவதன் மூலம் அரசு சொத்துக்கள் சிறப்பாகப் பயன்படுத்த முடியும். இதனால் நாட்டின் பொருளாதாரம், வர்த்தகம், வேலைவாய்ப்பு ஆகியவை மேம்படுத்தப்படும் என நோக்கில் divestment திட்டத்தை மத்திய அரசு கையில் எடுத்தது.
ஆனால் அரசு சொத்துக்களைப் பணமாக்கும் முயற்சிகளில் பல கடுமையான சவால்கள் இருப்பதால் மோடி அரசால் ஐந்தாவது ஆண்டாக அதன் டிஸ்இன்வெஸ்ட்மென்ட் இலக்குகளை எட்ட முடியாத நிலை உருவாகியுள்ளது. 2024-25 ஆம் நிதியாண்டுக்கான பணமாக்கும் முயற்சி டார்கெட் எவ்வளவு இருக்கும் என்பது முக்கியக் கேள்வியாக உள்ளது.


Click it and Unblock the Notifications