மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏழாவது முறையாக நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை நாளை தாக்கல் செய்ய உள்ள நிலையில், ஜூலை 22 (இன்று), திங்கள்கிழமை மதியம் 2:30 மணிக்குப் பொருளாதார ஆய்வறிக்கையைத் தாக்கல் செய்ய உள்ளார். இந்திய வரலாற்றில் முதல் முறையாக 7 முறை பட்ஜெட் தாக்கல் செய்யப்போகிறார் நிர்மலா சீதாராமன், இதோடு நரேந்திர மோடியின் 3 ஆட்சியிலும் நிதியமைச்சராக இருந்துள்ளார் நிர்மலா சீதாராமன்.
இதுகுறித்து நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகம் கிரண் ரிஜிஜு கூறுகையில், "இந்திய பொருளாதார ஆய்வு 2024 அறிக்கையை ஜூலை 22 ஆம் தேதி திங்கட்கிழமை நாடாளுமன்றத்தின் தாக்கல் செய்யப்படுகிறது. இதோடு ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கான பட்ஜெட் 2024 ஆம் ஆண்டு ஜூலை 23 ஆம் தேதி தாக்கல் செய்யப்படும். இந்த நாடாளுமன்ற அமர்வின் போது 6 சட்டப்பூர்வ அலுவல்களும், 3 நிதி விவகாரங்களும் விவாதத்திற்கு ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளன" என்று தெரிவித்துள்ளார்.

மே மாதம் மூன்றாவது முறையாகப் பதவியேற்ற பிறகு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு முதல் முக்கிய கொள்கை அறிவிப்பாக வரவிருக்கும் பட்ஜெட் இருக்கப்போகிறது. இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை மிகவும் அதிகமாக இருக்கும் வேளையிலும், பிற முக்கிய பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் வகையில் இந்த பட்ஜெட் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொருளாதார ஆய்வறிக்கை (Economic Survey) என்றால் என்ன?:
பொருளாதார ஆய்வறிக்கை என்பது மத்திய நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறையின் பொருளாதார பிரிவினால் தயாரிக்கப்பட்டு, தலைமை பொருளாதார ஆலோசகரின் மேற்பார்வையில் உருவாக்கப்படும் ப்ரி பட்ஜெட் (pre-Budget) ஆவணம் தான் இந்த பொருளாதார ஆய்வறிக்கை.
இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் பொருளாதார ஆய்வறிக்கையில் 2023-24 (ஏப்ரல் 2023-மார்ச் 2024) நிதியாண்டில் நாட்டின் பொருளாதார நிலை மற்றும் பல்வேறு இன்டிகேட்டர்கள் பற்றிய விரிவான விபரங்களை வழங்கும். மேலும், இது நடப்பு ஆண்டிற்கான (2024-25) பட்ஜெட் அறிக்கையின் தன்மை மற்றும் அமைப்பு தொடர்பான சில பார்வையை வழங்கும்.

பொருளாதார ஆய்வறிக்கை ஆவணம் 1950-51 ஆம் ஆண்டில் இருந்து பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பு அதை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் வழக்கும் இருந்து வருகிறது. அப்போது, இது பட்ஜெட் ஆவணங்களின் ஒரு பகுதியாக இருந்தது. 1960 களில், இது பட்ஜெட் ஆவணங்களில் இருந்து பிரிக்கப்பட்டு, மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முந்தைய நாளில் தனித்தனியாகச் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த பொருளாதார ஆய்வறிக்கையில் பொதுவாக, துறை சார்ந்த வளர்ச்சி அளவீடுகளைத் தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்து பட்டியலிடும். அதேபோல் நாட்டின் பொருளாதார மற்றும் வர்த்தக வளர்ச்சிக்கு ஏற்ப புதிய பிரிவுகளை இதில் சேர்க்கப்பட்டு பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்படும்.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications