2024-25 ஆம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை அறிவிக்கும் போது, வருமான வரியில் எவ்விதமான மாற்றத்தை அறிவிக்காதது சாமானிய மக்களுக்கு ஏமாற்றமாக இருந்தாலும், பொருளாதார ரீதியிலும், வளர்ச்சிக்கும், நாட்டின் நிதி நிலை மேம்பாட்டிற்கும் முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நிதி பற்றாக்குறை அளவீட்டை முந்தைய ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.8 சதவீதத்தில் இருந்து 2024-25 ஆம் ஆண்டில் 5.1% ஆகக் குறைத்து அறிவித்துள்ளார்.

இதன் மூலம் நாட்டின் வருமானம் அதிகரித்துச் செலவுகள் குறைவதை இந்த ஒரு அறிவிப்பின் மூலம் உறுதி செய்துள்ளார். இந்த நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் டிசம்பர் முதல் டிசம்பர் வரையிலான இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை ரூ.9.82 லட்சம் கோடியாக உள்ளது, அதாவது ஆண்டு மதிப்பீட்டில் 55% என்று அரசுத் தகவல்கள் புதன்கிழமை தெரிவித்துள்ளன.
இதேபோல் 2024-25 ஆம் நிதியாண்டில் நாட்டின் மொத்தக் கடன் மதிப்பு 14.13 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது, இது 2023-24 ஆம் நிதியாண்டை விடவும் மிகவும் குறைவாகும்.
இதேபோல் 2024-25 ஆம் நிதியாண்டுக்கு நாட்டின் மொத்த மூலதன செலவின அளவு கடந்த ஆண்டை காட்டிலும் 11.1 சதவீதம் அதிகரித்து 11.11 லட்சம் கோடி ரூபாயாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் இன்பார திட்டத்திர்கு மட்டுமே நாட்டின் மொத்த ஜிடிபியில் சுமார் 3.4 சதவீத அளவான 1.11 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்ட்ட உள்ளது.
1 லட்சம் கோடி ரூபாய் நிதியை R&D துறையில் சன்ரைஸ் திட்டத்தில் முதலீடு செய்வதாக மத்திய அரசு தெரிவித்துள்ளகது.
இந்தப் பட்ஜெட் அறிவிப்பில் சிறப்பான விஷயமாகப் பார்க்கப்படுவது நிதி பற்றாக்குறை குறைக்கப்பட்டு உள்ளது, கடன் பெறும் அளவு குறைக்கப்பட்டு உள்ளது, இன்பார முதலீடுகள் தான். இது அனைத்தும் முதலீட்டு சந்தைக்குச் சாதகமாக அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications