நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25ஆம் நிதியாண்டுக்கான இடைக்காலப் பட்ஜெட்டை பிப்ரவரி 1, 2024 அன்று தாக்கல் செய்கிறார். இந்த ஆண்டுப் பொதுத் தேர்தல் நடக்கும் காரணத்தால் அரசாங்கம் முழுப் பட்ஜெட்டை தாக்கல் செய்யாது, அதற்குப் பதிலாக, இடைக்காலப் பட்ஜெட்டைத் தயாரித்து நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யத் தயாராக உள்ளது.
ஒவ்வொரு முறை பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் போதும், மக்களின் மிக முக்கியமான எதிர்பார்ப்பு வருமான வரி குறையுமான என்பது தான். பொருட்கள் மற்றும் சேவை மீதான வரி அறிவிப்புகளை ஜிஎஸ்டி கூட்டத்தில் முடிவு செய்யப்படும் வேளையில், பட்ஜெட்டில் இதற்கான இடம் குறைந்துள்ளது. இதனால் பட்ஜெட் என்றால் வளர்ச்சி திட்டங்களுக்கான அறிவிப்பு, மூலதனம் அதிகரிப்பு வருமான வரி அதிகரிப்பு ஆகியவை தான் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.

மத்திய அரசு புதிய வருமான வரி முறையைத் தாக்கல் செய்ததில் இருந்து பெரும்பாலான மக்களுக்கு இதில் குழப்பம் அதிகமாகவே உள்ளது. பலர் பழைய முறையை அப்படியே பாலோ செய்துகொள்வோம் என்றும், இன்னும் சிலர் தங்களுக்கான வரிப் பலன்களைத் தெரிந்துகொள்ளாமல் புதிய முறையைத் தேர்வு செய்வது எனப் பல்வேறு தவறுகளைத் தெரிந்தும் தெரியாமல் செய்து வருகின்றனர்.
பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள இடைக்காலப் பட்ஜெட் அறிக்கையில் மத்திய அரசு ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்தின் வரிச் சலுகை உயர்த்தவோ அல்லது தனிப் பிரிவாகப் பிரித்துச் சலுகை அளிக்கும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதேபோல் Standard Deduction பிரிவில் வரி சலுகையை அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
யூனியன் பட்ஜெட் 2023 இல் அறிவிக்கப்பட்ட மாற்றங்களின்படி, புதிய வரி முறையின் கீழ் ஆண்டு வருமானம் 7 லட்சம் ரூபாய் வரை உள்ளவர்களுக்கு எந்த வரியும் விதிக்கப்படாது. இதன் மூலம் உங்களுக்கு 7 லட்சம் ரூபாய்க்குக் கீழ் வருமானம் இருந்தால், புதிய வரி முறை சிறந்தது. ஏனெனில் 7 லட்சம் ரூபாய் வரை வரி இல்லை, மேலும் புதிய வரி முறையில் ₹50,000 நிலையான விலக்கு என அழைக்கப்படும் standard deduction சலுகையும் உள்ளது.
புதிய வரிப் பலகைகள்
3 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 0 சதவீத வரி
3 முதல் 6 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 5 சதவீதம் வரி விதிக்கப்படும்
6 முதல் 9 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 10 சதவீதம் வரி விதிக்கப்படும்
15 சதவீதத்தில் ₹9 முதல் 12 லட்சம் வரை வருமானம்
20 சதவீதத்தில் ₹12 முதல் 15 லட்சம் வரை வருமானம்
₹15 லட்சம் மற்றும் அதற்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு 30 சதவீதம் வரி விதிக்கப்படும்.
பழைய வரி அடுக்குகள்
பழைய வரி முறையின் கீழ் 2.5 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
₹2.5 முதல் ₹5 லட்சம் வரை வருமானம் இருந்தால், பழைய வரி முறையின் கீழ் 5 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது.
தனிநபர் வருமானம் ₹5 லட்சம் முதல் ₹7.5 லட்சம் வரை பழைய ஆட்சியில் 15 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது.
₹7.5 லட்சம் முதல் ₹10 லட்சம் வரையிலான வருமானத்துக்குப் பழைய ஆட்சியில் 20 சதவீதம் வரி விதிக்கப்பட்டது.
பழைய ஆட்சியில் ₹10 லட்சத்துக்கு மேல் தனிநபர் வருமானத்துக்கு 30 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது.
புதிய வரி முறையின் கீழ் 2023-24 நிதியாண்டு அல்லது 2024-25 கணக்கீடு ஆண்டு வருமான வரி செலுத்தும் போது வருடம் 7 லட்சம் வரையில் 0 சதவீதம் வரி சலுகையைப் பயன்படுத்த முடியும். 2022-23 நிதியாண்டு அல்லது 2023-24 கணக்கீடு ஆண்டுக்கு மேல குறிப்பிட்ட வரிப் பலகை பொருந்தும்.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications