2024-25 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் தேதி நெருங்கி வரும் வேளையில், பட்ஜெட் அறிக்கையின் இறுதிக் கட்ட தயாரிப்பு பணிகளை குறிக்கும் மத்திய நிதியமைச்சகத்தின் அல்வா தயாரிக்கும் விழா செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தின் நார்த் பிளாக்கில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னிலையில் நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தயாரிப்பின் "லாக்-இன்" காலம், அதாவது பட்ஜெட் தயாரிக்கும் பணிகள் முடிவடைந்து, அதனை நாடாளுமன்றத்தில் இருக்கும் சிறப்பு பிரின்டிங் பிரஸ்-ல் அச்சிடும் பணிகள் துவங்கும் காலத்தில் இப்பணியைத் துவங்கி - நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்வது வரையிலான காலகட்டம்.

இந்த லாக்-இன் காலம் துவங்குவதற்கு முன்பு நடக்கும் ஒரு முக்கிய நிகழ்வு தான் இந்த ஹல்வா விழா, இது ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தயாரிப்பு பணிகளை நிறைவுற்றதைக் குறிக்கும் வகையில் நடக்கிறது.
அந்த வகையில் இன்று நடைபெற்ற ஹல்வா விழா நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தவிர, அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, தலைமை பொருளாதார ஆலோசகர் வி ஆனந்த நாகேஸ்வரன், நிதிச் செயலர் டி.வி.சோமநாதன், டி.இ.ஏ செயலர் அஜய் சேத் போன்ற நிதியமைச்சகத்தின் மூத்த உறுப்பினர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.
ஹல்வா விழா என்பது நாடாளுமன்றத்தில் யூனியன் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு ஐந்து நாட்களுக்கு முன்பு நடக்கும் ஒரு சிறப்பு நிகழ்ச்சிபட்ஜெட் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு "ஹல்வா" (இனிப்பு) தயாரித்து வழங்குவதே இந்த விழா.
முன்னாள் இந்திய நிதியமைச்சர் மொரார்ஜி தேசாய்-ன் சாதனையை முறியடித்து, தொடர்ச்சியாக 7 பட்ஜெட்டுகளை தாக்கல் செய்த முதல் நிதியமைச்சர் என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் ஜூலை 23 ஆம் தேதி செய்யும் பட்ஜெட் மூலம் பெற உள்ளார். மன்மோகன் சிங், அருண் ஜெட்லி, ப சிதம்பரம் மற்றும் யஷ்வந்த் சின்ஹா ஆகியோரின் ஐந்து முறை பட்ஜெட் தாக்கல் செய்த சாதனையை ஏற்கனவே நிர்மலா சீதாராமன் முறியடித்துள்ளார்.
இது மட்டும் அல்லாமல் இதற்கு முன்பே சில சாதனைகளைப் படைத்துள்ளார். 2014, 2019 மற்றும் 2024 என மோடியின் 3 ஆட்சியிலும் நிர்மலா சீதாராமன் முக்கிய மத்திய அமைச்சராக இருந்துள்ளார்.
7 முறை தொடர்ந்து பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது மட்டும் அல்லாமல் நிர்மலா சீதாராமன் நாட்டின் முதல் முழுநேர பெண் நிதியமைச்சர் இருந்தவர்.
இதேபோல் பாதுகாப்புத் துறை அமைச்சராக இந்திரா காந்திக்கு அடுத்ததாக இப்பதவியில் இருந்த ஒரே பெண்மணி நிர்மலா சீதாராமன் தான்.


Click it and Unblock the Notifications