மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 2024-25 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட காரணத்தாலும், அடுத்த 6 மாதத்தில் மற்றொரு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள காரணத்தாலும் பொருளாதாரத்தை தலைகீழாகப் புரட்டிப்போடும் அறிவிப்புகள் ஏதுமில்லை.
இதேவேளையில் சாமானிய மக்களின் நலன் கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது பாராட்டத்தக்கது. இதன் மூலம் கல்வி, வேலைவாய்ப்பு, கிராமப்புற வளர்ச்சி, பெண்கள் நலன் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது கவனிக்க வேண்டியது. இந்த நிலையில் பட்ஜெட்டில் சாமானிய மக்களுக்கு கிடைத்தது என்ன..? என்பதை ஒரு அலசுவோம்.

கல்வி மற்றும் திறன் மேம்பாடு:
கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டுக்கான ரூ.1.48 லட்சம் கோடி ஒதுக்கீடு.
பிரதம மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 80 கோடி மக்கள் பயனடைவார்கள்.
ஐந்து ஆண்டுகளில் 20 லட்சம் இளைஞர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படும்.
உயர்கல்விக்கான கடன்களுக்கு ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படும்.
வேலைவாய்ப்புடன் இணைந்த மூன்று திட்டங்களை அரசு தொடங்கவுள்ளது.
கிராமப்புற பொருளாதார மேம்பாடு:
கிராமப்புற வளர்ச்சிக்கு ரூ.2.66 லட்சம் கோடி ஒதுக்கீடு
வடகிழக்கு மாநிலங்களில் இந்தியத் தபால் கட்டண வங்கியின் 100 கிளைகள் திறக்கப்படவுள்ளன.
பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனுக்கான திட்டங்களுக்கு ரூ.3 லட்சம் கோடிக்கு மேல் ஒதுக்கீடு
வாடகை வீட்டுச் சந்தையை மேம்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் வாடகை வீடுகள் எளிதில் கிடைக்கும் வழிவகைகள் செய்யப்படும்.
வரி மறுசீரமைப்பு:
புதிய வரி முறையில் ஸ்டாண்டர்ட் டிடக்ஷன் ரூ.50,000 இல் இருந்து ரூ.75,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
புதிய வரி முறைக்கான வரி அடுக்குகள் திருத்தம் செய்யப்பட்டுள்ளன. புதிய வரி அடுக்குகள்: ரூ.0-3 லட்சம் வரை - வரி இல்லை; ரூ.3-7 லட்சம் - 5%; ரூ.7-10 லட்சம் - 10%; ரூ.10-12 லட்சம் - 15%; ரூ.12-15 லட்சம் - 20%; ரூ.15 லட்சம் மற்றும் அதற்கு மேல் - 30%.
தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதி வரி 6% ஆக குறைக்கப்பட்டுள்ளது. பிளாட்டினம் இறக்குமதி வரி 6.4% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மொபைல் போன்கள் மற்றும் அவற்றின் உபகரணங்களின் மீதான இறக்குமதி வரி 15% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக விலைகள் குறைய வாய்ப்புள்ளது.
மருத்துவத் துறை:
புற்றுநோய் சிகிச்சைக்கான மூன்று மருந்துகளுக்கான அடிப்படை சுங்க வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
பங்கு முதலீட்டாளர்களுக்கு அதிகரிக்க உள்ள வரி:
பங்கு சந்தையில் பியூச்சர்ஸ் மற்றும் ஆப்ஷன்ஸ் (F&O) பிரிவில் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கான பத்திர பரிவர்த்தனை வரி (STT) உயர்த்தப்பட்டுள்ளது.
ஆப்ஷன்ஸ் (Option) விற்பனை மீதான வரி 0.0625 சதவீதத்திலிருந்து 0.10 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
பியூச்சர்ஸ் ஒப்பந்த (Futures) விற்பனை மீதான வரி 0.0125 சதவீதத்திலிருந்து 0.02 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
புதிய வேலைவாய்ப்புகளுக்கு ஊக்க திட்டம்:
'வேலைவாய்ப்புடன் இணைந்த ஊக்கத்தொகைத் திட்டம்' (Employment Linked Incentive scheme) என்ற புதிய திட்டத்தை அரசு அறிவித்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ், புதிதாக வேலைக்குச் சேர்பவர்களுக்கு அவர்களது முதல் மாத சம்பளத்தை அரசு மானியமாக வழங்கும். அதிகபட்சமாக ரூ.15,000 வரை மூன்று தவணைகளில் நேரடி பலன் பரிமாற்றம் (DBT) மூலம் வழங்கப்படும்.


Click it and Unblock the Notifications