பிரதமர் மோடி ரஷ்ய பயணத்தில் இரு நாடுகளின் நட்புறவு மற்றும் வர்த்தக உறவை மேம்படுத்த பல்வேறு ஒப்பந்தங்களை கையெழுத்திட்டு வரும் வேளையில் மத்திய நிதியமைச்சகம் 2024-25 ஆம் நிதியாண்டுக்கான திட்டத்தை முழு பட்ஜெட் அறிக்கையை தயாரிக்கும் பணியில் தீவிரமாக உள்ளது.
ஜூலை 22ம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், 2024-25ம் ஆண்டிற்கான முழுமையான பட்ஜெட் ஜூலை 23ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. மோடி 3.0 ஆட்சியின் முதல் பட்ஜெட் என்பதால் மக்கள் மத்தியில் அதிகப்படியான எதிர்பார்ப்பு உள்ளது.

இந்த பட்ஜெட் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கான நலத்திட்டங்கள் மற்றும் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்படும் முக்கியமான பட்ஜெட் அறிக்கையாக இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது. விலைவாசி உயர்வால் அதிகப்படியான பாதிப்புகளை எதிர்கொண்டு வரும் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் விதமாக இந்த பட்ஜெட் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூலை 23 ஆம் தேதி காலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்னதாக, ஜூலை 22ம் தேதி 2023-24ம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கை (Economic Survey) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது.
"இந்தியக் குடியரசுத் தலைவர், இந்திய அரசின் பரிந்துரையின் பேரில், 2024 ஜூலை 22 முதல் ஆகஸ்ட் 12, 2024 வரை பட்ஜெட் கூட்டத் தொடருக்காக நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் அழைப்பதற்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். 2024-25ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் 2024ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்படும்” என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கடந்த வாரம் தெரிவித்தார்.
பொது தேர்தல் காரணமாக வழக்கமாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் பிப்ரவரி 1 ஆம் தேதியில் இடைக்கால பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட்டது, இதில் மத்திய அரசின் மொத்த பட்ஜெட்டின் செலவினத் தொகை ரூ.47.65 லட்சம் கோடியாக இருந்தது. இந்த தொகை, தற்போது 3.0 மோடி அரசால் சேர்க்கப்படும் புதிய திட்டங்களைப் பொறுத்து செலவின தொகை அதிகரிக்கக்கூடும். ஆனால் நிதி பற்றாக்குறை போன்ற முக்கிய விகிதங்கள் பெரிதும் மாற வாய்ப்பில்லை.
ரிசர்வ் வங்கியிடமிருந்து 2.11 லட்சம் கோடி ரூபாய் நிதி ஆதரவு கிடைத்துள்ளது. இது பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ரூ.80,000-90,000 கோடி விட அதிகமாகும். இந்த கூடுதல் நிதி ஆதரவு மூலம் புதிய சலுகைகள் அறிவிப்பது மட்டுமின்றி, ஏற்கனவே உள்ள திட்டங்களையும் மேம்படுத்த அரசு முயற்சிக்கும்.
இதன் வாயிலாகவே ஜூலை 23 ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் ஏழை மற்றும் நடுத்தர மக்களை சார்ந்த நல திட்டங்கள் அதிகமாக இருக்கும் என நம்புவதற்கு ஆதாரமாக உள்ளது.
பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில், 2025ம் நிதியாண்டிற்கான நிதி பற்றாக்குறை இலக்கு 5.1% எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த இலக்கு, ஜூலை 23ம் தேதி தாக்கல் செய்யப்படும் முழுமையான பட்ஜெட்டிலும் 5% என்ற அளவிலேயே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications