பொதுத் தேர்தல் நெருங்கி வரும் காரணத்தால், இது ஆண்டுப் பட்ஜெட் இடைக்காலப் பட்ஜெட்டாக அமைந்துள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024ஆம் ஆண்டுக்கான இடைக்காலப் பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்யத் தயாராகி வரும் வேளையில், முக்கியமான விஷயம் வெளியாகியுள்ளது.
ஜனவரி 31 ஆம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கும் வேளையில் பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் இடைக்காலப் பட்ஜெட் அறிக்கை எப்படியிருக்கும் எனப் பல கணிப்புகள் வெளியாகி வரும் வேளையில் நிதியமைச்சக அதிகாரிகளிடம் இருந்து முக்கிய அறிவிப்பு கசிந்துள்ளது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ள இடைக்காலப் பட்ஜெட் 2024 அறிக்கையில் கவர்ச்சியான அறிவிப்புகள் இருக்க வாய்ப்பில்லை, ஆனால் சிறிய வரி நிவாரண நடவடிக்கைகள் மற்றும் மத்திய அரசின் சில நல்ல திட்டங்களுக்கான நிதியை ஒதுக்கீடு செய்ய வாய்ப்புள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இடைக்காலப் பட்ஜெட் 2024 அறிக்கையில் குறிப்பிடத்தக்க வகையிலான வருமான வரி விகித மாற்றங்கள், குறிப்பாக வரி செலுத்து மக்களின் பிரமிட்டின் அடிமட்டத்தில் உள்ளவர்களுக்கு முக்கியமான சலுகை கிடைக்க வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது.
வருமான வரி செலுத்துவோரை புதிய வருமான வரி பிரிவுக்கு மாற்றும் நோக்குடன் standard deduction பிரிவில் கணிசமான உயர்வும், சில வரி விலக்கு வரம்பு குறித்த அறிவிப்புகள் 2024-25 ஆம் ஆண்டிற்கான இடைக்காலப் பட்ஜெட் பிப்ரவரி 1 ஆம் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வருமான வரித் துறை தற்போது ஆதாரத்தில் கழிக்கப்பட்ட வரி (TDS) மற்றும் வரி செலுத்துவோரின் 360 டிகிரி விவரக்குறிப்பு ஆகியவற்றின் கீழ் கூடுதல் பரிவர்த்தனைகளைச் சேர்ப்பதன் மூலம் வரி வருவாய் வசூல் செயல்திறனை அதிகரிக்கும் வழிகளைத் தேடி வருகிறது.
மத்திய நிதியமைச்சகமும், வருமான வரி துறையும் கடந்த சில ஆண்டுகளாக எடுத்து வரும் முயற்சிகள் பெரிய அளவிலான மாற்றங்களையும், வரி வசூலையும் அதிகரித்துள்ளது. இதன் வாயிலாக இத்தொடர்பான அறிவிப்புகளும் 2024-25 ஆம் ஆண்டிற்கான இடைக்காலப் பட்ஜெட் அறிக்கையில் வெளியாக வாய்ப்புகள் உள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications