மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25 ஆம் ஆண்டுக்கான இடைக்கால மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்கிறார். முந்தைய மூன்று முழு மத்திய பட்ஜெட்களைப் போலவே, 2024ஆம் ஆண்டுக்கான இடைக்கால மத்திய பட்ஜெட்டும் காகிதமற்ற டிஜிட்டல் முறையில் பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.
நிதி அமைச்சகம் ஜனவரி 24 அன்று வெளியிட்ட அறிக்கையில், அனைத்துப் பட்ஜெட் ஆவணங்களும் 'யூனியன் பட்ஜெட் மொபைல் செயலியில்' டிஜிட்டல் முறையில் கிடைக்கும் என்றும், அனைவருக்கும் அணுகக்கூடியதாக இருக்கும் என்றும் கூறியது.

2024-25 ஆம் ஆண்டுக்கான இடைக்கால மத்திய பட்ஜெட் அறிக்கை இருமொழியில், iOS மற்றும் Android பயனர்களுக்கு அணுகக்கூடியதாக யூனியன் பட்ஜெட் மொபைல் செயலியில் மூலம் கிடைக்கும்.
பிப்ரவரி 1, 2024 அன்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் பட்ஜெட் உரையை முடித்த பிறகு, பட்ஜெட் ஆவணங்கள் மொபைல் செயலியில் கிடைக்கும். மத்திய அரசு முதல் முறையாகக் கொரோனா தொற்றுக் காலத்தில் நாடாளுமன்றத்தில் இருக்கும் பிரின்டிங் பிரஸ்-ல் அச்சடிக்க முடியாத காரணத்தால் டிஜிட்டல் முறையில் தாக்கல் செய்யப்பட்டது.
2019 ஆம் ஆண்டில் தனது முதல் பட்ஜெட்டை சமர்ப்பித்த பிறகு, நிர்மலா சீதாராமன் பாரம்பரியமான 'பாஹி கட்டா'விலிருந்து டேப்லெட் வாயிலாக டிஜிட்டல் முறையில் பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்வதன் அவசியத்தை வெளிப்படுத்தினார்.
இது காலனித்துவ நடைமுறைகளிலிருந்து முக்கிய மாற்றமாக இருப்பது மட்டும் அல்லாமல் அனைவரும் அணுகக்கூடியதாக இருக்கும் எனவும் குறிப்பிட்டார். இந்த நிலையில் தான் கொரோனா கட்டுப்பாடு வந்த நிலையில் பேப்பர் பட்ஜெட், டிஜிட்டல் பட்ஜெட் ஆக மாறியது.
2021-2022 யூனியன் பட்ஜெட் தான் டிஜிட்டல் முறையில் சமர்ப்பிக்கப்பட்ட முதல் பட்ஜெட் ஆகும், அப்போது நிர்மலா சீதாராமன் ஒரு டிஜிட்டல் டேப்லெட்டை தேசிய சின்னம் பொறிக்கப்பட்ட சிவப்பு உறையில் நாடாளுமன்றத்திற்குக் கொண்டு வந்தார்.


Click it and Unblock the Notifications