நாட்டின் நிதி நிலை குறித்து மக்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ள 2024 முதல் 2025-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட், ஜூலை 23-ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். இது பிரதமர் மோடி அவர்களின் மூன்றாவது ஆட்சிக் காலத்தின் முதல் பட்ஜெட் ஆகும்.
இந்த முறை பட்ஜெட்டில், நடுத்தர வர்க்கத்தினர், பெண்கள் முன்னேற்றம் மற்றும் வேளாண்மை துறை ஆகியவற்றுக்கு இலக்கு வைத்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் சீர்திருத்த நடவடிக்கைகள் பட்ஜெட்டில் அறிவிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

பட்ஜெட்டில் என்ன எதிர்பார்க்கலாம்?: கடந்த நிதியாண்டின் பொருளாதார நிலவரத்தை விளக்கும் பொருளாதார ஆய்வறிக்கை பட்ஜெட் கூட்டத்தின் முதல் நாளில் தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மோடி அரசின் இரண்டு ஆட்சிக் கால சாதனைகளும் எதிர்கால திட்டங்களும் இடம் பெற்றிருக்கும்.
பட்ஜெட் எப்போது தாக்கல் செய்யப்படும்?: ஜூலை 22-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரை நடைபெறும் பட்ஜெட் கூட்டத்திற்காக நாடாளுமன்ற இரு அவைகளையும் கூடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பட்ஜெட் ஜூலை 23 ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்படும். பட்ஜெட் தகவல்கள் பின்னர் நிதி அமைச்சக இணையதளம், பத்திரிகைகள், தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் வாயிலாக வெளியாகும்.
நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தொடர்ந்து ஏழாவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ளார். இது மொரார்ஜி தேசாய் வைத்திருந்த ஆறு பட்ஜெட் தாக்கல் செய்யும் சாதனையை முறியடிக்கும் சாதனையாகும். பட்ஜெட்டில் பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை, வருமானம் சார்ந்த திட்டங்கள் அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. பட்ஜெட்டில் வரி நடவடிக்கைகள் மற்றும் சமூகப் பாதுகாப்பு திட்டங்கள், குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினரை இலக்காகக் கொண்டு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியக் குடியரசுத் தலைவர், இந்திய அரசின் பரிந்துரையின் பேரில், 2024ஆம் ஆண்டு ஜூலை 22-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடருக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் கூடுவதற்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். 2024-2025ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் 2024 ஜூலை 23ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்படும் என்று கிரண் ரிஜிஜு தனது X பதிவில் பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications