மருத்துவச் செலவுகள் அதிகரித்து வருவது பல குடும்பங்களை கடுமையான நிதி நெருக்கடியில் தள்ளி விடுகிறது. இதைக் கருத்தில் கொண்டு, மருத்துவக் காப்பீட்டு வசதியை மக்களுக்குக் கிடைக்குமாறு செய்ய மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவற்றுள் மிக முக்கியமானது ஆயுஷ்மான் பாரத் சுகாதார காப்பீட்டுத் திட்டம். இத்திட்டத்தின் கீழ், ஏழை மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களுக்கு இலவச மருத்துவக் காப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, இந்தத் திட்டத்தை மேலும் விரிவுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயனாளிகளின் எண்ணிக்கையை அடுத்த 3 ஆண்டுகளில் இரட்டிப்பாக்க அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் இந்த வரம்பிற்குள் கொண்டு வரப்படுவார்கள். மேலும் காப்பீட்டுத் தொகையை ஆண்டுக்கு ரூ. 10 லட்சமாக அதிகரிக்கவும் ஏற்பாடுகள் செய்யப் படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

செய்தி நிறுவனமான PTI-யின் அறிக்கையின்படி, இந்த திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டால், தேசிய சுகாதார ஆணையத்தின் மதிப்பீடுகளின்படி, அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.12,076 கோடி கூடுதல் செலவாகும்.
அடுத்த 3 ஆண்டுகளில் ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா (AB-PMJAY) திட்டத்தின் கீழ் பயனாளிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவது குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இது நடைமுறைப்படுத்தப்பட்டால், நாட்டின் மூன்றில், இரண்டு பங்குக்கும் மேற்பட்ட மக்களுக்கு மருத்துவக் காப்பீடு கிடைக்கும். மருத்துவச் செலவுகள் தான் குடும்பங்களை கடனில் தள்ளுவதற்கு மிகப்பெரிய காரணங்களில் ஒன்று என்பதைக் கவனத்தில் கொண்டு இந்த ஆலோசனைகள் நடந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது AB-PMJAY திட்டத்தின் கீழ், வழங்கப்படும் ரூ.5 லட்சம் காப்பீட்டு வரம்பை ரூ.10 லட்சமாக உயர்த்துவதற்கான திட்டத்தையும் இறுதி செய்யும் பணிகள் நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த முன்மொழிவுகள், இம்மாத இறுதியில் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜனாதிபதி திரௌபதி முர்மு, ஜூன் 27 அன்று நாடாளுமன்றத்தின் கூட்டத்தில் ஆற்றிய உரையில், 70 வயதுக்கு மேற்பட்ட அனைத்து முதியவர்களும், இப்போது ஆயுஷ்மான் பாரத் யோஜனாவின் கீழ் இலவச சிகிச்சையின் பலனைப் பெற முடியும் என்று கூறியுள்ளார்.
AB-PMJAY திட்டத்திற்கான காப்பீட்டு வரம்பு 2018 ஆம் ஆண்டில் ரூ.5 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டது. காப்பீட்டு வரம்பை இரட்டிப்பாக்குவது என்பது பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டும், மாற்று உறுப்பு தானம், புற்றுநோய் போன்ற அதிக செலவு வாய்ந்த சிகிச்சைகளுக்கு குடும்பங்களுக்கு நிவாரணம் அளிப்பதற்காகவும் கொண்டு வர இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் காப்பீட்டு வரம்பை உயர்த்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருவது வரவேற்கத்தக்கது. இது போன்ற திட்டங்கள் விரிவுபடுத்தப்பட்டால் சாமானிய மக்களுக்கு மருத்துவமனை செலவுகள் குறையும்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications