2024-25ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பெரும் எதிர்ரபார்ப்புக்கு மத்தியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இன்று பட்ஜெட் அறிவிக்கப்பட்டதில் இருந்து பல துறைகளின் பங்ககள் கடுமையான ஏற்ற இறக்கத்தை எதிர்கொண்டது. இதன் அடிப்படையில் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய முக்கிய அறிவிப்புகளை தமிழ் குட்ரிட்டன்ஸ் வாசகர்களுக்கான தொகுத்துள்ளோம்.

- நாட்டின் உட்கட்டமைப்பு துறைக்கான மூலதனச் செலவு இலக்கை இடைக்கால பட்ஜெட் அறிக்கையில் அறிவித்த ரூ.11.11 லட்சம் கோடியை மோடி அரசு தொடர்ந்து தக்கவைக்க முடிவு. இது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 3.4 சதவீதமாகும்.
- கடந்த ஆண்டுகளை ஒப்பிடும் போது, உட்கட்டமைப்பு துறைக்கான அரசின் நிதி ஒதுக்கீடு தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
- நகர்ப்புற ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் சுமார் ரூ.10 லட்சம் கோடி அளவிலான நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று நிதி அமைச்சர் அறிவித்தார்.
- 'நகர்ப்புற 2.0' (Urban 2.0) என்ற புதிய திட்டம் மூலம், வீடு இல்லாத ஏழை, நடுத்தர குடும்பங்களுக்கு வீடுகள் வழங்குவதில் மத்திய அரசு கவனம் செலுத்தப்படும்.
- பழங்குடி மக்களின் சமூக, பொருளாதார நிலை உயர்த்துவதற்காக "பிரதம மந்திரி ஜனஜாதியா உன்னத கிராம் அபிஹியான்" (Pradhan Mantri Janjatiya Unnat Gram Abhiyan) என்ற புதிய திட்டத்தைத் தொடங்க உள்ளதாக அறிவித்தார்.
- இதன் மூலம், 63,000 கிராமங்களைச் சேர்ந்த 5 கோடி பழங்குடி மக்கள் பயனடைவார்கள் என்று அவர் மேலும் கூறினார்.
- பட்ஜெட் அறிக்கையில் சாமானிய மக்களைக் கவரும் வகையில் புதிய வருமான வரி முறையில், வரி பலகைகளை மறுசீரமைப்பு செய்து அறிவித்துள்ளது.
ரூ.3,00,000 வரை - ஜீரோ வரி
ரூ.3,00,001 முதல் ரூ.7,00,000 வரை - 5% வரி
ரூ.7,00,001 முதல் ரூ.10,00,000 வரை - 10% வரி
ரூ.10,00,001 முதல் ரூ.12,00,000 வரை - 15% வரி
ரூ.12,00,001 முதல் ரூ.15,00,000 வரை - 20% வரி
ரூ.15,00,000 க்கு மேல் - 30% வரி
- இதோடு புதிய முறையில் நிலையான கழித்தல் அதாவது ஸ்டாண்டர்ட் டிடக்ஷன் 50000 ரூபாயில் இருந்து ரூ.75,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம், செலுத்த வேண்டிய வரியில் இருந்து ரூ.75,000 கழிக்கப்படும்.
- குறுகிய கால மூலதன ஆதாய வரி: குறிப்பிட்ட சொத்துகளின் மீதான குறுகிய கால மூலதன ஆதாய வரி (Short Term Capital Gains - STCG) 20% ஆக உயர்த்தப்படவுள்ளது. பிற நிதி மற்றும் நிதி அல்லாத சொத்துகளின் குறுகிய கால மூலதன மீதான லாபம், தனிநபரின் வருமான வரி விகிதத்தின்படி கணக்கிடப்படும்.
- மூலதன ஆதாய விலக்கு வரம்பு அதிகரிப்பு: ஆண்டு தோறும் ரூ.1.25 லட்சம் வரையிலான மூலதன ஆதாயத்திற்கு வரி விலக்கு அளிக்கப்படவுள்ளது. இது முந்தைய வரம்பை விட அதிகமாகும்.
- நீண்ட கால மூலதன ஆதாய வரி வரி (LTCG) உயர்வு: குறிப்பிட்ட சில சொத்துகளின் மீதான நீண்ட கால மூலதன ஆதாய வரி (Long Term Capital Gains - LTCG) 12.5% ஆக உயர்த்தப்படவுள்ளது.
- இந்திய ஸ்டார்ட்அப் துறையின் வளர்ச்சியை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்ல "ஏஞ்சல் டேக்ஸ்" நீக்க நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.
- நிர்மலா சீதாராமன் தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரி 6 சதவீதமாகவும், பிளாட்டினம் இறக்குமதி வரி 6.4 சதவீதமாகவும் குறைக்கப்படும் என்று அறிவித்தார்.
- நகர்ப்புற வீட்டுவசதி திட்டத்திற்காக 10 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும்; வீட்டுவசதி திட்டத்திற்கு 1 கோடி நகர்ப்புற ஏழை மக்கள் பயனடைவர். நகர்ப்புற ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
- திவால் நடைமுறைகள் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காண கூடுதல் தீர்ப்பாயங்கள் அமைக்கப்படும். வாராக்கடனை வசூலிப்பதற்கான சீர்திருத்த நடவடிக்கைகள் வலுப்படுத்தப்படும்.
- ஒடிஷா, பீகார் சுற்றுலாவுக்கு முக்கியத்துவம் தந்த மத்திய பட்ஜெட், ஆந்திரா தலைநகரின் வளர்ச்சிக்கு சிறப்பு நிதியுதவி அறிவிக்கப்பட்டு உள்ளது.
- இந்த நிதியாண்டு மற்றும் வரும் நிதியாண்டில் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் தலைநகர் வளர்ச்சிக்காக ரூ.15,000 கோடியை நிதியை மத்திய அரசு வழங்க உள்ளது. நிதியமைச்சர் -ஆந்திரப் பிரதேசத்தில் தலைநகரின் வளர்ச்சிக்குச் சிறப்பு நிதியுதவியை அளிக்கும் திட்டத்தை அரசு எளிதாக்கப்பட உள்ளது.
- ஆந்திராவின் 3 மாவட்டங்களுக்குப் பின்தங்கிய பகுதி மானியம் வழங்கப்படும் என நிதியமைச்சர் தெரிவித்தார்.
- ஆந்திராவின் போலவரம் பாசனத் திட்டத்தை நிறைவு செய்வதற்கும் நிதியுதவி செய்வதற்கும் எங்கள் அரசு முழுமையாக உறுதி பூண்டுள்ளது நிதியமைச்சர் பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், ஒடிசா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் அனைத்து பிரிவு வளர்ச்சிக்காக பூர்வோதயா திட்டத்தை உருவாக்க உள்ளோம்
- அனைவருக்கும் வீட்டு வசதிக்கான PM-Awas Yojana Urban 2.0 திட்டத்தை மத்திய நிதியமைச்சர் அறிவித்தார்.
1) ஏழை மற்றும் நடுத்தர வகுப்பினருக்கான வீட்டு வசதி வழங்குவதில் அரசு அதிக கவனம் செலுத்தும்.
2) PMAY-U இன் கீழ் நகர்ப்புற வீட்டுத் திட்டங்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ரூ 2.2 லட்சம் கோடியை மத்திய அரசு நிதி ஒதுக்க உள்ளது.
3) PMAY-U இன் கீழ் எப்போதும் கொடுக்கப்படும் அதே வட்டி மானியம் தொடர்ந்து வழங்கப்படும்.
4) பெண் வீட்டு உரிமையாளர்களுக்கான முத்திரைத்தாள் கட்டணத்தைக் குறைக்க மாநிலங்களுக்கு மத்திய நிதியமைச்சகம் வேண்டுகோள்
- 4 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு திறன் பயிற்சி
- வேளாண் துறை: வேளாண் துறைக்கு ரூ.1.5 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு
- உள்நாட்டு உயர் கல்வி நிறுவனங்களில் மேற்படிப்பு பயில ரூ.10 லட்சம் கல்விக்கடன்
- இபிஎஃப்ஓ-வில் பதிவு செய்யப்பட்டு ரூ.15 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை சம்பளம் பெறும் இளைஞர்களுக்கு ஒரு மாதம் ஊக்கத்தொகை
- ஆந்திர மாநில வளர்ச்சிக்காக ரூ.15,000 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு
- முத்ரா கடன் வரம்பு ரூ.20 லட்சமாக உயர்வு
- PMAY திட்ட வரம்பு 10 லட்சமாக அதிகரிப்பு
- கல்வி, வேலைவாய்ப்பு, திறன் மேம்பாட்டுக்கு ரூ.1.48 லட்சம் கோடி ஒதுக்கீடு.
- புற்றுநோய் சிகிச்சைக்கான மூன்று மருந்துகளுக்கு முற்றிலும் சுங்கவரி விலக்கு
- ஆன்லைன் வர்த்தகத்துக்கான டிடிஎஸ் பிடிப்பு குறைவு
- PM கிசான் திட்டத்தில் மாற்றங்கள் இல்லை
- பிரதமரின் இலவச உணவு வழங்கும் திட்டம் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது
- விண்வெளித் திட்டங்களுக்கு ரூ1,000 கோடி நிதி ஒதுக்கீடு
- 1 கோடி வீடுகளில் சூரிய ஒளி மின்சார தகடுகள்
- வெளிநாட்டு நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரி 40%-ல் இருந்து 35% ஆக குறைப்பு
- ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சம் - ரூ7 லட்சம் பெறுவோருக்கு 5% வரி
- ஆண்டு வருமானம் ரூ15 லட்சத்துக்கு மேல் பெறுவோர் 30% வருமான வரி செலுத்த வேண்டும்
- மகளிர் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ரூ3 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு
- முத்ரா கடன் உதவி திட்டத்தின் உச்சவரம்பு ரூ20 லட்சமாக உயர்த்தப்படும்
- சிறு, குறு தொழில் நிறுவன மேம்பாட்டுக்கான திட்டங்கள் அறிவிப்பு
- 1000 தொழில்துறை பயிற்சி நிறுவனங்கள் ஏற்படுத்தப்படும்
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications