இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. மூன்றாவது முறையாக தொடர்ந்து ஆட்சியமைத்த மோடி 3.0 அரசின் முதல் பட்ஜெட் இதுவாகும். இந்நிலையில் மக்களின் எதிர்பார்ப்புகள் அங்கீகரிக்கப்படுமா? தேவைகள் பூர்த்தி செய்யப்படுமா? என்ற குழப்பங்கள் நிலவி வருகிறது. பல்வேறு துறையினரும் தங்களுக்கென்ற எதிர்பார்ப்புகளை முன்வைத்து காத்திருக்கின்றனர். இதில் முக்கியமான எதிர்பார்ப்பு என்னவென்றால் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY) திட்டத்தின் கீழ் சில நல்ல மாற்றங்கள் வரும் என்ற நம்பிக்கை தான்.
PMAY திட்டத்தின் கீழ் மானியங்கள் உயர்த்தப்பட்டு சாமானிய மக்களுக்கும் உதவும் வகையில் அறிவிப்புகள் வந்தால், அது வீட்டு வசதி நிதி நிறுவனங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் ஒன்றாக இருக்கும். அதுமட்டுமின்றி சாமானிய மக்களுக்கான வீடு வழங்கும் கனவு நிறைவேறும்.

ஜூன் 4-ஆம் தேதி அன்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் இருந்து, பங்குச் சந்தைகளில் வீட்டு வசதி நிதி நிறுவனங்கள் ஏற்றம் கண்டு வருகின்றன. எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ், கேன் ஃபின் ஹோம்ஸ், ஹட்கோ, பிஎன்பி ஹவுசிங் ஃபைனான்ஸ், ஹோம் ஃபர்ஸ்ட், அப்டஸ் வேல்யூ ஹவுசிங் மற்றும் ஆவாஸ் பைனான்சியர்ஸ் பங்குகள், 46 சதவீதம் வரை உயர்ந்துள்ளன.
PMAY திட்டத்தின் கீழ் மானியங்கள் உயர்த்தப்படுமா?: முதலில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் என்றால் என்ன என்பது குறித்து பார்ப்போம். PMAY திட்டம் என்பது மலிவு விலையில் வீடுகளை வாங்க மக்களை ஊக்குவிக்கும் ஒரு திட்டமாகும்.
இந்தத் திட்டத்தின் மூலம் நீங்கள் வாங்கும் வீட்டுக் கடன்களுக்கு அரசு மானியங்களை வழங்குகிறது. இதன் மூலம் நீங்கள் வீடு வாங்கும் கனவு எளிதில் நிறைவேறும். குறைந்த விலையில் வீடுகளை வாங்க முடிவதால் சாமானிய மக்களும் இந்தத் திட்டத்தின் கீழ் பயனடையலாம்.
பிரதம மந்திரி அவாஸ் யோஜனா திட்டம் இரண்டு பிரிவுகளைக் கொண்டுள்ளது. அவற்றில் ஒன்று பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா நகர்ப்புறம் (PMAY-U), மற்றொன்று பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா கிராமப்புறம் (PMAY-G).
மோர்கன் ஸ்டான்லியின் ஆய்வாளர்கள், வீட்டு வசதி நிதி நிறுவன துறையானது PMAY-G திட்டத்தில் அதிக ஒதுக்கீட்டை எதிர்பார்க்கிறது. எனவே ஒதுக்கீடு அதிகரிக்கப்படுவதால் டயர் 2 மற்றும் டயர் 3 நகரங்களில் வீடுகளுக்கான தேவையை அதிகரிக்கும். PMAY-G திட்டத்தின் கீழ், கட்டுமானச் செலவுகள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, முன்பு வழங்கப்பட்ட ரூ.1.2 - 1.3 லட்சத்தில் இருந்து ஒரு வீட்டுமனைக்கு ரூ.2.3 - 2.4 லட்சமாக பண உதவி அதிகரிக்கலாம் என தொழில் வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ANAROCK குழுமத்தின் தலைவர் அனுஜ் பூரியின் கூற்றுப்படி, PMAY திட்டத்தின் கீழ் மானியத்தையும் அரசாங்கம் புதுப்பிக்க வேண்டும். இந்தத் திட்டம் பொருளாதார ரீதியாக நலிவடைந்த துறைகள் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு மலிவு விலையில் வீடுகளை வாங்குவதற்கு மானியங்களை வழங்கியது. இந்தத் திட்டத்தை மறுசீரமைப்பது வீடு வாங்குபவர்களிடையே மீண்டும் தேவையைத் தூண்டும் என்று கூறியுள்ளார்.
மலிவு விலை வீடுகள் பிரிவு கோவிட்-19 தொற்றுநோய்க்குப் பிறகு போராடி வருகிறது. ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான அனாரோக்கின் தரவுகளின்படி, இந்தியாவில் மலிவு விலை வீடுகளின் விற்பனை 2019-ஆம் ஆண்டில், 38 சதவீதத்திலிருந்து, இந்த ஆண்டு 20 சதவீதமாகக் குறைந்துள்ளது. குறைந்த தேவை காரணமாக, ஒட்டுமொத்த விநியோகத்தில் மலிவு விலை வீடுகளின் பங்கும் 2019-ஆம் ஆண்டில் இருந்த 40 சதவீதத்திலிருந்து இந்த ஆண்டு 18 சதவீதமாகக் குறைந்துள்ளது.
எனவே இந்த பட்ஜெட்டில் PMAY திட்டத்தின் கீழ் மானியங்கள் உயர்த்தப்பட்டு, சாமானிய மக்களையும் வீடு வாங்குவதை தூண்டும் வகையில் அமைந்தால் ரியல் எஸ்டேட் துறையில் பெரிய மாற்றம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications