பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், அனைவரின் எதிர்பார்ப்பும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது திரும்பியுள்ளது. வரவிருக்கும் பட்ஜெட் தாக்கல் முழு பட்ஜெட் ஆக இல்லாமல் இடைக்கால பட்ஜெட் ஆக இருக்கும்.
ஏனென்றால், இந்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ள காரணத்தால். புதிதாக ஆட்சி அமைக்கும் அரசு பிற்பகுதியில் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யும்.

ஒவ்வொரு ஆண்டும், நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31 அன்று தொடங்கும். இரு அவைகளின் கூட்டத்தில் இந்திய குடியரசு தலைவர் உரையுடன் ராஜ்யசபா மற்றும் லோக்சபா பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கி அடுத்த நாள் மக்களவையில் அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
இந்த நிலையில் இந்த ஆண்டு இடைக்கால பட்ஜெட் அறிக்கையில் ரியல் எஸ்டேட் துறைக்கான சலுகை, திட்டங்கள் மீது மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு உள்ளது. ரியல் எஸ்டேட் துறை அதிக பணபுழக்கத்தை உருவாக்குவது மட்டும் அல்லாமல் அதிகப்படியான வேலைவாய்ப்புகளை நேரடியாகவும், மறைமுகமாகவும் உருவாக்கும் வல்லமை கொண்டது.
இந்தியாவின் ரியல் எஸ்டேட் சந்தை 2023 இல் முன் எப்போதும் இல்லாத வகையில் வளர்ச்சியைக் கண்டதோடு, வீடுகளின் விலை பெரிய அளவில் அதிகரித்துள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளில் அதிகப்படியான வீட்டு கடன் வட்டி விகிதங்கள் பெரும் சவாலாக இருந்த போதிலும் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
ரியல் எஸ்டேட் துறையில் குடியிருப்பு சொத்து விற்பனை அளவு மற்றும் மதிப்பு இரண்டிலும் வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளது. மேலும் 2023 ஆம் ஆண்டில், இந்தியாவின் டாப் ஏழு நகரங்களில் சுமார் 4.77 லட்சம் வீடுகள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வீடுகளின் எண்ணிக்கையும் 4.46 லட்சம் அளவீட்டை எட்டியது.
2024 ஆம் ஆண்டிலும் புதிய வீடுகளுக்கான டிமாண்ட் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் அதிகப்படியான வீட்டுக்கடன் வட்டி விகிதம், மத்திய அரசு எவ்விதமான சலுகைகளும் அறிவிக்காமல் இருந்தால் இந்த மோசமான விலை காலத்தில் ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சி பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளது.
ANAROCK குழுமத்தின் தலைவர் அனுஜ் பூரி கூறுகையில் 2024 ஆம் ஆண்டிற்கான ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சி கண்ணோட்டம் தற்போது சிறப்பான உள்ளது. ஆனால், வரவிருக்கும் பொதுத் தேர்தல் முடிவுகள், ரியல் எஸ்டேட்டின் தேவை மற்றும் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார்.
இதேபோல் இந்தியாவில் ரியல் எஸ்டேட் திட்டங்களுக்கான ஒப்புதலை மத்திய அரசு வேகப்படுத்தும் முறையை இந்த பட்ஜெட் திட்டத்தில் அறிவிக்கவும் வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் அதிகரித்து வரும் ரியல் எஸ்டேட் தேவையை பூர்த்தி செய்ய வேகமாக இயங்கும் ஓற்றை சாலரம் முறை பெரிய அளவில் பயனளிக்கும் என்றும் ANAROCK குழுமத்தின் தலைவர் அனுஜ் பூரி கூறியுள்ளார்.
இதேவேளையில் இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில், ஆர்பிஐ அடுத்த 2 மாதத்திற்குள் ரெப்போ விகிதத்தை குறைக்கவும் வாய்ப்பு இருப்பதால் மத்திய அரசு இடைக்கால பட்ஜெட்டிலும் சரி, புதிதாக ஆட்சி அமைக்கும் அரசு தாக்கல் செய்யும் முழு பட்ஜெட் அறிக்கையும் சரி ரியல் எஸ்டேட் துறை மீது அதிகப்படியான கவனத்தை செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் புதிதாக வீடு வாங்க திட்டமிடுவோருக்கு இந்த 2024 சிறந்த காலக்கட்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications