சென்னை: மோடியின் 3வது ஆட்சியின் முதல் முழு பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அடுத்த தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட்டில், வரி செலுத்துபவர்கள் மத்தியில் அதிகப்படியான எதிர்பார்ப்புகள் நிலவி வருகின்றன.
குறிப்பாக, வருமானம் வரி விகிதங்களைக் குறைப்பதை அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியானதில் இருந்து மாத சம்பளக்காரர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதன்மூலம் மோடி 3.0 அரசின் முதல் முழு பட்ஜெட், வரி செலுத்துபவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படுமா? வருமான வரி செலுத்துபவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில், வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ராய்ட்டர்ஸ் நிறுவனத்திடம் பேசிய அரசு அதிகாரிகள் கொடுத்த தகவல் படி தற்போது ரூ.3 ஆக இருக்கும் வரி விலக்கு உச்சவரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்துவதாக மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளையில் இந்த மாற்றம் புதிய வரி முறையின் கீழ் வருமான வரி படிவத்தைத் தாக்கல் செய்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும் எனவும் கூறப்படுகிறது. மக்களின் வரி சுமை குறைவது நல்ல விஷயம் தான், ஆனால் வரி குறைப்பினால் அரசின் வருமானம் குறையும், அதை தாண்டி அரசு ஏன் குறைக்கிறது. இதனால் அரசுக்கு என்ன லாபம்..?
வரி விலக்கு வரம்பு அதிகரிப்பது ஏன்..?
வரி விலக்கு வரம்பில் செய்யப்படும் மாற்றங்கள் பொருளாதார நிலை, அரசின் முன்னுரிமைகள், வரி வருவாய் கணக்கீடு மற்றும் அரசியல் காரணங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் அறிவிக்கப்படுகிறது.
பொருளாதாரம் குறித்து பேசுகையில் டாக்ஸ்2வின் நிறுவனத்தின் இணை நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான அபிஷேக் சோனி கூறுகையில், பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து வரும் வேளையில் வருமான வரி விலக்கை அதிகரிக்கும் போது, வரி செலுத்துபவர்களின் சுமையைக் குறைத்து, நுகர்வோர் அதிகம் செலவு செய்வார்கள்.


Click it and Unblock the Notifications