2023-2024-ஆம் நிதியாண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கை இன்று வெளியிடப்பட்டது. இந்நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024 முதல் 2025-ஆம் நிதியாண்டிற்கான முழு பட்ஜெட்டை நாளை காலை 11 மணியளவில் தாக்கல் செய்ய உள்ளார். வரி விலக்கு மற்றும் வரி விலக்கு வரம்புகளை உயர்த்துவது உள்ளிட்ட வருமான வரி அறிவிப்புகள் குறித்து எதிர்பார்ப்புகள் அதிகரித்து இருப்பதால், நாளை அறிவிப்பு வெளியாகுமா? என்று மக்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.
புதிய வரி விதிப்பு முறையில் பழைய வரி முறையை விட குறைவான வரி விலக்குகள் இருந்தாலும், வரி விகிதங்கள் குறைவாக இருக்கும். 2023-ஆம் ஆண்டு பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதிய வரி விதிப்பு முறையில் வரி விலக்கை அதிகரித்தார்.

முன்பு வரை இந்த வரி விதிப்பு முறையில் வருமான வரி விலக்கு ரூ. 2.5 லட்சமாக இருந்தது. ஆனால், 2023-ஆம் ஆண்டு பட்ஜெட்டில் வரி விலக்கு உச்சவரம்பு ரூ.50,000 அதிகரிக்கப்பட்டு ரூ. 3 லட்சமாக மாற்றப்பட்டது. புதிய வரி விதிப்பு முறையில், இப்போது ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம் வரை உள்ளவர்கள் எந்தவித வருமான வரியும் செலுத்த வேண்டியதில்லை.
| வருமான வரி ஸ்லாப் | பழைய வரி முறை | புதிய வரி முறை |
|---|---|---|
| 0 - 2,50,000 | 0% | 0% |
| 2,50,001 - 3,00,000 | 5% | 0% |
| 3,00,001 - 5,00,000 | 5% | 5% |
| 5,00,001 - 6,00,000 | 20% | 5% |
| 6,00,001 - 9,00,000 | 20% | 10% |
| 9,00,001 - 10,00,000 | 20% | 15% |
| 10,00,001 - 12,00,000 | 30% | 15% |
| 12,00,001 - 15,00,000 | 30% | 20% |
| 15,00,001 & Above | 30% | 30% |
60 வயதுக்கு மேல் உள்ள மூத்த குடிமக்களுக்கு, பழைய வரி முறையின் கீழ் வருமான வரியில் ரூ. 3,00,000 வரை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 80 வயதுக்கு மேல் உள்ள உயர் மூத்த குடிமக்களுக்கு ரூ. 5,00,000 வரையிலான வருமானத்திற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
யூனியன் பட்ஜெட் 2023-2024-இல் என்ன எதிர்பார்க்கப்படுகிறது?: Tax Connect Advisory Services LLP-இன் பங்குதாரரான விவேக் ஜலான் கூறுகையில் புதிய வரி முறையில் வரி விலக்கு வரம்பு தற்போதைய ரூ.3 லட்சத்திலிருந்து குறைந்தது ரூ.4 லட்சமாக நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கூறியுள்ளார்.
மேலும், ரூ.15 லட்சத்திற்கு மேற்பட்ட வருமானம் கொண்ட வரி செலுத்துபவர்கள் இன்னும் பழைய முறையையே கடைப்பிடித்து வருகின்றனர். அரசாங்கம் அவர்களையும் புதிய வரி முறைக்கு மாற்றுவதற்கான வழிவகைச் செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, புதிய வரி முறையில் ரூ.15 லட்சம் முதல் ரூ.18 லட்சம் வரையிலான வருமானம் பெறுபவர்களுக்கு 25 சதவீத வரி விகிதம் இருக்கலாம் என்றும் ஜலான் கூறியுள்ளார்.
தனிநபர்கள், HUF-கள் போன்றோருக்கான புதிய வரி முறையின் வரி விலக்குகள் அதிகரிக்கப்பட்டு, மேலும் பலர் புதிய வரி முறைக்கு மாறுவதற்கு வழிவகுக்கும்.
இது சம்பளம் பெறும் வகுப்பினரின் கையில் அதிக பணப்புழக்கத்தை ஏற்படுத்தும். இது நுகர்வோர் செலவை அதிகரித்து, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதோடு, அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்ய வேலைவாய்ப்பை உருவாக்குவதை ஊக்குவிக்கும் என்று ஜலான் கூறியுள்ளார்.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications