டெல்லி: மத்திய பட்ஜெட்டில் வருமான வரி வரம்பு உயர்த்தப்படும், 80சி பிரிவில் மாற்றங்கள் கொண்டுவரப்படும் என பல்வேறு எதிர்பார்ப்புகள் நிலவின. ஆனால் அது தொடர்பான எந்த ஒரு அறிவிப்பையும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிடவில்லை. குறிப்பாக பழைய வரி நடைமுறைக்கு என எந்த சலுகைகளும் அவர் அறிவிக்கவில்லை. புதிய வரி நடைமுறையில் மட்டும் சில மாற்றங்களை அறிவித்திருந்தார்.
இத்தகைய செயல்கள் பழைய வரி நடைமுறையை முற்றிலுமாக கைவிடுவதற்கு அரசு முடிவு செய்துள்ளதா என்ற கேள்வியை எழுப்புகிறது. இதனிடையே வருமான வரி நடைமுறையை எளிதாக்குவது தான் அரசின் நோக்கம் என தெரிவித்துள்ள நிர்மலா சீதாராமன் பழைய வரி நடைமுறை முற்றிலுமாக நீக்கப்படுமா என்பது குறித்து தன்னால் தற்போது கூற முடியாது என தெரிவித்துள்ளார். பழைய வரி நடைமுறை தொடர்பாக எந்த ஒரு முடிவாக இருந்தாலும் அது முழுமையான ஆய்வுக்கு பின்னரே எடுக்கப்படும் என தெரிவித்தார்.

பழைய வரி நடைமுறையை எளிதாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் புதிய வரி நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது என்ற விளக்கத்தையும் அவர் தந்துள்ளார். கடந்த 2020 ஆம் நிதியாண்டில் மத்திய அரசு புதிய வரி நடைமுறையை அறிமுகம் செய்தது. பழைய வரி நடைமுறையில் வீட்டு வாடகை, காப்பீடு மற்றும் பல்வேறு முதலீடுகளை நாம் சுட்டிக்காட்டி வரிவிலக்கு பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் புதிய வரி நடைமுறையில் அத்தகைய வரி விலக்குகள் ஏதும் வழங்கப்படுவது கிடையாது ஆனால் வருமான வரி விகிதங்கள் குறைவாக உள்ளன.
தற்போது வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்களுக்கு பழைய வரி நடைமுறை மற்றும் புதிய வரி நடைமுறை என இரண்டு வாய்ப்புகளுமே வழங்கப்படுகின்றன. அரசு வெளியிடக்கூடிய தகவலின் அடிப்படையில் தற்போது பெரும்பாலானவர்கள் புதிய வரி நடைமுறைக்கு மாறி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. வரி செலுத்தக்கூடிய தனிநபர்களில் மூன்றில் இரண்டு பேர் புதிய வரி நடைமுறைக்கு மாறியுள்ளனர் என அரசு கூறுகிறது. அதாவது 8.61 கோடி வருமான வரி கணக்குகள் புதிய வரி நடைமுறையின் கீழ் தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாக அரசு தெரிவிக்கிறது.
அரசும் மக்கள் புதிய வரி நடைமுறைக்கு மாற வேண்டும் என தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது. அந்த வகையில் பட்ஜெட்டில் புதிய வரி நடைமுறையில் தான் பல்வேறு மாற்றங்களை நிர்மலா சீதாராமன் கொண்டு வந்துள்ளார். இதில் வழங்கப்படும் நிலையான வரி தள்ளுபடி என்பது 50,000 ரூபாயிலிருந்து 75,000 ரூபாய் என உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் வரி அடுக்குகளிலும் அவர் மாற்றங்களை கொண்டு வந்துள்ளார். புதிய மாற்றங்கள் மூலம் ஊதியம் பெறக்கூடிய தனிநபர்கள் புதிய வரி நடைமுறையில் 17500 ரூபாய் வரை வரியை மிச்சப்படுத்த முடியும்.
Story written by: Devika
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!



Click it and Unblock the Notifications