மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது ஏழாவது பட்ஜெட்டை ஜூலை 23 அன்று தாக்கல் செய்கிறார். சாமானிய மக்கள் முதல் தொழில்துறையினர், பெரும் பணக்காரர்கள் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் என அனைத்து தரப்பினரும் இந்த பட்ஜெட்-ஐ எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
ஆனால் இந்த பட்ஜெட் எப்போதும் போல் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் ஆக இருக்குமா அல்லது நாயுடு - நிதிஷ் பட்ஜெட் ஆக இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுவரையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த ஐந்து முழு பட்ஜெட்களும் பிஜேபி கட்சியின் அடையாளமான நிதியியல் மேம்பாடு, தீவிரமான மூலதனச் செலவுகள் அடிப்படையில் இருக்கும்.

பிஜேபி தலைமையிலான ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் அறிக்கையில் இந்தியாவை ஆத்மநிர்பர் ஆக்குவதற்கும், உற்பத்தியை அதிகரிப்பதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் மோடி 3.0 ஆட்சி ஆந்திராவின் சந்திரபாபு நாயடு, பீகார் நிதிஷ்குமார் ஆகியோரின் கட்சிகளின் கூட்டணியில் அமைந்துள்ளதால் இந்த பட்ஜெட் எப்போதும் போல் நிதி மேம்பாடு, அதிகப்படியான மூலதனச் செலவுகள் கொண்டு இருக்காது என்ற அச்சம் உள்ளது.
பிப்ரவரியில் சீதாராமன் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட், தேர்தலுக்கு முந்தைய பட்ஜெட் என்பதால் மக்களின் எதிர்பார்ப்பு முழுமையாகப் பூர்த்தி செய்யப்படவில்லை. இந்த நிலையில் மோடி 3.0 அரசின் இந்த பட்ஜெட் தான் அடுத்த 5 வருடத்திற்கான ரோடு மேப் என கூறப்படுகிறது.
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, முக்கிய அமைச்சர் பதவிகள் மற்றும் சபாநாயகர் பதவியைக் கேட்டு மோடி அரசை ஆந்திராவின் சந்திரபாபு நாயுடு , பீகார் நிதிஷ் குமார் கூட்டணி கட்சிகள் நிர்பந்தம் செய்வார்கள் என கருத்து நிலவியது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.
இந்த நிலையில், தற்போது ஆந்திர பிரதேசம் சந்திரபாபு நாயடு-வின் டிடிபி மற்றும் பீகார் நிதிஷ் குமார்-ன் ஜேடி(யு) கட்சியினர் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தங்கள் மாநிலங்களுக்கு பட்ஜெட் மூலம் சாதகமான அறிவிப்புகள், நிதியுதவிகளை வழங்க கண்டிஷன் போடப்பட்டு உள்ளனர்.
நிதிஷ் குமார் டிமாண்ட்: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பிஜேபி ஆட்சியின் இரண்டாவது பெரிய கூட்டணி கட்சியான, ஜனதா தளத்தின் (யுனைடெட்) நிதிஷ் குமார் தலைமையிலான பீகார் அரசு, கடந்த மாதம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடனான பட்ஜெட்டுக்கு முந்தைய சந்திப்பின் போது, பீகார் மாநிலத்தில் முக்கிய திட்டங்களுக்கு நிதியளிப்பதற்காக மத்திய பட்ஜெட்டில் ரூ.30,000 கோடி கோரியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சந்திரபாபு நாயுடு டிமாண்ட்: நரேந்திர மோடி தலைமையிலான பிஜேபி கூட்டணியில் மிகப்பெரிய கூட்டாளியான - தெலுங்கு தேசம் கட்சியின் என் சந்திரபாபு நாயுடு ஆந்திரப் பிரதேச மாநிலத்திற்கு அடுத்த சில ஆண்டுகளில் ரூ.1,00,183 கோடிக்கு மேல் நிதி உதவி கேட்டு கோரிக்கை விடுத்துள்ளதாக ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.
இரண்டு கூட்டணிக் கட்சிகளின் ஒருங்கிணைந்த நிதிக் கோரிக்கைகள், மத்திய அரசின் மொத்த வருடாந்திர உணவு மானிய தொகையான ரூ. 2.2 லட்சம் கோடியில் பாதிக்கும் அதிகம்.
இதனால் இந்த பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் கூட்டணி கட்சிகளின் நிபந்தனையை பூர்த்தி செய்யும் அதேவேளையில் பிஜேபி கட்சியின் கொள்கைகளையும், நிதி ஸ்திரதன்மை மற்றும் அதிகப்படியான மூலதன ஒதுக்கீட்டை எப்படி சமன் செய்வது என்பதில் பெரும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications