பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு 3வது முறையாக அட்சி அமைந்திருக்கும் வேளையில் 2025ஆம் நிதியாண்டுக்கான முழு பட்ஜெட் அறிக்கையை ஜூலை 24 ஆம் தேதி தாக்கல் செய்யப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த பட்ஜெட்டி குறித்துப் பல எதிர்பார்ப்புகள் மக்கள் மத்தியில் உள்ளது.
இதில் மிகவும் முக்கியமானதாக விளங்குவது பிஎப் எனப்படும் வருங்கால வைப்பு நிதிக்கான லிமிட்-ஐ அதிகரிப்பது குறித்துத் தான்.

நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் 2024 அறிக்கையில் மாத சம்பளக்காரர்களின் வருங்கால வைப்பு நிதியத்திற்கான (Provident Fund - PF) சம்பள உச்சவரம்பு உயர்த்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது, வருங்கால வைப்பு நிதிக்கான சம்பள உச்சவரம்பு ரூ.15,000 ஆக இருக்கும் நிலையில், இதை கடைசியாக 2014ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி இந்த வரம்பு திருத்தம் செய்யப்பட்டது. இந்த நிலையில் சம்பள உச்சவரம்பை 25000 ரூபாயாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பள உச்சவரம்பை ரூ.25,000 ஆக உயர்த்துவதற்கான கோரிக்கையை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை தயார் செய்துள்ளது. இது நடைமுறைப்படுத்தப்பட்டால், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி பங்களிப்பு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் ஊழியர்களின் சேமிப்பும் அதிகரிக்கும்.
வருங்கால வைப்பு நிதி விதிகளின்படி, பணியாளரின் அடிப்படை சம்பளம், அகவிலைப்படி (Dearness Allowance) அல்லது வேறு கொடுப்பனவு ஆகியவற்றைக் கொண்டு பிஎப் கணக்கிற்கான பங்களிப்பு நிர்ணயிக்கப்படுகிறது. ஊழியர்களின் சம்பளத்தில் கழிக்கப்படும் தொகை அனைத்தும் பி.எஃப் கணக்கிற்கு (PF Account) செல்லும். இதில் தொழிலாளர் மற்றும் நிறுவனம் தரப்பில் தலா 12% பங்களிப்பு செய்ய வேண்டும்.
ஊழியரின் முழு பங்களிப்பும் வருங்கால வைப்பு நிதி கணக்கிற்குச் செலுத்தப்படுகிறது. நிறுவனத்தின் பங்களிப்பில் 8.33% பகுதி ஊழியர் ஓய்வூதியத் திட்டத்திற்கும் (Employee Pension Scheme - EPS), மீதமுள்ள 3.67% பகுதி வருங்கால வைப்பு நிதி கணக்கிற்கும் செலுத்தப்படுகிறது.
இப்படி பிஎப் கணக்கிற்குச் செலுத்தப்படும் தொகை மாதத்திற்கு அதிகப்படியாக 15000 ரூபாய் மட்டுமே செலுத்த முடியும். இந்த அளவீட்டை 25000 ஆக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
தற்போது EPF திட்டத்தின் கீழ், கட்டாய பங்களிப்பு செய்ய வேண்டிய சம்பள உச்சவரம்பு மாதம் ரூ.15,000/- ஆக உள்ளது. இதன் அர்த்தம், இதைவிட அதிக சம்பளம் பெறுபவர்கள் விருப்பப்பட்டால் கூடுதலாகத் தானாக முன் வந்து இத்தொகையை முதலீடு செய்யலாம்.
ஆனாலும் கட்டாய பங்களிப்பு ரூ.15,000/- என்ற அடிப்படையில் மட்டுமே கணக்கிடப்படும். அதாவது ஊழியர்கள் VPF திட்டத்தின் மூலம் கூடுதலாக முதலீடு செய்தாலும் 12% ஐ விட அதிகமாக முதலாளி பங்களிப்பு செய்ய அவசியமில்லை.
இந்த 15000 ரூபாய் சம்பள உச்சவரம்பு கடந்த 2014ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1ம் தேதி திருத்தப்பட்டது. ரூ.15,000/- என்ற தொகை 2014ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் தற்போதைய வாழ்க்கைச் செலவுக்கு போதுமானதாக இல்லை என்பதால் பல நிபுணர்களும் தொழிற்சங்கங்களும் இந்த சம்பள உச்சவரம்பை உயர்த்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
எனவே தான், 2024ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் இந்த சம்பள உச்சவரம்பு உயர்த்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஆனால் இது உயர்த்தப்பட்டால் கையில் கிடைக்கும் சம்பளத்தில் கணிசமான பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications