மோடியின் 3.0 ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களும் அதிகம் எதிர்பார்த்துக் காத்திருக்கும் முக்கியமான விஷயம் பட்ஜெட். பிப்ரவரி மாதம் இடைக்கால பட்ஜெட் அறிவிக்கப்பட்டாலும், புதிதாக அமைந்துள்ள NDA கூட்டணி ஆட்சி 2025 ஆம் நிதியாண்டுக்கான முழு பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்ய உள்ளது.
மோடியின் 3.0 ஆட்சியில் நிர்மலா சீதாராமன் 2வது முறையாக நிதியமைச்சர் பொறுப்பில் நியமிக்கப்பட்டு உள்ள நிலையில், திங்கட்கிழமையே தனது பணிகளைத் துவங்கி அதிரடி காட்டினார். இதேவேளையில் இடைக்கால பட்ஜெட் அறிக்கையை அடிப்படையாக வைத்து முழு நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தயாரிக்கும் பணியில் நிதியமைச்சரும், நிதியமைச்சகமும் களமிறங்கியுள்ளது.

தற்போது வெளியாகியுள்ள தகவல் படி மோடி 3.0 அரசு இந்த பட்ஜெட் நாடாளுமன்ற கூட்டத் தொடரை 2 முறையில் நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது. அதாவது நாடாளுமன்ற கூட்டத் தொடரைத் தொடர்ந்து நடத்துவதா அல்லது இரண்டாகப் பிரித்து நடத்துவதா என்ற ஆலோசனை நடந்து வருகிறது.
இதுகுறித்த முடிவை அடுத்த சில நாட்களில் மத்திய அரசு நடத்த உள்ள வேளையில், இரண்டாக உடைக்கப்பட்டால் முதல் பகுதியில் நன்றி உரையும், 2ஆம் பாதியில் பட்ஜெட் தாக்கல்-ம் இடம்பெறும்.
18வது லோக்சபாவின் முதல் அமர்வின் மற்றொரு முக்கியமான அம்சம் என்னவென்றால் சபாநாயகர் தேர்தல், இந்த முறை பொது தேர்தலில் பிஜேபி பெரும்பான்மை பெறவில்லை என்றாலும் பாஜக சபாநாயகர் இடத்தை வைத்துக் கொள்ள விரும்புகிறது. பிஜேபி-யின் கனவு நிறைவேறுமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.
ஆப்ஷன் 1: இந்த நிலையில் நாடாளுமன்ற கூட்டத்தொடரை இரண்டு பகுதிகளாகப் பிரித்தால், முதல் அமர்வு ஜூன் 24 முதல் ஜூலை 3 வரை எட்டு அமர்வுகளைக் கொண்டிருக்கும். இக்காலகட்டத்தில் ஒரு தற்காலிக சபாநாயகர் நியமிக்கப்படுவார், அவர் பொதுவாக மக்களவையின் மூத்த உறுப்பினராகச் செயல்பட்டுக் கூட்டத்தொடரை வழிநடத்துவார்.
முதல் இரண்டு நாட்களில், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களுக்கு இந்த தற்காலிக சபாநாயகர் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். இதை தொடர்ந்து ஜூன் 26ம் தேதி நாடாளுமன்ற சபாநாயகரைத் தேர்வு செய்யும் நாள் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஜூன் 27 ஆம் தேதி இரு அவைகளிலும் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றுவார். மீதமுள்ள நான்கு நாட்கள் - ஜூன் 28 முதல் ஜூலை 3 வரை - ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடத்தப்படும். இந்த காலகட்டத்தில் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கையை ஜூலை 3 ஆம் தேதி சமர்ப்பிக்கும். அதன் பிறகு ஒரு இடைவெளி இருக்கும்.
இதன் இரண்டாம் பாகம் ஜூலை 22-ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது மூலம் 2ஆம் கட்ட நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கும் என தெரிகிறது. 2ஆம் கட்டத்தில் 15 அமர்வுகள் கொண்ட இந்த செஷன் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை நடைபெறும்.
ஆப்ஷன் 2: ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 2 வரை 33 நாட்களில் 24 அமர்வுகளைக் கொண்ட ஒற்றை பட்ஜெட் கூட்டத்தொடராக நடக்கும். ஜூலை 1-2 தேதிகளில் எம்.பி.க்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டும். ஜூலை 3ம் தேதி சபாநாயகர் தேர்வு நடைபெறும்.
இதேபோல், குடியரசுத் தலைவர் உரை ஜூலை 4ஆம் தேதியும், மத்திய பட்ஜெட் ஜூலை 8ஆம் தேதியும் தாக்கல் செய்யப்படும். ராஜ்யசபா ஜூலை 4ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 2ஆம் தேதி முடிவடையும். இதோடு ஜூலை 5, ஜூலை 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நன்றி உரை தாக்கல் செய்யப்படும்.
இந்த நாடாளுமன்ற கூட்டத்தில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் பட்ஜெட் அறிக்கை தான், இந்த பட்ஜெட் அறிக்கை தான் அடுத்த 5 ஆண்டுகளுக்கான நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதார போக்கிற்கான ரோடு மேப் ஆக இருக்கும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications