பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள இடைக்காலப் பட்ஜெட் அறிக்கையில் பொருளாதார வளர்ச்சியைத் தொடர்ந்து வளர்ச்சி பாதையில் வைக்க உள்கட்டமைப்புத் துறை உட்பட முக்கியமான துறைகளில் அதிகப்படியான மூலதனத்தைச் செலுத்த முன்னுரிமை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசு நடப்பு நிதியாண்டுக்கு மூலதனச் செலவினத்திற்குச் சுமார் 10 லட்சம் கோடி ரூபாய் என்ற பெரும் தொகையை எப்போதும் இல்லாமல் அதிகப்படியான தொகையை ஒதுக்கீடு செய்தது.

இதன் தொடர்ச்சியாக இந்தப் பட்ஜெட் திட்டத்திலும் பொருளாதாரத்தில் பல மடங்கு வளர்ச்சி வாய்ப்புகளைக் கொண்டிருப்பதால் இதைப் பயன்படுத்திக்கொள்ளவும், தனியார் முதலீட்டை ஈர்க்கும் வகையில், மூலதனச் செலவினங்களுக்காக அதிகப்படியான நிதி ஒதுக்கீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பட்ஜெட் எதிர்பார்ப்புகள்: வரவிருக்கும் பட்ஜெட்டில், பொருளாதார வளர்ச்சியை உயர்த்துவதற்காக, குறிப்பாக உள்கட்டமைப்புத் துறையில், மூலதனச் செலவினங்களை அதிகரிப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது, PTI தெரிவித்துள்ளது.
மத்திய அரசு கோவிட்-19க்குப் பிந்தைய பட்ஜெட்டுகளில் மூலதனச் செலவினங்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது, இது பொருளாதார வளர்ச்சிக்கு பெரிய அளவில் உதவியது. கடந்த மூன்று ஆண்டுகளில் உலகில் பிற பெரிய பொருளாதார நாடுகளைக் காட்டிலும் அதிகமாக இந்தியா 7 சதவீத வளர்ச்சி விகிதத்தை எட்டியுள்ளது.
பிடிஐ அறிக்கையின்படி, மத்திய அரசு மூலதனச் செலவினங்களுக்கு 2020-21ல் ரூ.4.39 லட்சம் கோடி, அடுத்த ஆண்டில் 35 சதவீதம் அதிகரித்து ரூ.5.54 லட்சம் கோடி, மேலும் 2022-23ல் 35 சதவீதம் அதிகரித்து ரூ.7.5 லட்சம் கோடியை எட்டியது. 2023-24ல் இது 37.4 சதவீதம் அதிகரித்து, 10 லட்சம் கோடி ரூபாயை எட்டியது.
இந்த அளவீடு தொடர்ந்தால் மத்திய அரசு 2024-25 ஆம் நிதியாண்டில் 13 முதல் 14 லட்சம் கோடி ரூபாய் அளவிலான நிதியை ஒதுக்கீடு செய்ய வாய்ப்புகள் உள்ளது. ஆனால் சந்தை கணிப்பின் படி இந்த ஆண்டு 10.2 லட்சம் கோடி ரூபாய் அளவிலான நிதியை ஒதுக்கீடு செய்யும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications